பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..னக்கான
காதலின்
வரங்களும்
சாபங்களும்
உன் விழி ஓரத்தில்
உன் உதடோரத்தில்

அடியே கூறாமல் சன்யாசம்
கொல்கிறது...

-----------------

வாசமும், சுவையும்
சாப்பிட்ட பின்
எங்கு சென்றதென
காலைக்கடன்களில்
தலைகீழ் கேள்விக்குறியாக
நாசியின் யோசனை..

------------------

நிரம்பிவிடு.
தளும்புகிறது
மனக்குடுவை

----------------


நீ கிழிந்து தொங்கும்போதும்
என் கேள்வி எப்போதும்
உன் முகம் பற்றியதாகவே
இருக்கும்..

எனக்கேது சுருக்கங்கள்
நரைமுடி, கை நடுக்கம்
இடமதை வலமாய் காட்டும்
நிலைக்கண்ணாடி நானுடைத்து
நெடுநாட்கள் ஆகிறது..

---------------------------------

போய் சேர்ந்துவிடு கிழவி
ஒத்திகை பார்த்துப் பார்த்து
கண்ணெல்லாம் வலிக்கிறது,,

----------------------------------


நிர்வாணமாய் நீ என் அறையில்
ஓடியதை ரசிக்க நானென்ன
ஆண் எலியா..?
ஒரே அடி....
விடிந்தபின் குஞ்சுள்ள காக்கைக்கு
கடவுளின் பரிசு..
செத்த எலியின் குட்டிகளா?
அது கடவுள் பாடு...

இரவின் தியானத்தில்
கடவுளை தேடுகையில் 
இதென்ன அபத்தக் கேள்வி?? 
.

36 comments: