பலா பட்டறை: பூம் பூம் பூம் மாட்டுக்காரர்....

பூம் பூம் பூம் மாட்டுக்காரர்....


ணிணியில் மேய்ந்து கொண்டிருந்த காலை நேரம்.. பே பப பே என்ற சத்தம் DTS துல்லியத்தில் காதில் விழ ஓடி வந்த என் குழந்தைகள் ..


“அப்பா என்ன சத்தம்பா அது?

“பூம் பூம் மாடு வந்திருக்கு குட்டிங்களா” ன்னு சொல்லி ”வாங்க பார்க்கலாம்னு

கேமராவோட போனா..இவர்மட்டும் நின்னுக்கிட்டு இருக்காரு, புள்ளைங்க என்னை கடுப்பாய் (வாடா போய் ’பென் 10’ பார்க்கலாம்) பார்க்க..

“என்னங்க ஆச்சு மாடு இல்லையா??”

“மாட்டுக்கு உடம்பு சரி இல்ல சாமி.
அதான் வீட்டுல விட்டுட்டு, நான் மட்டும் வந்தேன்..”

அவர் வாத்தியத்தை வாசிக்க ஆரம்பித்து விட்டார்....

ரொம்ப நாளாச்சு பூம் பூம் மாடுகள பார்த்து, அழகான ஆடைகள், வித்தியாசமான அலங்காரங்களுடன் தலையை ஆட்டிக்கொண்டு அழகாய் இருக்கும்,

ஆனால் இவர்கள் எப்போதும் எங்கள் பக்கம் வந்ததில்லை, எனவே யாசகத்திற்கான காரணங்கள் எதுவுமில்லை, உடம்பு சரியில்லாத அந்த ஜீவனை வீட்டிலேயே விட்டு விட்டு, ஏதேனும் கிடைக்குமா என்று வந்த அந்த நல்ல மனிதரை ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

”ஏங்க எடுத்த படம் இதுல தெரியுமா??”நான் காமரா ஸ்கிரீனில் காண்பித்ததும் அப்படி ஒரு சந்தோஷம் அவர் முகத்தில்..

செல் போன் டவர்களால் சிட்டுகுருவியே அரிதாகிவிட்ட இந்த நகர வாழ்வில், வித விதமான பறவைகளை தேடி அடையாளம் கண்டு, படமெடுத்து, காட்சிக்கு வைக்கும் ஒரு போட்டியை தினசரிகளில் பார்த்தபோது, மகிழ்ச்சி ஏற்பட்டது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.

எத்தனையோ வேலைகள் இந்த நகரத்தில் இருந்தும், விடாமல் இவர்களில் சிலர் இந்த பரம்பரை விஷயத்தை செய்து வருகிறார்கள். கூகுளில் தேடியபோது இவர்களை பற்றிய ஒரு கட்டுரை இந்த தளத்தில் பார்க்க கிடைத்தது. எல்லாவற்றையும் கணிணியிலேயே காண்பிக்கும் போது குழந்தைகள் சலிப்படைகின்றன.


”வாவ் இன்ஞினியரிங் மார்வெல்” என்று நாம் வியக்கும், நாகரீக கட்டிடங்களில், செங்கல், சிமென்ட்டோடு பல கலாசார, வாழ்க்கைமுறைகளும் பூசி புதைக்கப்படுகிறது. பாசமாய் பயிர்கள் வளர்த்து, பருவ காலங்கள் அறிந்த விவசாயிகள் பைஞ்சுதை வளர்க்க காப்பு காய்த்த கைகளுடன், பீடி புகைத்துக்கொண்டு சாலை ஓரம் வேலைக்காக காத்திருப்பது வளர்ச்சியா? அடுத்த கட்டம் எங்கே போகும்? கட்டிடங்களின் மாடிகளில் கழனிகள் வருமோ..??


போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!
.

41 comments: