பலா பட்டறை: சுந்தர கண்டம்

சுந்தர கண்டம்



உரையாடல் சார்பாக கிழக்கு மாடியில் நேற்றைக்கு திரையிடப்பட்ட THE BEAUTIFUL COUTNRY படம் மனதை தொட்டுவிட்டது. அமெரிக்க வியட்நாம் போரில் ஒரு வியட்நாம் பெண்ணிற்கும், அமெரிக்க ராணுவ வீரனுக்கும் காதல் வந்து பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி கள்ளத்தோணி ஏறி முதலில் மலேசியா சென்று, அங்கிருந்து கப்பலின் மூலம் அமெரிக்கா சென்று தன் தந்தையை காண செல்லும் கதை.


அமெரிக்கா வியட்நாமின் எதிரி ஒரு அமெரிக்கனின் மூலம் பிறந்த குழந்தை எதிரியின் குழந்தை. சுற்றமும் நட்பும் தரும் வேதனைகள், அலட்சியங்கள், எதிரே உள்ளவர் பாதங்கள் மட்டுமே பார்க்க முடிந்த சுதந்திரங்கள், தனது தாய் வேலை செய்யும் மேட்டுக்குடி குடும்பத்தில் அவளுக்கு தன் கண் எதிரே நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகள் எல்லாவற்றையும் தலை நிமிர்த்திபார்க்கமுடியாத, கேட்கமுடியாத அவல நிலையை அமைதியான, இறுக்கமான முகத்தினூடே கதையின் நாயகனாக வரும் இளைஞன் படம் முழுவதும் வெளியிட்டிருப்பது நம்மை அப்படியே பட களத்திற்கு எடுத்துச்செல்கிறது.

இடையில் கிடைக்கும் ஒரு சீனப்பெண்ணின் நட்பும் ஒரு அகதியாய் அனாதையாய் இருக்கும் இளம் பெண்ணிற்கு அதிகார வர்க்கம் தரும், இச்சை பிச்சைகளும் அதையும் வெறுமனே கண்டும் காணாமல் இருக்கும் கதாநாயகனின் நிலையும், உடலை வைத்தே நாயகனையும் அவனது தம்பியையும் அமெரிக்காவிற்கு கப்பலில் தப்பிக்க வைக்க அவள் செய்யும் உதவியின்போது "நீயும் கூட வா"  என்று அவன் அழைக்க "உள்ளே இறந்து நெடு நாள் ஆயிற்று நீச்சல் தெரியாததால் வெளியே இறக்க விருப்பமில்லை" என்று கூறும் காட்சிகள், மீறி அவளையும் தன்னுடே கப்பலுக்கு அழித்து செல்லுதல், இரண்டாயிரம் டாலர் பத்தாது என்று கப்பலில் முனையில் நிற்க வைத்து ஏஜென்ட் பேசும் பேரங்கள் போன்றவை படமக்கப்பட்டவிதம் அற்புதம்.


எந்த விதமான அடிப்படை வசதிகளுமின்றி கப்பலில் அமெரிக்காவிற்கு செல்லும் அகதிகள் படும் துயரங்கள் சமகால நம் இன மக்களின் அவலங்களை நிச்சயம் நினைவு படுத்தும். அதிலும் பாதிவழியில் இறந்து போகும் தன் தம்பியின் உடலை துணி சுத்தி கடலில் வீசும்போது ஒரு விசும்பல் கூட இல்லாமல் சோகத்தை நம்மில் காட்சிகள் ஏற்றுகின்றன. 

தன் கூடவே வரும் சீனப்பெண் அமெரிக்காவில் தனது வாழ்வாதாரத்துக்காய் சட்டென அமெரிக்க சூழலுக்கு மாறிப்போவதையும், தன் தந்தையை காணவேண்டுமென்ற நோக்கத்தில் வந்தவன் அதை மட்டுமே நோக்கி போவதையும் இருவருக்குமான காதலின் பிரிவின் மூலமே அழகாக படத்தில் சொல்லப்படுகிறது.

தன் தந்தையை காணப்போகும் வழியில் அவன் பார்க்கும் வியட்நாம் போரில் கண்ணி வெடியில் கை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள், வழியில் லிப்ட் கொடுக்கும் மனித நேயமிக்க கார் ஓட்டுனர், அத்தனை வருடங்கள் தந்தையின் மீது வெறுப்பை சுமந்தவன், தனது தாயை பற்றி தந்தை சொன்னதை கேட்டு சட்டென மாற்றமடையும் மன நிலை, அகதியாய் ஜெயிலில் இருக்கும்போது திடீரென உடையும் குழாய் நீரில் எல்லா கவலையும் மறந்து சேற்றில் விளையாடுவது. சிறுவனாய் இருக்கும் தம்பி கப்பலில் உடல்நிலை சரியில்லை என்பதை "அம்மாவ பாக்கணும் போல இருக்கு" என்ற டயலாக்கில் தெரிய வைப்பது. அமெரிக்கா வரை வந்த முதியவர் ஒருவர் கப்பலிலிருந்து கரைக்கு வரும் வழியில் இறந்து போவது என பல்வேறு விஷயங்கள் படம் நெடுக்க மிக சிறப்பான முறையில் கதையோடே படமாக்கப்ப்ட்டிருப்பது அழகு. இன்னும் நிறைய விஷயங்கள் நான் இதில் கூறவில்லை அது நீங்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.                

நல்லதொரு படத்தினை காண அழைத்த நண்பர் சிவராமனுக்கு நன்றிகள் பல.

வழக்கம் போல பதிவர் மாநாடு பிரபல பதிவர்களுடன் படம் முடிந்ததும் நடந்தது என்பதை கூறவும் வேண்டுமோ??    புதியதாய் ஒரு யூத்து பதிவர் (நிஜமாவே யூத்துங்க ) இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் (இது பதிவுலக உள்குத்துக்காக வெச்ச பெயர் இல்லையாம்:) ) வயலினோடு படம் பார்க்க வந்திருந்தார். அவர் கையில் இருந்த ஆறு விரல்கள் பார்த்து அப்போதே வந்த கவிதையை சங்கர் கேட்டு மயக்கமடைந்ததால் சற்று மாற்றி இங்கே..:))    


ஆறு விரல் ஞானமா?
அதிர்ஷ்டமா? தெரியாது..
ஆனால் நீ என்னை சுட்டி
குறை கூறியபோது 
ஒரு விரல் மட்டுமே என்னை காட்டியது 
நான்கு விரல்கள் உன்னை காட்டியது 
உன் ஞான விரலோ 
மண்ணை காட்டிக்கொண்டிருந்தது... 



.

56 comments:

Paleo God said...

எனது முந்தைய பதிவுக்கு ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..::))

மணிஜி said...

அப்ப நான் எங்க போயிருந்தேன் ?

Romeoboy said...

யாரு அந்த யூத்??

சைவகொத்துப்பரோட்டா said...

உணர்ச்சி பூர்வமான படம் போல.

மீன்துள்ளியான் said...

பலா படம் மாதிரியே பதிவும் நல்ல இருக்கு .. உங்க கூட நேரம் செலவழிக்க முடியல ..அடுத்த தடவை வரும்போது நிறைய பேசலாம் .

Ashok D said...

எனது அலுவலகத்திலிருந்து தொடர்ந்த கைபேசி அழைப்பினால் 7.13க்கு கிளம்ப வேண்டிய நிர்பந்தம். சுவாரஸியமாய் படம் பார்த்துக் கொண்டிருந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. நல்ல படம் பார்க்க கொடுத்தற்க்கு சிவராமன்(ணா)வுக்கு நன்றி.

அந்த குழந்தையின் முகம் மனசுக்குள்ளேயே இருக்கு பாராமாய். நல்ல ரெவியூ ஷங்கர்.

Thenammai Lakshmanan said...

திரை விமர்சனமும் நல்லா வருது ஷங்கர்

கலகலப்ரியா said...

பதிவும் கவிதையும் அருமை ஷங்கர்..

vasu balaji said...

ரெண்டும் அருமை

நாடோடி said...

நல்ல விமர்சனம்...கண்டிப்பா பார்த்துட வேண்டயதுதான்.

சங்கர் said...

'சினிமாப் பக்கம் போக மாட்டேன்' என்று நீங்கள் கொடுத்த வாக்கை மீறி எழுத வைக்குமளவுக்கு அற்புதமாய் இருந்தது படம்

சங்கர் said...

//தண்டோரா ...... said...
அப்ப நான் எங்க போயிருந்தேன் ?//

நீங்க கிளம்பின பிறகு கவிதை சொன்னார் ( உங்க நல்ல நேரம் :) )

சங்கர் said...

//D.R.Ashok said...
எனது அலுவலகத்திலிருந்து தொடர்ந்த கைபேசி அழைப்பினால் 7.13க்கு கிளம்ப வேண்டிய நிர்பந்தம்.
//

க்க்க்கும், ஒண்ணு லேட்டா வருவது, இல்லை சீக்கிரம் கிளம்புறது, புதுசா என்ன :))

ராமலக்ஷ்மி said...

பட விமர்சனமும் கவிதையும் அருமை.

பாலா said...

இந்த ஏரியாவில் கை வைக்க மாட்டேன்னு சொல்லியிருந்தீங்க. ஏற்கனவே ‘திரை’ விமர்சனம் மட்டும் போட்டதால மன்னிச்சி விட்டேன்.

இனிமே... அதுக்கு சான்சே இல்லை.

நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.

Unknown said...

ஷங்கர் - திரை விமர்சனம் அருமை.. படம் பார்க்கத் தூண்டுகிறது.


ஹாலிவுட் பாலா... தாங்க முடியலை....

சங்கர் said...

@ஹாலிவுட் பாலா

இதை நான் வரவேற்கிறேன் :)

கலகலப்பிரியாவின் மொழிபெயர்ப்பாளர் இதனை வரவேற்காததை வன்மையாக கண்டிக்கிறேன் :)

தமிழ் உதயம் said...

படத்தின் குணாதிசயத்தை, உங்கள் விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. நல்ல படம் என்பதை அறிய முடிந்தது

சங்கர் said...

இனிதே துவங்கப் படுகிறது

அகில உலக __________ கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்
(கோடிட்ட இடங்கள் கவிதையை பார்த்தபின் முடிவு செய்யப்படும்)


சங்கர்
தலைவர் மற்றும் பொருளாளர்

(மன்றத்தில் சேர விரும்புவோர் இங்கே பதிவு செய்து கொள்ளவும்)

செ.சரவணக்குமார் said...

உங்கள் எழுத்து நடை அபாரம் ஷங்கர். நானும் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். நல்ல விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.

ஜெட்லி... said...

கவிதையா?? அங்கயுமா.....

புலவன் புலிகேசி said...

இந்த கவிஞர்கள் தொல்லை தங்க முடியலப்பா..படத்த பாத்துருவோம்

Ashok D said...

//சங்கர்
தலைவர் மற்றும் பொருளாளர்//

சங்கர்ன்னா? எந்த சங்கர்ப்பா கொஞ்சம் தெளிவா சொல்லறது

ரிஷபன் said...

படம் பார்க்கத் தூண்டுகிறது.. தேர்வு செய்து போட்ட படங்களும் பேசும் படங்கள்..

அண்ணாமலையான் said...

மிரட்டறீங்க

சங்கர் said...

//D.R.Ashok said...
சங்கர்ன்னா? எந்த சங்கர்ப்பா கொஞ்சம் தெளிவா சொல்லறது//

நான், நானே, நானேஏஏஏஏஏஏஏஏ தான்,

உங்களுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை :))

வினோத் கெளதம் said...

படம் பார்க்க தூண்டும் விமர்சனம் தல..

Ashok D said...

//நான், நானே, நானேஏஏஏஏஏஏஏஏ தான்//
என்னாது 'A'வா ;)

//உங்களுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை :))//
குழந்தைகளுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை என்பது எனக்கு தெரியுமே :))

சங்கர் said...

// D.R.Ashok said...
குழந்தைகளுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை என்பது எனக்கு தெரியுமே :))//


புரியாத கவுஜ எழுதும் எல்லாருக்கும் அனுமதி இலவசம், (எங்கள் ஹாலி பாலியின் கவிதைகளைப் படித்துத் தெளிவாகுமாறு அன்புடன் அழைக்கிறோம்)
:)))

Ashok D said...

//புரியாத கவுஜ எழுதும் எல்லாருக்கும் அனுமதி இலவசம்//

யாருக்கு புரியாத கவுஜ..? எழுதறவங்களுக்கா.. இல்ல படிக்கறவங்களுக்கா??

Paleo God said...

ஹும்ம் ஹாலிபாலி சொன்னத கேட்டிருக்கனும்..:-)

சங்கர் said...

//D.R.Ashok said...
யாருக்கு புரியாத கவுஜ..? எழுதறவங்களுக்கா.. இல்ல படிக்கறவங்களுக்கா??//


ஆரம்பித்த அரைமணிக்குள்
ஆதரவுக் கரம் நீட்டி
அஞ்சல் அனுப்பி வைத்த
ஆயிரம் அன்பர்களுக்கு

:))


இன்னும் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்

இந்த மன்றம், கொள்கை அடிப்படையில் என்டர் கவிஞர் கொலைவெறிப் படை (தலைவர் : ராஜு) உடன் இணைந்து செயல்படுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

சங்கர்
சென்னை கிளை தலைவர் (புத்தகக் காட்சியில் துவங்கப்பட்டது)
என்டர்
கவிஞர்
தொண்டர்
படை

சங்கர் said...

//ஹாலிவுட் பாலா said...

நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.
நான் கவிதை எழுதப் போறேன்.//

//ஷங்கர்.. said...
ஹும்ம் ஹாலிபாலி சொன்னத கேட்டிருக்கனும்..:-)//

இத்தனை முறை சொல்லி இருக்காரே இன்னும் கேக்கலையா,
இருங்க கவிதையோட வந்து சொல்லுவாரு :))

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பான விமர்சனம் ஷங்கர்

பகிர்வுக்கு நன்றிகள் பல:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான பட விமர்சனம். யாருங்க அந்த யூத் ? கவிதை அழகு.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Nandri Shankar... ennai ingae arimugapaduthiyatharku!!!

Kavithai soopparu!! enkita sonnatha vida ithu nalla iruku boss!!!

Paleo God said...

நண்பர்களே மேலே இருக்கும் நாளைப்போவான் என்பவர் தான் அந்த யூத்து..:))

ஸ்ரீராம். said...

விமர்சனம் படித்தேன்...படம் பார்க்கும் வாய்ப்பு எங்கே வரப் போகிறது?
கவிதை அருமை

Chitra said...

பட விமர்சனம் அருமை. நீங்கள் ரசித்து பார்த்து இருக்கிறீர்கள் என்பது தெளிவு.

ஹேமா said...

நல்லதொரு அறிமுகமும் கூடவே பார்க்கத் தூண்டும் பட விமர்சனமும்.நன்றி ஷங்கர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படத்தைப் பார்க்க வந்தும் உங்களை சந்திக்கலையே நான் ஷங்கர்..
அருமையாக விமரிசித்துள்ளீர்கள்.வாழ்த்துகள்

Vidhoosh said...

did you take your wife too?

அன்புடன் மலிக்கா said...

/உன் ஞான விரலோ
மண்ணை காட்டிக்கொண்டிருந்தது.../

அருமை அருமை .

ரோஸ்விக் said...

இரண்டும் அருமை அண்ணாச்சி... :-)

Unknown said...

இப்போ தான் முதல் முறையா வருகிறேன்..., விமர்சனம் அருமை...

Unknown said...

//இனிதே துவங்கப் படுகிறது

அகில உலக __________ கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்
(கோடிட்ட இடங்கள் கவிதையை பார்த்தபின் முடிவு செய்யப்படும்)


சங்கர்
தலைவர் மற்றும் பொருளாளர்

(மன்றத்தில் சேர விரும்புவோர் இங்கே பதிவு செய்து கொள்ளவும்)//

அகில உலக சூப்பர் கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்

அகில உலக ஒலக கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்

அகில உலக இளைய கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்

அகில உலக அல்டிமேட் கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்

இவ்ளோ பேர் சொல்லி இருக்கேனே..., என்னையும் சேத்துக்குவிங்களா...

Vidhoosh said...

/////
அகில உலக __________ கவிஞர் ஹாலி பாலி ரசிகர் மன்றம்////

ivaru nichchayam piraabala kavingaraaththaan iruppaaru... naanum oru member.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல ரசனையான விமர்சனம்.

Priya said...

அழகான விமர்சனம்!!!

Priya said...

Direct linksல உங்க blog திறக்க முடியுது,நன்றி ஷங்கர்.

டவுசர் பாண்டி said...

//உன் ஞான விரலோ
மண்ணை காட்டிக்கொண்டிருந்தது..//

இன்னா மேரி இர்ந்துது பா !! உண்மைக்கி தூளு
டக்கரு !! தான் தல !!

சாமக்கோடங்கி said...

விமர்சனம் வெளுத்துக் கட்டுகிறது.. கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும்..

நல்ல கருத்து.

நன்றி..

மரா said...

வடை போச்சே!! ஏதோ சினிமாவப் பாத்துப்புட்டு அப்பிடி,இப்பிடி எழுதிப் பொழப்ப ஓட்டிக்கிட்டிருந்தோம். அதுக்கும் ஆப்பா?! அண்ணே இதெல்லாம் நல்லா இல்லை. நானு அனுப்பின படத்தெயெல்லாம் பாத்துட்டு அப்பிடியே மறந்துரோனும் செரியா?பதிவெல்லாம் எழுவாதீங்க!! :) :)

CS. Mohan Kumar said...

This article now features in Vikatan Good blog. Congrats Shankar!!

பாலா said...

சங்கர்..., பேநாமூடி, விதூஷ் வாழ்க.. வாழ்க...!!

முகிலன்.. ஷங்கர்.. ஒழிக.. ஒழிக...!!!!

ஒரு வருங்கால கவிஞனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாறங்கப்பா......!!! பொறாமை பிடிச்ச ஒலகம்.

சீக்கிரமா.. ஒரு செண்டர் கவித எழுதறேன்னா இல்லையான்னு பாருங்க.

Jaleela Kamal said...

நல்ல திரை விமர்சன‌ம் ,அருமை