பலா பட்டறை: முறிந்த காதல் - மூன்று

முறிந்த காதல் - மூன்றுமுதலிரண்டில் வழிந்த
தேனை மன நாக்கு புறங்கையில்
ருசிக்கத்துவங்கிய நேரம்..

பாகல் என்று சிரித்து
அருகில் வந்தாய்
தூய தமிழ் என்று நினைத்த
எனக்கு தெரியாது
தேசியமொழியில் உன் ஊடல்

எனக்கு பரிசளித்த
எங்கோ பறித்த ரோஜாவை
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
எப்போதாவது திறக்கையில்
தூளாகி தும்மல் வருகிறது

பாகல் என்ற குரல்
அடிக்கடி கேட்கிறது

பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது22 comments: