பலா பட்டறை: யாருக்கு தெரியும் ...7 1/2 +

யாருக்கு தெரியும் ...7 1/2 +


யாருக்கு தெரியும் ...??


ஏன் சார் அவ்வளோ விளம்பரம் பண்ணி 99.999999 % தூய தங்கம் வாங்குங்கன்னு சொல்லி நம்பி வாங்கினத திரும்ப வாங்கின பேங்க்லையே குடுத்தா, சாரி திரும்ப வாங்க மாட்டோம் ஒன்லி செல்லிங்ன்னு கூசாம சொல்றாங்களே ஏன் ??


எத்தனயோ இடத்துல ப்ரீ லெப்ட் இருக்க...ப்ரீ லெப்ட் இருக்கவேண்டிய எடத்துல கரெக்டா பெய்ட் லெப்ட் வெச்சு கல்லா கட்டறாங்களே ஏன்??


அசுத்தம் செய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா??


பாடம் சொல்லிக்குடுங்கன்னு புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பினா பீச மட்டும் வாங்கிகிட்டு எங்களையே எல்லாத்தையும் கத்துக்க சொல்றீங்களே ஏன்??


நல்லா படிக்கிற பசங்கள டெஸ்ட் வெச்சி சேர்த்துகிட்டு 100/100 தேர்ச்சி ன்னு விளம்பரம் போட்டுக்கறாங்களே சரிங்களா ??


சர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா ??


காசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க..??


ஒருத்தன் எல்லா பிராடும் செஞ்சு சப்ஜாடா உருவிக்கினு போனதுக்கப்புறம் அவனப்பத்தி புலனாய்வு பத்திரிக்கைகளுக்கு ஆதியோட அந்தமா எப்படி நியூஸ் கிடைக்குது ??


ஏன் சார் தெலுங்குல பூ வேனுமான்னு பூ வித்த ஒரு ஆள அரக்கோனத்துல ஆறு பேர் ரவுண்டு கட்டி அடிச்சாங்களாமே...இதுக்கு பக்கத்துல (18+) போடனுமா??


”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா??


வாரேன்ன்னுட்டு போராங்களே ...வருவாங்களா..??


நாய் கால்ல கடிச்சா தொப்புள்ள ஊசி போடறவங்க...தொப்புள்ள கடிச்சா எங்க ஊசி போடுவாங்க...?  


ஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...??


ஆமா இவ்ளோதானா இல்ல இன்னும் உண்டா ...???


யாருக்கு தெரியும்...?????????

27 comments:

கமலேஷ் said...

என்ன நண்பா சரி hot ஆ இருக்கீங்களா...ஏதாவது டென்சனா ...

அண்ணாமலையான் said...

நியாயமான கேள்விகளும் இருக்கிறது.........

Chitra said...

ஏன்? ஏன்? ஏன்? ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. நல்லா இருக்குப்பா.

நாடோடி said...

\\அசுத்தம் செய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா??\\

சிந்திக்க வேண்டிய வரிகள்........அருமை நண்பா

thenammailakshmanan said...

//சர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா ??


காசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க//

fantastic PALAPATTARAI

T.V.Radhakrishnan said...

அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

கன்னித்தீவு தொடர் எப்ப முடியுமோ(?) அப்பதான் இந்த கேவிகளுக்கு விடை கிடைக்கும்.
(தமாசு)

malar said...

நல்ல பதிவு .

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. என்னாச்சு திடீர்னு. இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு.

ருத்ர வீணை said...

எல்லாம் நல்ல இருக்கு.. எதோ என்னால முடிந்தது

1) உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையா சில படங்கள் போடறாங்களே.. அத நம்மளாலையே பாக்கமுடியாது.. அப்புறம் வேற எந்த உலக தொலைக்காட்சில போடுவாங்கனு எதிர்பார்கறாங்க ?

2) ஒரு மீட்டர் துணி எடுத்து ப்ளௌஸ் தெக்க கொடுத்து அதுல ஜென்னல் கதவு எல்லாம் செய்யறாங்க.. அதுல மீந்த துணிய என்ன பண்றாங்க யாரவது யோசிக்கறீங்களா ??

:-) அண்ணன் வாழ்க !!!

Vidhoosh said...

எப்டிங்க? இப்டி?

ரைட்டு.

இப்ப சரியா?

கலையரசன் said...

//ஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...??//

இதுதான்யா டாப்பு...

வால்பையன் said...

//”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா??//

சென்டரு!

பலா பட்டறை said...

கமலேஷ் said...
என்ன நண்பா சரி hot ஆ இருக்கீங்களா...ஏதாவது டென்சனா ... //இல்லங்க சும்மா :)

பலா பட்டறை said...

அண்ணாமலையான் said...
நியாயமான கேள்விகளும் இருக்கிறது.......//..

நீங்க சொன்னா கரெக்ட் தான் தல சாரி மல :)

பலா பட்டறை said...

Chitra said...
ஏன்? ஏன்? ஏன்? ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. நல்லா இருக்குப்பா. //

நன்றி சகோதரி :))

பலா பட்டறை said...

நாடோடி said...
\\அசுத்தம் செய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா??\\

சிந்திக்க வேண்டிய வரிகள்........அருமை நண்பா:://

நன்றி நண்பரே நிறைய எழுதுங்க ::)

பலா பட்டறை said...

thenammailakshmanan said...
//சர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா ??


காசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க//

fantastic பலபட்டரை//

நன்றி சகோதரி ::))

பலா பட்டறை said...

T.V.Radhakrishnan said...
அருமை..//

நன்றி சார்:)

பலா பட்டறை said...

சைவகொத்துப்பரோட்டா said...
கன்னித்தீவு தொடர் எப்ப முடியுமோ(?) அப்பதான் இந்த கேவிகளுக்கு விடை கிடைக்கும்.
(தமாசு) //

தீர்வே இல்லன்டுதான் யாருக்கு தெரியும் தலைப்பே ::))

பலா பட்டறை said...

malar said...
நல்ல பதிவு//

நன்றி மலர்:)) .

பலா பட்டறை said...

S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. என்னாச்சு திடீர்னு. இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு.//

சும்மா நவாஸ் ஜி ...::))

பலா பட்டறை said...

ருத்ர வீணை said...
எல்லாம் நல்ல இருக்கு.. எதோ என்னால முடிந்தது

1) உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையா சில படங்கள் போடறாங்களே.. அத நம்மளாலையே பாக்கமுடியாது.. அப்புறம் வேற எந்த உலக தொலைக்காட்சில போடுவாங்கனு எதிர்பார்கறாங்க ?

2) ஒரு மீட்டர் துணி எடுத்து ப்ளௌஸ் தெக்க கொடுத்து அதுல ஜென்னல் கதவு எல்லாம் செய்யறாங்க.. அதுல மீந்த துணிய என்ன பண்றாங்க யாரவது யோசிக்கறீங்களா ??//

super::))

//:-) அண்ணன் வாழ்க !!! //

சாரி எல்லா பதவியும் புக் ஆயிடிச்சி ::)) நன்றி வீணை ::))

பலா பட்டறை said...

Vidhoosh said...
எப்டிங்க? இப்டி?

ரைட்டு.

இப்ப சரியா? //

யாருக்கு தெரியும் மேடம் ::)) நன்றி .

பலா பட்டறை said...

கலையரசன் said...
//ஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...??//

இதுதான்யா டாப்பு...//

வாங்க கலை ::)) நன்றி.

பலா பட்டறை said...

வால்பையன் said...
//”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா??//

சென்டரு! //

வாங்க அருண் :)) டிபிகல் கமன்ட் ::) கடைசில வண்டி ஷெட்டுக்கு போய் செந்திரிச்சி ::)) நன்றி முதல் பின்னூட்டத்திற்கு ::) மிக்க நன்றி நிறைய ஓட்டுகளுக்கு ::)

January 7, 2010 8:5

seemangani said...

ஆமா இவ்ளோதானா இல்ல இன்னும் உண்டா ...???

ரெம்ப...சிந்திக்க வைகீது பதிவு...