பலா பட்டறை: பலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..

பலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..ஓடி வந்து கை குலுக்கி  
புத்தாண்டு வாழ்த்துக்கள் 
சொன்ன  போது  தெரியாது 
முதல் முறிவுக்கும்
இரண்டாம் பிரிவுக்கும்
இடையிலான ஆரம்பம் என்று..

முதல் முறிவு விரல் தீண்டாத
சர்ப்பம் என்றால் உன்னுடனான
ஆரம்பமே தீப்பெட்டி உரசல்..

என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்

இருவர் சூடும்
நம்மை பிரித்து
காதலை எரித்த நாளது முதல்
வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள் இன்னும்
பறந்துகொண்டேதான்
இருக்கிறது..  
காய்ந்துவிட்ட நம்
நினைவு பூக்களின் மீது..

21 comments: