பலா பட்டறை: பதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு

பதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு





நேற்று புத்தக கண்காட்சியில் கிழக்கு புத்தக அரங்கு அருகில் பதிவர் சந்திப்பு நடந்தது. நானும் சென்றிருந்தேன். ஆகக்கூடி நாங்கள் ஆற்றிய இலக்கியப் பேருரையில் கிழக்கு பதிப்பகத்தின் பக்கசுவர்கள் ஆட ஆரம்பித்து சுமார் மூன்று முறை சாயாம இருங்க சார் ஸ்டால் விழுந்துடப்போவுது என்ற எச்சரிக்கைகள் வரப்பெற்றோம். நான்காவது முறையாக போன எனக்கு நேற்றுதான் நல்ல கூட்டத்தை காண முடிந்தது (இதில எங்க கூட்டம் வேற) மொத்த யூத்து கும்பல்ல நாந்தான் படு கெழம் ::))

அது சரி என்ன இலக்கிய கூட்டம்ன்னு கேட்டீங்கன்னா 'வெள்ளிநிலா' என்ற பதிவர்களுக்கான ஒரு தனி மாத இதழ் வெளிவர இருக்கும் செய்திக்கான அறிமுக உரையாடல் நடந்தது 'ஷர்புதீன்' என்ற ஒரு 'நல்லவர்' இதற்கான பெரு முயற்சிகள் மேற்கொண்டு பதிவர்களுக்கான இதழ் குறித்த சிறப்பு முன்னோட்டத்தை அளித்துக்கொண்டிருந்தார். மேலதிக விவரங்களுக்கு 'வெள்ளிநிலா' பக்கத்தை பார்க்கவும்.

பதிவர்களின் பதிவிலக்கிய தமிழான 'உள்குத்து', 'வெளிகுத்து','வட போச்சே', 'ரொம்ப நல்லவரு',நாங்களும் ரௌடிதான், என்னா வில்லத்தனம், மைனஸ் ஒட்டு,  யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க, மானிட்டர்,  என்டர் கவிதைகள், யூத்து, இட்லி வடை போட்டோ, இன்ன பிற   - இலக்கிய அர்த்தங்களுக்கான கோனார் தமிழ் உரை நூல்கள் புத்தக கண்காட்சியில் ஷர்புதீன்க்கு  எங்கு தேடியும் கிடைக்காததால் 'வெள்ளிநிலா' விற்கு சக பதிவர்களாகிய உங்களின் மேலான பேராதரவு தரவேண்டி அன்புடன் கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இதழை இலவசமாய் பெற மின் அஞ்சல் செய்தால் வீடு தேடி வரும் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இலக்கிய கூட்டத்தின் புகை படங்களுக்கு, மேலதிக சுவாரஸ்ய தகவல்களுக்கு


ஜாக்கி சேகர்,



(இவரது பின்னூட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்ட  பதிலில் எந்த உள்குத்தும் இல்லை என்பதையும் அவருக்கு எப்போதும் கால்ஷீட் உள்ளது என்பதும் இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :) )


கேபிள் ஷங்கர்,  

ஜெட்லிஷங்கர்சித்து,

போன்ற நண்பர்களின் பதிவுகளை பார்க்கவும்.




கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த திருவாளர்கள்.  தண்டோரா, அவிங்க ராசா, நர்சிம், கேபிள் ஜி, பட்டர்பளை  சூர்யா, எறும்பு ராஜகோபால், அசோக்.D.R.,அப்துல்லா, ஜெட்லி, ஷங்கர், மீன்துள்ளியான், கார்க்கி, காவேரி கணேஷ், பைத்தியக்காரன் (எ) சிவராமன், குகன், ரோமியோபாய், ,அகநாழிகைவாசு,  புலவன் புலிகேசி, வெள்ளி நிலா பத்திரிக்கை ஆசிரியர் சர்பூதின், நிலாரசிகன், மயில் ராவணன், செல்வகுமார், போன்றவர்களுக்கு நன்றி !: )



யாருடைய பெயராவது விட்டுப்போயிருப்பின் மன்னிக்க (அட என் பேரே இல்லீங்க:( )

மறவாதீர் 'வெள்ளிநிலா' 'வெள்ளிநிலா' 'வெள்ளிநிலா'....













23 comments: