பலா பட்டறை: உச்சீவி..

உச்சீவி..ல கோடி ஆண்டுகள் முன்
மண்ணிற் புதைந்த திட உயிர்களின்
திரவம் உறிஞ்சி மண்ணுள் இருந்த
கனிமங்களின் சேர்க்கையில் அரை வட்ட
கடிவாளம் முறுக்கி லாடமில்லா
புரவியின் இரு வட்ட கால்கள் கொண்டு
மரபணுக்கள் மாற்றிய மண் வாசனை
கழுவப்பட்ட ஆகாரம் மென்றுறிஞ்சி
உமிழ்நீரும் கெட்ட, உடல் குருதியும்
நஞ்சான ஒரு நாளின் பயணத்தில்
பிறவியின் முடிவில் வரும் புகையது
புரவியின் பின்னால் போக்கிக்கொண்டிருந்தது...


------------------------------


ண்ணத்துப்பூச்சியின் இறக்கை
கண்களுக்கு மட்டுமா விருந்து
பல்லிக்கும்தானே என்ற கவிதை
நெய்த பகலின் சாப்பாடு
தொட்டியில் விசிறிய கணத்தில்
சோற்றோடு விழுந்த
விரைத்த பல்லியை விளிம்பில் ஒரு காகம்
பொன் குஞ்சு கூட்டின் நினைவில்
முதலில் எதை கொத்துவதென்ற யோசனையில்
பூனையும், நாயும் முதல் சண்டையை
ஆரம்பித்திருந்தது...    
.

36 comments: