பலா பட்டறை: உதப்பி..

உதப்பி..பலா பட்டறை அப்படின்னா என்ன என்று எல்லாரும் கேட்கவே இதென்ன வம்பா போச்சுன்னு சரி நம்ம பேர்லயே இருந்திடலாம்னுதான் என் பெயரையே வெச்சேன். ஆனா இப்ப ஒரு புது பேர் எனக்கு கிடச்சிருக்கு ‘சொம்பு தூக்கி மற்றும் அரை வேக்காடு :) சரி இதை சொன்னவர் முழுசா வெந்தவரா? என்பது எனக்குத் தெரியாது, அவரின் முழுமையான இடுகைகள் நான் படித்ததில்லை. இத்தனைக்கும் நான் சம்பந்தப்பட்ட வலைப்பக்கத்தில் வெறும் எழுத்தின் நிறம் மட்டும் சொன்னேன் (அப்போது எனக்கான ஒரு நல்ல வலைப் பக்க வடிவம் தேடிய நேரம்!) அடுத்த பதிவில் அவர் மாற்றிய எழுத்தின் நிறம் நன்றாக இருந்ததால், இப்ப படம் தெளிவாய் தெரிவதாய் (எழுத்தை) சொல்லி இருந்தேன் இதற்கும் அவர் எழுதிய பதிவுக்கும் (கருத்துக்கும்)  எந்த சம்பந்தமும் இல்லை.

 உலகின் எனக்கு தெரிந்த எல்லா விஷயங்கள் பற்றியும் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறது அது வெந்ததை வைத்து நான் எவ்வளவு வெந்திருக்கிறேன் பார் நீ வேகவே இல்லை என்று சொல்லுமளவுக்கு நான் வெந்தவனல்ல.

நிற்க! போன பதிவில் கேபிள்ஜியும், ஸ்வாமி ஓம்காரும் டெம்ப்ளேட் மாற்றச்சொல்லி இப்போது மாற்றிப்பார்த்தால் (இவர்கள் வெந்தவர்களா என்று எனக்குத்தெரியாது:), அட இதுவும் அவரின் பக்கமும் ஒன்று போலவே (இப்போ டெம்ப்ளேட் வடிவமைத்தவர் சொம்பு தூக்கியா? ) சரி இதுவும் எவ்வளவு நாளுக்கென்று தெரியவில்லை நண்பர் சிவராமனும் கமென்ட் போட முடியவில்லை என்று சொன்னார், இந்த பக்கமும் தொல்லை என்றால் மாற்றிவிடலாம், வேகும் வரை கிளர வேண்டியதுதான்:))

சரி இது எதற்கென்றால், என்னால் முடிந்த வரை பொதுவான இடுகைகள் படித்து பின்னூட்டம் இடுபவன் என்ற முறையில் நான் சொல்ல விரும்புவது, என்னுடைய பின்னூட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் வேறுபாடு இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள், அல்லது நீங்கள் முழுதாய் வெந்தவர் என்றால் இதற்கு இப்படி பின்னூட்டம் போடுங்கள் என்று சொல்லி விடுங்கள். நவம்பர் மாதம் பதிவு கண்ட அரை வேக்காடுதான் நான்.:) என்னின் அளவுகள் எனக்குத்தெரியும். ஒருவரைப்பற்றி தெரியாமல் அவரை பற்றி கமெண்ட் அடிப்பது வெந்ததற்கு அடையாளம் என்றால் நான் அரை வேக்காடாக இருக்கவே விருப்பம்.:) இது என்னப்பற்றி சொன்னதிற்க்கான விளக்கம் மட்டுமே, மற்றபடி சம்பந்தப்பட்ட பதிவுகள்/பதிவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது அவர் அவர் கருத்து அவரவர்க்கு அதை நான் மதிக்கிறேன்.  

என்னை தவிர்த்து நிறைய வெந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சொம்பு தூக்கி, நல்ல பெயர். ஆனால் என்னுடையது கழுவ மட்டுமே நான் தூக்குகிறேன். இது என்னுடைய பதிலிட்ட பின் கழுவியது.

இந்த பதிவுக்காக என்னைப்பற்றி தெரிந்தவர்கள் மன்னிக்கவும். ’உதப்பி’க்காக நான் எழுத நினைத்தது வேறு......ப்ச்..


.

34 comments:

Vidhoosh said...

phonil pesaren.

எறும்பு said...

//ஆனா இப்ப ஒரு புது பேர் எனக்கு கிடச்சிருக்கு ‘சொம்பு தூக்கி மற்றும் அரை வேக்காடு :)//

அண்ணே அதுக்காக உங்க பேர சொம்பு தூக்கினு மாத்திராதிங்க. இப்பவாவது சொம்பு தூக்கி ஷங்கர்னு சொல்லலாம். அப்புறம் சொம்பு தூக்கி சொம்பு தூக்கினு சொல்ல முடியாது..
:))

எறும்பு said...

பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்..
:)

Party please...

பிரியமுடன்...வசந்த் said...

இந்த டெம்ப்லேட் ஜூப்பரு....

பிரியமுடன்...வசந்த் said...

//இப்ப ஒரு புது பேர் எனக்கு கிடச்சிருக்கு ‘சொம்பு தூக்கி மற்றும் அரை வேக்காடு //

ஹி ஹி ஹி

நானும் ஒரு பேர் உங்களுக்கு வைக்கிறேன்

சூப்பர்ஹிட் பதிவர் ஷங்கர்...

இன்னும் நிறைய இருக்கு தோணுறப்போ சொல்லுறேன்...

:)))

பிரியமுடன்...வசந்த் said...

இந்த அரைவேக்காடுன்ற வார்த்தைய தமிழ்ல இருந்து தூக்கிடலாமாண்ணா?

ஸ்வாமி ஓம்கார் said...

//பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கள் :)

உங்கள் பெயர் ஆரம்பிக்கும் பொழுது முற்றுப்புள்ளியுடன் ஆரம்பிப்பதால் ஜின்ஜினக்காலஜி பிரகாரம் நற்பெயர்கள் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன் :)

தண்டோரா ...... said...

நாட்டாமை கோவத்தை குறைங்க!

செந்தழல் ரவி said...

ரிலாக்ஸ். என் பதிவில் உங்களுக்கான பதிலை கொடுத்திருக்கேன். கருத்து சொல்லவும். (என் டெம்ப்ளேட் நிறம் பற்றி அல்ல. பதிவை பற்றி)

சங்கர் said...

எப்படியோ ரவுடி ஆகிட்டா சரி :)

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி, எம்பூட்டு கோவம், நமக்கு இந்த கதையின் ஆதி புரியவில்லை, எஸ்கேப்.... :))

butterfly Surya said...

Cool my dear..

ஹேமா said...

உதப்பின்னா என்னன்னு சொல்லவே இல்ல நீங்க.

திவ்யாஹரி said...

இந்த template நல்லா இருக்கு அண்ணா.. நீங்களே டிசைன் பண்ணதா? பலா பட்டறையே நல்லா தான் அண்ணா இருந்துச்சி.. அதையே வைங்க..

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

ஒன்னும் புரியலை. Anyway...உங்கள் வலைப்பூ வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உங்க பதிவு படித்தவுடன் சொல்லத்தோன்றியது,"ரொம்பப் பெரியளாகிட்டீக அப்பு"

D.R.Ashok said...

கிசு கிசு நல்லாயிருக்கே.. யாரதுங்க?

VISA said...

சொம்பு தூக்கி ஹா ஹா ஹா

என்னை புன்னகைக்க வைத்த பிளாக் பெயர்களில் இதுவும் ஒன்று...

மீன் துள்ளியான்....என்ன ஒரு கற்பனை.

VISA said...

//பலா பட்டறையே நல்லா தான் அண்ணா இருந்துச்சி.. அதையே வைங்க..//

Me too

Vidhoosh said...

வீட்டு பேர மாதத்தின வாஸ்துவே சரியில்லை. பேசாம நாம ஹாலி பாலி பின்னூட்ட நண்பர் ம.ஜ. மாதிரி ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க. பலாபட்டறைக்கு ஏதாவது நிச்சயம் பெயர் காரணம் இருக்குமே? மொத்தம் எட்டு எழுத்து வருது. பத்தில் எட்டுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே. நாளைக்கு மறக்காம் "அகண்டாகாரம்" (உங்கள் நேற்றைய பதிவில் சாப்பிட்டு கொண்டிருக்காரே அவரைச் சொன்னேன்) பற்றி ஒரு கவிதை எழுதுங்க.

சி. கருணாகரசு said...

டெம்பிளேட் நல்லாயிருக்குங்க.....
உங்க பதிவ முழுசா படிச்சேன்.... நான் வெந்தவனா என்னான்னு சரியா தெரியாம ஒரே குழப்பமா இருக்குங்க.

thenammailakshmanan said...

எனக்கு என்னனு புரியல ஷங்கர் ஆனா இதை நினைச்சு வருத்தப்படுத்திக்காதீங்க

Sangkavi said...

பிரபல பதிவர் ஷங்கர் அவர்களே... பாலா பட்டறை பேர் நல்லாத்தா இருந்துச்சு...

விஜய் said...

வருந்த வேண்டாம் நண்பா. இதுவும் கடந்து போகும்.

விஜய்

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உடு தலை, இவனுங்க எல்லாம் சொம்பு தூக்காம பேப்பர்லயே துடச்சுக்குவானுங்க போலருக்கு.

தியாவின் பேனா said...

பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

seemangani said...

//உலகின் எனக்கு தெரிந்த எல்லா விஷயங்கள் பற்றியும் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறது அது வெந்ததை வைத்து நான் எவ்வளவு வெந்திருக்கிறேன் பார் நீ வேகவே இல்லை என்று சொல்லுமளவுக்கு நான் வெந்தவனல்ல//

அட பார்ர்ர்ரா....இது வேறயா ...
நானும் இதே போலதான் முன்னாடி இனிப்பா ஒரு பெயர் வச்சு மாத்திட்டேன்....

பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்... பிரபல பதிவரானதற்காக..

வானம்பாடிகள் said...

:)

நாஞ்சில் பிரதாப் said...

//உதப்பின்னா என்னன்னு சொல்லவே இல்ல நீங்க.//
அதானே...தமிழ்ல புதுசா புதசா வார்த்தைல்லாம் போடுறீங்களே ஷங்கர்ஜி...

சர்ச்சைல மாட்டுனீங்களா... அப்ப நீங்க பி.ப.ஆகிட்டீங்க

அன்புடன்-மணிகண்டன் said...

விட்டொழிங்க சாரே... :)

Chitra said...

பிரபல பதிவர், ஷங்கருக்கு: உங்களை போன்ற பிரபலங்கள் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா. போலாம், ரைட்! cheers!

முகிலன் said...

பிடிங்க பாஸூ வாழ்த்துகளை.. :)

V.Radhakrishnan said...

புரியவில்லை, மன்னிக்கவும். நன்றாக இருக்கிறது என உதப்பியை உசுப்பேத்திவிட நான் தயாராக இல்லை.