கேபிள் சங்கர் மற்றும் பரிசலின் புத்தக வெளியீட்டுக்காக கே.கே நகர் செல்ல நான் ஆயத்தமான நேரம் எனக்கு உடல் முடியவில்லை காலையிலிருந்தே ஜலதோஷமும், தும்மலுமாய் படுத்திக்கொண்டிருந்தது. ஒரு வழியாய் மாத்திரைகள் முழுங்கி வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.
------------------------------------------------------------
வலது ஓரம் உண்மை தமிழன், ரோமியோ, சங்கர் தல அஜீத் சாரி திரு.நர்சிம், அன்புடன் மணிகண்டன்.
வலமிருந்து இரண்டாவதாக திரு.வீடுதிரும்பல் மோகன் குமார்.
எதையோ காதலிப்பவர்கள்தாம் நாம், கேபிள், பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த நண்பர்கள் கூட்டம் அதை நிரூபித்தது. வழக்கம் போல இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படித்தான் பதிவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்:-). இதற்கு பகடியாக பின் நவீன பதிவு ஏதாவது வரலாம். எனவே அவர்கள் இதை படிக்க தேவை இல்லை.
-----------------------------------------------------------
'கதை இளவரசு 'விசா'. திரு.தராசு
ஜ்வரோம் சுந்தர்
ரோமியோ, நான், அண்ணன் உண்மை தமிழன்
பாப்ஜி தண்டோரா, முரளி, பட்டர் ப்ளை சூர்யா
நர்சிம், மணிகண்டனுடன் 'இளைக்காத' தளபதி கார்க்கி..
பாடி வட்ட மேம்பாலம் தாண்டி இறங்கும்போது செல்போன் சிணுங்கியது வண்டியை ஓரம் கட்டி பேச முயலும்போது லைன் கட். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வண்டியை கிளப்பும்போது
"ஹலோ' ஒரு அழகு பெண் வடநாடு, பதுமை, அடடா ஹிந்தி தெரியாதே.
"எஸ்"
கேன் யு கிவ் மீ அ லிப்ட்"
"ஷ்யூர்" வாயில் வார்த்தை வந்தாலும் மனசில் ஏதோ உதைத்தது. அந்த பெண்ணும் வண்டியில் உட்கார்ந்தாள்.
"ப்ளீஸ் கோ பாஸ்ட்" உட்கார்ந்தவுடன் சொன்ன வார்த்தை. எதுக்கு இவ்வளவு அவசரம்? எங்கே போகவேண்டும்? ஆங்கிலத்தில் கேட்டேன், வண்டி திருமங்கலம் தாண்டி கோயம்பேடு நெருங்கும்போது இடித்துவிடுவது போல ஒரு ஆட்டோ அதிலிருந்து நாலு பேர் தடி தடியாய் இறங்கினார்கள்
------------------------------------------------------------
திரு.டி.வி.ராதாகிருஷ்ணன் ஜெட்லி, சங்கர்
மயில் ராவணன்
திருவாளர்கள். குகன், அகநாழிகை வாசு, பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, பரிசல்
எல் கே ஜி குழந்தைகளுக்கும், நம்மை போன்ற பதிவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை:) டீச்சர் இல்லாத வகுப்பறை போலவே பதிவர்கள் கூடும் இடம் இருக்கிறது. என்னவோ ஒரு அன்பு, ஈடுபாடு, சந்தித்ததும் சொல்லொனாத ஒரு மகிழ்ச்சி. எதிர்பார்த்தது போல இடம் பத்தவில்லை, புழுக்கம், சல சலப்புகள், தாமதம், ஆனாலும் என்ன? ஒரு நட்பு, ஒரு மனிதர்க்கான காதல் இங்கே காணக்கிடைத்தது. பரிசல் ஆகட்டும், கேபிள் ஆகட்டும் நாளை காலை இந்த நிகழ்வை பற்றி அசைபோட நினைவில் ஏதும் இருக்காது என்றே தோன்றுகிறது (அவ்வளவு படபடப்பு கண் மூடி திறப்பதற்குள் நிகழ்ச்சி முடிந்ததுபோல). எல்லோருக்கும் ஒரு பரபரப்பு, நிறைய அறிமுகங்கள், புதிய நட்புகள், மனித காதல். ஒரு சேர நிறைய மனிதர்களை காதல் செய்யும் மனிதர்கள் ஒரே அரங்கினில் இருக்க நிகழ்ச்சி நிறைவாய் இருந்தது.
--------------------------------------------
"ஏய் யார்றா இவ?"
" ஹலோ மறியாதையா பேசு. இவ என் அத்த பொண்ணு."
"அடிங்.. யாருகிட்ட?, உட்டேன்னா மூஞ்சி எகிரிடும்,"
எனக்கு உதறல் எடுத்தது.
" என்னடா இவன்ட்ட பேசிக்கினு மண்டையிலே ஒண்ணு போட்டு பொண்ண தூக்கு," ஆஹா பொண்ணு தான் பிரச்சனையா?" "அவள் என்னை இறுகி கட்டியவாறு
"பிளீஸ் ஹெல்ப் மீ,"
37 வயது யுத் நான். சண்டை? ஹும்ம் வாய்ப்பே இல்லை, சட்டென்று வண்டியை செல்ப் ஸ்டார்ட் செய்து ஆட்டோவை கடந்து சிட்டாய் பறந்தேன், அசால்ட்டாய் என்னை நினைத்தது அவர்கள் தவறு! ஒரு அழகான பெண் பில்லியனில் இருந்தால் சால்ட் கூட அசால்ட் ஆகும், ரிவர் வியு மிரரில் ஆட்டோ ஒரு புள்ளியாய் தெரிந்தது.
----------------------------------------------
விருந்தினர் துளிகள்::
திரு. பிரமிட் நடராஜன்..
கேபிள் சங்கர் தந்தையை நினைவு கூர்ந்தார். சினிமாவே வேண்டாம் என்று சொல்லியும் மீறி கேபிள்ஜி சினிமா சார்ந்து இருந்ததோடு, அதனுடே ஒரு தேடலை கொண்டிருப்பதையும், வந்த நண்பர்கள் கூட்டம் கண்டு பெருமிதம் கொள்வதாயும் சொன்னார். எல்லோரும் தமிழ்த்தாய் வாழ்த்து சேர்ந்து பாடியது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.:)
திரு.அமுதன் தமிழ்ப்பட இயக்குனர்::
தமிழ்ப்படம் முதல் காட்சி திரையிட்டு வெளியில் வந்ததும் டென்ஷனுடன் கூகிளில் படம் பற்றி ஏதேனும் ரெவியு வந்திருக்கிறதா என்று பார்க்க தமிளிஷ் பக்கத்தில் படத்தை பற்றி பதிவர்கள் சிலாகித்த விஷயம் படித்து படம் வெற்றி என்ற நிம்மதி கிடைத்ததையும், பதிவர் விமர்சனங்கள் படம் பார்க்க தூண்டுவது போல எழுதும் பொறுப்பையும் (கதையை போட்டு உடைக்காமல் ) சினிமாவில் பதிவுலக தாக்கத்தையும் புகழ்ந்தார்.
திரு.அஜயன் பாலாவுக்கு பொன்னாடை / பின் நவீனத்துவம் தலைவர் தண்டோரா
ஆட்டோ கிராப் தள்ளு முள்ளு :))
திரு.அஜயன் பாலா..
பேசும்போது சில இடையூறுகள் இருப்பினும் அவர் உள்ளத்திலிருந்து சொல்லிய கருத்து மிக முக்கியமானது. அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் தனது எழுத்தை அச்சில் பார்க்க அவர் பட்ட கஷ்டங்கள், வேதனைகள், இன்றைக்கு ப்ளாக்-கில் எவர் வேண்டுமானாலும்
தனது எழுத்தை உடனே வெளியிடும் வசதி, அதன் தாக்கம், நமது எழுத்தை வெளியிட யாரோ தீர்மானிக்கும் அதிகார போக்கிலிருந்து விடுதலை, எழுத்துக்கான ஒரு அங்கீகாரம், நிறைய பேர் கூர்ந்து கவனிக்கும் ( அதிகார வர்க்கமோ, பெரிய தலைகளோ) ஒரு விஷயமாக பதிவர்கள் ஆனது போன்றவற்றை உணர்ச்சிகரமாய் சொன்னார். கேபிள்ஜியின் சில கதைகள் தம்மை கவர்ந்ததாகவும், பல கதைகள் சினிமாவின் பார்வையோடு எழுதப்பட்டிருப்பதையும், சினிமாவின் தேடல்களில் தோல்விகளின் வடிகாலாக அவரின் சிறுகதைகள் அமைந்திருக்கக்கூடும் என்றார். பதிவர்கள் ஒரு மைய்யப்புள்ளியில் சமூகத்திற்கான சில விஷங்கள் எழுதும்போது நிச்சயம் அது கவனத்துக்குள்ளாகும் என்று வலியுறுத்தினார்.
ஜெட்லி, புலவன் புலிகேசி, ரோமியோ
வந்த நண்பர்கள்
அகநாழிகை திரு.வாசுதேவன், வழக்கம் போல நண்பர்களை வாழ்த்தி பேசினார். பின்னர் கேபிளும்(பேசும்போது வெறும் காத்துதான் வந்தது :), பரிசல் அவர்களும்(ஒரு டீ கடை தத்துவம் சொன்னார்-சூப்பர் :), பப்ளிஷர் திரு.குகனும் நன்றி சொல்ல, கார்க்கியின் தத்துவத்தோடு (நானும் நர்சிம் எல்லா பதிவுகளையும் படிக்கிறோம் அதற்காக ஏன் பின் நூட்டம் போடலைன்னு கேக்காதீங்க:-) தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, அண்ணன் உண்மைத்தமிழனின் சிறிய வாழ்த்துரையுடன், தேசிய கீதத்தில் முடிந்தது. மீண்டும் (வழக்கம் போல) பதிவர் மீட்டிங் ஆரம்பித்தது. :))
நான் சந்தித்த பதிவர்கள்: திருவாளர்கள்.T.V.ராதாகிருஷ்ணன், அத்திரி, அதி பிரதாபன், அதிஷா, நர்சிம், கார்க்கி, விசா, தராசு, அன்பேசிவம் முரளி, ஈர வெங்காயம், மோகன் குமார், அன்புடன் மணிகண்டன், உண்மை தமிழன், மயில் ராவணன், பட்டர்ப்ளை சூர்யா, புலவன் புலிகேசி, ரோமியோ, M.M.அப்துல்லா, காவேரி கணேஷ், ஜெயமார்த்தாண்டன், வெள்ளிநிலா சர்புதீன், சங்கர், ஜெட்லி, வெயிலான், தண்டோரா, சிவராமன்.
மறக்க முடியாத காதலர் தினம். வாழ்க நண்பர்கள்.
பி,கு.:-
நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கரண்ட் போனது - இசைஞானி போல இரண்டு பேரும் எழுத்து ஞானிகளாக வருவார்கள் (சோசியம்) என்பதால் இருவரிடமும் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டேன். எனது கவிதைகளை படித்து எனக்கு பரிசளிக்க கண்டிப்பாய் வருவேன் என்று சொன்ன ஹாலிவுட் பாலாவை எவ்வளவு தேடியும் காணவில்லை!.
சென்னை பதிவர் சங்கம் ஒன்று விரைவில் உருவாகும் என்று தெரிகிறது.
ப்ளாக்-கில் பதிவுகள் போடுவதை நிறுத்தி இனி பதிவுகளை SMS மூலமாக அனைவருக்கும் அனுப்ப இருப்பதாக அண்ணன் உண்மைத்தமிழன் சொன்னார் (ஆலோசனை திரு.அத்திரி)
அடுத்த தமிழ்மண நட்சத்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு.சுரேகா.
------------------------------------------
"வேர் யு வான்னா கோ" இப்போது இருவருடைய டெம்பரேச்சரும் ஒன்றாகி இருந்தது.
அவள் இன்னும் என்னை இறுக பிடித்திருந்தாள்.
"ஐ டோன்ட் நோ.. ஆனா கொஞ்சம் வண்டிய நிறுத்துங்கள்."
என்ன இவளுக்கு தமிழ் தெரியுமா?
"என்ன அப்படி பாக்கறீங்க? எனக்கு தமிழ் தெரியுமான்னா? மிருதுளா தெரியுமா உங்களுக்கு?" இப்போது எனக்கு வியர்த்தது. இவளுக்கு எப்படி மிருதுளா?
"உனக்கு எ.. ப்.. ப.. டி.. மிருதுளா?"
பதுமை சிரித்தது..
இப்போது அவள் சிரிப்பு ரசிக்கும்படி இல்லை.
"நீ அவளுக்காக கொலை செய்தது கூட தெரியும்..."
"மை காட்..."
இப்படி சொன்ன பெண்ணை நான் என்ன செய்தேன்????
அவள் யார்???
எதற்கு துரத்தப்பட்டாள்??
அது என்ன கொலை??
யார் ? மிருதுளா??
-படியுங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது கேபிளின் லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும், மற்றும் பரிசலின் டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்.. ..:))
----------------------------------------
கிடைக்குமிடம்:-
நாகரத்னா பதிப்பகம்
3A, டாக்டர் ராம் தெரு,
நெல்வயல் நகர், பெரம்பூர்,
சென்னை - 11.
nagarathna_publication@yahoo.in
Price: Rs.50/- EACH.
நன்றி வணக்கம் :))
51 comments:
தலைவரே அருமையான தொகுப்பு அசத்திடிங்க, அஜயன் பாலா பேசும் போது நிறைய குறிக்கீடுகள், அது எனக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தது அவரது பேச்சை ஒழுங்காக கேட்க முடியவில்லை என்கிற ஆதங்கம். அதை எல்லாம் கடந்து கூர்மையா நீங்க கவனிச்சி எப்படி எழுதுனிங்க.
ஷங்கர் ஜீ கலக்கல்....சுப்பர்
அந்த கதையை ஆங்காங்கே இடைச்செருகல் பண்ணி இருந்த விதம், ஐ லைக் இட். நன்றி ஷங்கர்.
தல சூப்பரா வர்ணனை கொடுத்திருக்கீங்க...கூடவே ஒரு ஸ்டோரியையும்சேர்த்து புத்தக விமர்சணத்தையும் முடிச்சிட்டீங்க...
நிகழ்ச்சி பற்றி எழுதியமைக்கு நன்றி ஷங்கர் . நான் எடுத்த புகை படங்களில் நான் இல்லை. இங்கு தான் பார்க்கிறேன். நன்றி.
உண்மைதான் சங்கர் நல்ல படங்கள் நல்ல பதிவு
ஒரு வார்த்தை கூட விட்டுப்போய் விடாமல் சுருக்கமாகவும் நச்சென்றும் தொகுத்தது அழகு உங்கள் படத்தில் நானும் என் மகனும் இடம் பெற்று இருக்கிறோம்
//http://4.bp.blogspot.com/_BWVBzjJQMwA/S3hjd4KESSI/AAAAAAAAAVQ/UCv-3Xxv9PU/s1600-h/DSC02284.JPG//
thanks Shangkar
யோவ் யோவ் யோவ்.. இனிமேல எல்லோரும் நீங்க சொல்ற அடைமொழியோடுத்ஹான் என்னை பத்தி எழுத போறாங்க..
உங்களுக்கு நரகம்தான் .. :((
புத்தகத்தில் உள்ள கதைகளில் இருந்து சிறு பகுதியும், புத்தக வெளியீட்டு விழாவின் தொகுப்பும், நிகழ்ச்சியின் புகைப்படங்களும், பதிவர் சங்கம் ஆரம்பிக்கவிருக்கும் தகவலும் - என்று களை கட்ட எழுதி விட்டீர்கள், ஷங்கர். மிக்க நன்றி.
ஆகா...சடச்சுட பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா..நிறைய பேசணும்னு நெனச்சேன்..நேரம் போதவில்லை.நம்மளையும் வரலாற்றிலே பதிவு செய்த்துக்கு நன்றி.சின்ன கேபிள் வார்த்தைகள் தான் இன்னும் காதுல ஒலித்துக்
கொண்டிருக்கிறது.
shankar i send ur link to my relatives ....good sharing ..
thanks..
நல்ல படங்கள் நல்ல பதிவு
அடடடா... ஐ மிஸ்ட்.....
அழகா சொல்லியிருக்கீங்க பகிர்வு சுவாரஸ்யம்ண்ணா....!
புத்தகத்தை பற்றி பேசிய ஒரே நபர் அஜயன் பாலாதான் ஆனால் அவர் முழுமையாக பேசமுடியாமல் போனதும் பார்வையாளர்களிடம் பொறுமையில்லாமல் போனதும் துர்ரதிஷ்டம் தான். நீங்கள் அவரின் பேச்சின் மையத்தை அழகாக தொகுத்துவிட்டீகள் படங்களும் தொகுப்பும் நிறைவாக இருக்கிறது.
அண்ணே அசத்தலான தொகுப்பு.உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
கட்டுரை.. கதை... படங்கள்....நன்றாக இரு ....து
// ஆட்டோ கிராப் தள்ளு முள்ளு :))
//
கேபிள் அண்ணன்கிட்ட அமௌன்ட் வாங்கியாச்சா??
எனக்கும் பேமன்ட் அனுப்பி வைங்க...
ஷங்கர்.. அருமையான கம்பைலிங்.. நிகழ்வையும், கதைகளையும் கலந்து கட்டி அடித்த விதம் அருமை
எங்களால் பார்க்க முடியாததை கண் முன்னே நிறுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஷங்கர்.
சங்கர் அருமையாக தொகுத்துவிட்டீர்கள்.
புத்தக வெளியீடு என்றில்லாமல் நிறைய பேர் சினிமா சார்ந்தே பேசியது துர்ரதிஷ்டம். புத்தகத்தை பற்றி யாரும் பேசவில்லை அஜயன் பாலாவை தவிர. புத்தகங்களை பற்றி பேசாமல் அந்த புத்தகங்களே தங்களை பற்றி பேசிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள் போலும். பரிசலின் கதைகளை தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். கேபிள் நிறைய படிச்சாச்சு. பிரிதொரு பதிவில் எழுதுகிறேன். உங்கள் புகைப்பட தொகுப்பும் நிகழ்வை பற்றிய குறிப்புகளும் அருமை. உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. அதனோடு மேலும் மூன்று பேரை நேரில் பார்த்ததில் மகிழ்ந்தேன். (இது தான் நான் வந்த முதல் பதிவர் சந்திப்பும் கூட.)
1. தண்டோரா..
2. உண்மை தமிழன்.
3. கேபிள் சங்கர்.
WISHES!
அழகான கவரேஜ்...உங்களைப் போலவே :)
நான் என்னத்த புதுசா சொல்லப் போறேன், அசத்துறீங்க :)
நடுவில் வந்த கதை, நான் சுட்டிக்காட்டிய அந்தப் பெண் பின்னால் நீங்கள் போனதால் நடந்த உண்மைக்கதையோ என்று நினைத்தேன் (உங்க மனைவி ப்ளாக் படிப்பாங்கல்ல?) :)
அன்பு சகோதரரே! எழுத்து முகம் மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு பதிவர்களின் திருமுகத்தையும் காட்டிய உங்கள் பதிவு அழகு.இடைச்செருகலான சிறுகதை முதலில் காதல் தினத்தன்று நிஜமாகவே இப்படி ஒரு அனுபவம் போலும் என்று தான் நினைத்தேன்.புகைப்படம்,பதிவு....Simply superb
ரெண்டு கதையையும் கலந்து கட்டி சூப்பரா நேற்றைய நிகழ்ச்சியையும் பகிர்ந்திருக்கீங்க.. கலக்கல்.. கார்க்கியின் அடைமொழி தூள்.. ;)
//இளைக்காத' தளபதி கார்க்கி.. //
நல்ல பட்டம்தான் :)
கதையா.. நம்பிட்டோம். அஜயன் பாலா பேச்சை பதிந்ததற்கு நன்றி பாஸ்.
ada.. intha yugthi nallaaruke..!!! superu..!
சின்ன அம்மினியையும், மணிகண்டனையும் உடனே நாடு கடத்த உத்தரவிடுங்கள் மன்னா
சின்ன அம்மணி ஏற்கனவே வேறு நாட்டில் தான் இருக்கிறார்கள் இளவரசர் கார்க்கி அவர்களே :)
அண்ணா கலக்கிட்டீங்க... போட்டோக்களும் அருமை... அப்புறம் தல அஜித்துக்கு கிழடு தட்டி ரொம்ப நாளாகுது... நம்ம நர்சிம் அமுல் பேபிங்க
புதுமையான ரிப்போர்ட்
Enna kodumai ithu?? Naan eppa parisu kodukkarathaa sonnen??? :) :)
athuvum ungga kavithaikku??? ;) ;)
ippadiyellaam photo paarthaa Ooril illathathu... romba kastamaa irukku.
(Sorry NHM Writer illai)
=====
இந்த உத்திக்கு பேர்தான் பேரலல் “கட்டிங்” அசத்தல். அப்புறம் நீங்க நடிகனாகும் வாய்ப்பு வரலாம்!
உங்க தொகுப்பு வெரி இண்டரஸ்டிங் சார் !
நேரில் பார்த்த மாதிரி நல்லாவே இருக்கு..
நேரில் பார்த்த மாதிரி நல்லாவே இருக்கு..
அது என்ன பலா பட்டறை ஷங்கர் உங்க ப்லாக் பேரை உங்க பேர்ல மாத்திட்டீங்களா ..? ஏதோ ம்யூசிக்கோட கோட்ஸ் எல்லாம் இருந்துச்சா ...
Maddy maddy hoho maddy nu ungka pathivuellam paarththu kathula ore song than poongka...!!
நானும் தேடித்தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க முடியல சரி வரலையோன்னு நினைச்சேன்
காதலர் தின பதிவை வைத்து யூத் மாடின்னு (மாதவன்) சொன்னேன் ஷங்கர்
கலக்கல்.. வர முடியாத ஏக்கம் தீர்ந்தது.. நன்றி அண்ணா..
நேர்ல பாக்காத குறைய தீர்த்து வச்சி இருக்கீங்க...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...
என்னா சார்.. எங்களையெல்லாம் விட்டுடிங்க..
அடுத்த பதிவர் மா நாட்டுக்கு ,கத்துகுட்டி எங்களையும் சேர்த்துக்குங்க..
எல்லா போட்டோவும் சூப்பர் சார்..
நாங்கள் எல்லாம் தாராபுரத்திலிருந்து வரலாம்ன்னு நெனைச்சோம்.ஏற்படுகின்ற வேலைகள் வரமுடியாமல் தடுத்து விடுகிறதே.உங்கள் பதிவு மேலும் ஏக்கத்தை உண்டு பண்ணி விட்டது.
சுவையான பகிர்வு ஷங்கர்.பலரின் முகம் கண்டு சந்தோஷம்.
மேடியைக் கிழவன் என்று சொன்ன பலா பட்டறை ஷங்கரை சென்னை ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்
நல்ல பகிர்வு.. உங்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டதே..
ரோமியோ - அவரோட ஆதங்கம் பதிஞ்சிடிச்சி. நன்றி ரோமி.:) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
றமேஸ் - நன்றி றமேஸ்..:))
சை.கொ.ப. - மிக்க நன்றி நண்பரே :))
புலிகேசி - அதே அதே :)) நன்றி புலவரே :) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
மோகன் குமார் - மிக்க நன்றி நண்பரே :)) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
தேனம்மை லக்ஷ்மணன் - அடுத்தமுறை சந்திக்கும்போது பேசுவோம் சகோதரி..:))
கார்க்கி - நர்சிம் சொர்க்கம் அலாட் பண்றாராம்..:)) உண்மைத்தமிழன் அண்ணனுக்கு பக்கத்துல உட்கார்ந்து உண்மை வந்திருச்சி சகோ..:) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
சித்ரா- மிக்க நன்றி சகோதரி :))
மயில் - ஆமாம், மிக்க நன்றி நண்பரே :) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
தேனம்மை லக்ஷ்மணன் - இதுக்கு போய் என்னங்க..!
T.V.ராதாகிருஷ்ணன் - நன்றிங்க :)) சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
வசந்த் - நன்றி வசந்த் :)) என்னது அண்ணாவா?
ஜெ.ஜெயமார்த்தாண்டன் - வாங்க நண்பரே, ஆமாங்க , மிக்க நன்றி சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
அத்திரி - வாங்க நண்பரே, மிக்க நன்றி சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
வெள்ளிநிலா - மிக்க நன்றி சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
ஜெட்லி - வந்த உடனே :)) மிக்க நன்றி ஜெட்லி, சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
கேபிள்ஜி - நன்றி தலைவரே :)) கலக்குங்க :)
நாடோடி - மிக்க மகிழ்ச்சி..:))
விசா - வாங்க நண்பரே, ஆமாங்க அப்படியா? இனி அடிக்கடி சந்திப்போம், மிக்க நன்றி சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
எம்.எம்.அப்துல்லா - உங்களைப்போல வருமா ? :)) மிக்க நன்றி நண்பரே சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
சங்கர் - கார்க்கி இவருக்கு ஒரு சாபம் பார்சல் ..:)) நன்றி சங்கர்.:)
க.நா.சாந்திலெட்சுமணன் - மிக்க நன்றிங்க.:))
அன்புடன் மணிகண்டன் - வாங்க நண்பரே, கார்க்கி காட்ச், மிக்க நன்றி சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
சின்ன அம்மிணி - கார்க்கி இன்னொரு காட்ச் - மிக்க நன்றிங்க:))
நர்சிம் - வாங்க நண்பரே சந்தித்ததில் மகிழ்ச்சி! அப்ப கதை இல்லையா? மிக்க நன்றி.:)
கலகலப்ரியா - மிக்க நன்றி :))
கார்க்கி - வேண்டாம் அமைச்சர் பெருமானே ..:))
மோகன் குமார் - மன்னிக்க இளவரசே..:)
அசோக் - சரிதான் :)) நன்றிங்க:)
ரிஷபன் - நன்றி நண்பா:))
ஹாலிபாலி : :( ஆமா தல ஒரு விசிட் போடறது :))
தண்டோரா : கட்டிங் பிடிச்சிதா தல! என்னது நடிகனா நானா ? அமைதிப்படை பார்ட் - 2 ராஜராஜ சோழன் பராக் ..:)
ஜனார்த்தனன் - வாங்க ரொம்ப நன்றிங்க :))
தேனம்மை - மேடியா? சரிங்க ம்யூசிக் நல்லா இருக்குங்களா?
க.இராமசாமி - வாங்க மிக்க நன்றி.:))
திவ்யாஹாரி : ஏம்மா வரல ? அடுத்தமுறை வரப்பாருங்க..:)) நன்றிம்மா.
கமலேஷ் - பதிவே உங்கள மாதிரி பார்க்க முடியாதவங்களுக்குதான்..:))
பட்டாபட்டி - எப்போ வேணுமானாலும் வரலாம் - அடுத்த மீட்டிங் சத்தியமூர்த்தி பவன்லதான்.:)) நன்றி நண்பரே :)
தாராபுரத்தான் - அடுத்த முறை வாங்க நண்பரே :))
ஹேமா - மிக்க மகிழ்ச்சி சகோதரி :))
தேனம்மை - நீங்கதான் தலைவியா ?? :))
உழவன் - அட வந்திருந்தீங்களா?? அடுத்த முறையாவது பேசுவோம். மிக்க மகிழ்ச்சி.:))
நான் மயிலாடுதுறை அண்ணா.. அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பா கலந்துக்குறேன் அண்ணா.
படங்களுடன் மிக நல்லதொரு பகிர்வு!
Post a Comment