பலா பட்டறை: முறிந்த காதல் - நான்கு

முறிந்த காதல் - நான்கு
பெரிய கண்களால் பார்த்து
நீ சொன்னது என்னவென்று புரியாமலிருந்த
எனக்கு வெறும் கையை கோர்த்து
நீ உணர்த்திய காதல்
இன்னும் உள்ளங்கை ரேகைகளில்
ஒளிந்து கொண்டிருக்கிறது..
பண்டோரா தீவு ஜீவன்களுக்கும்
நீதான் சொல்லித்தந்தாயா
ஸ்பரிசங்களில் உயிர் கலவைகள்
ஒன்றாகும் என்று....

நான்கு காதல்களில் பட்டும்
ஆசைச்செடி பூவிடத்துடிக்கிறது
உன் அப்பாவின் அமிலப்பார்வையில்
மொத்தமாய் அழிந்தும் கூட..
டிஸ்கி 1: மொத்தமே 10 தான்.. அது வரை பொறுமை ப்ளீஸ்..
டிஸ்கி 2: மேலுள்ள டிஸ்கி நண்பர் D.R.அசோக்கிற்கு சமர்ப்பணம்.(வரலாறு முக்கியம் 
                  மன்னா :) நீங்கள் already அறியும் (அறிதலில் காதல்) ஞான் இப்பளா வந்தது:)

28 comments: