பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்..

சின்ன சின்ன கவிதைகள்..


கூடலுக்கு பின்னுள்ள 
நிமிடங்கள் ஞானி ஆக்குகின்றன
பேரழகியாய்  இருந்தாலும்
வெறும் பெண்ணாய் பார்க்க முடிகிறது..

கையில் தடி கொண்டு, காவி உடையில்
பெண் போகம் வேண்டாம் என்று சென்ற
முனிவரிடம் சொல்ல ஆசை..

உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்...  

இது இறை கட்டளை..


ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்

மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..

திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்...  


அன்புள்ள நாசா
உலகம் உருண்டை என
படத்தில் காட்டினாய்

இதுதான் இறைவன் என
இங்கேயும் படம்தான்

கூட்டிப்போய் காமி என்றால்
பணம் செலவாகும் - நாசா 
மனம் செலவாகும் - இங்கே

நீயே நேரில் பார்த்து
இருந்தால் மட்டுமே அது
இருக்கிறதென்றது பகுத்தறிவு

நான் என்ன செய்ய ?? 

42 comments: