பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..எத்துனை முறை வழுக்கிக்கொண்டு
போனாலும் விளக்கிலிட்ட திரியாய்
உறிந்தெரிக்கிறாய்...
உனக்கென்ன ஜொலிஜொலிப்பு..,
பிரகாசம் ஊரெல்லாம் உன்பக்கம்
முகமெல்லாம் கரியாக சொத்தென்று
வீசியபின்னும்
ஒரு எலிக்காவது உணவாகிறேன்
உன் ஜொலிப்பில்
அடுத்த கரி முகத்துக்கு
ஆழ்ந்த அனுதாபத்துடன் .
எண்பது வயது என் தந்தையின்
இருமலைப்போலிருமும்
என் குழந்தையின் கேலியை
ரசிக்க முடியவில்லை...
என் பேரக்குழந்தைகளின் கேலிகள்
சட்டம் போட்டு மாலையிட்ட
என் படத்தை பார்த்திருக்குமோ
என்ற பயமாயுமிருக்கலாம்...


**  ** ** ** **கோவிலில்
நான் வீணாக்கிய
நாட்களை
நினைவுபடுத்தினான்
இறைவன்
நாட்காட்டியின்
தாள்களில்
குங்குமம் மடிக்கும்போது...

என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது

உன் சுயம்வரத்தில்
மாலைகள் மட்டுமே
பங்கேற்க வேண்டும்
மறந்தவைகள் அல்ல

அடியே
என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல..

                 :((((

செவிப்பறை தட்டி
வாடா என்று குரல் கொடுப்பவனே

வேட்டி தூக்கி மடித்தாலும்
மல்லுக்கட்டும்
களிறுகள் யாருமிலர் இங்கே
பூனைகளுக்கு நடுவில் பிளிறுவது மறந்து
பூனை உயிரில் தன்னுயிர் யாசித்த சுயம்புகள்

போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..
உனக்கும் பூக்கள் சாலையில் சிதறக்கூடும்...
 இது இந்த நண்பர்களுக்காக35 comments: