பலா பட்டறை: ஆறறிவு...

ஆறறிவு...


சந்ததிகளுக்கான இயக்கத்திலிருந்த
வேகத்தை பார்த்த நண்பன்
கல்வீசி துரத்தும்போது
சிரித்தபடி சொன்னான்
நாய்களுக்கு சிரிக்கத்தெரியாது
சரிதான்
ஆறறிவு அதற்கில்லை..


தோப்புகளழித்து வீடுகளான
கிரீன் பார்க் அவென்யுவில்
அவ்வப்போது
கடந்து போகையில் நான் கேட்டது
வெக்கையா இருக்கு ஏசி போடுப்பா..
ரொம்ப குளிருது கதவ மூடும்மா ..

தப்பிப் பிழைத்த மரத்திலொரு
கூட்டில் பறவையும் குஞ்சும்
மழையில் உதறியவாறு
மழை பற்றி குறை ஏதும்
சொல்லாமலிருந்தது
சரிதான்
ஆறறிவு அதற்கில்லை..
.

20 comments: