புத்தக கண்காட்சி..
திரிசக்தி ஸ்டாலில் அது கிடைப்பதையும் சொன்னார் சிறிது பேசிவிட்டு விடைபெற்றேன். திரிசக்தியில் நண்பருடைய புத்தகமும் நிலாரசிகனின் 'யாரோஒருத்தியின் டைரிக்குறிப்புகள்' வாங்கிக்கொண்டு, வேறு யாரும் தென்படாததால் புத்தகம் ஒவ்வொன்றாய் வாங்க ஆரம்பித்தேன் விகடன் பதிப்பகத்தில் ஆரம்பித்து, கிழக்கில் முடிந்தது. கிழக்கில் நல்ல கூட்டம் திரு.பிரசன்னா
பாவம் காலியாகும் ராக்குகளில் பல தலைப்புகளில் உள்ள புத்தகங்களை வைக்க உதவியாளரிடம் ஒவ்வொன்றாய் கேட்டுக்கொண்டிருந்தார் 'இரண்டாம் உலகப்போர்' எங்கப்பா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு' எடு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது புத்தகம் வாங்க வந்த ஒருவர் "தோ இங்க இருக்கு பாருங்க எடுத்துக்குங்க" என்று பிரசன்னாவிடம் சொல்ல "இல்லீங்க இது இங்க அடுக்கறதுக்காக" என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னதான் ஸ்கேன் செய்து கிழக்கில் பில் போட்டாலும் ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்தார்கள். ரங்கநாதன் தெரு ஸ்டைலில் விரைவில் பில் மற்றும் டெலிவரிக்கு அடுத்தமுறை என்ன புதுமை செய்கிறார்கள் என்று பார்ப்போம். கிழக்கில் பில் செய்து கொண்டிருக்கும்போதே திரு.நர்சிம் அவர்களை பார்த்தேன் பணம் குடுத்து வெளியே வந்தால் மனிதரை காணோம்.. மெதுவாய் சுற்றி வந்ததில் திரு.சாருவுடன் பேசிக்கொண்டிருந்தார், ஹலோ நர்சிம் என்றவுடன் ஹாங்..பலாபட்டறை எப்படி இருக்கீங்க என்றார்? சந்தித்ததில் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு.. கால் வலிக்க தோள் வலிக்க வண்டி தேடி வீடு வந்து சேர்ந்தேன்.. நான் கிளம்பிய மாலை நாலு மணிக்கு மேல்தான் முக்கிய பதிவு தலைகள் வருவதை அதுவும் வீட்டுக்கு வந்து வலை மேய்ந்ததும் அறிந்தேன், தெரிந்திருந்தால் காத்திருந்து பார்த்திருப்பேன். சரி இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே பார்க்கலாம். எனக்கென்னமோ அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது :)).
பின் குறிப்பு ::
சுமார் 25 புத்தகங்கள் வாங்கி வந்தாச்சு நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியதுதான் பாக்கி. இருப்பதிலேயே கனமானது 'முயற்சி திருவினையாக்கும்' திரு.ரவி
பிரகாஷ் அவர்கள் மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரம். ஒரே ஒரு ஆங்கிலப்புத்தகம் 2 STATES - BY CHETAN BHAGAT. கி.வா.ஜ அவர்களின் -மச்சு வீடு, வாசல் இல்லாத வாசல்- கண்ண தாசன் பதிப்பகம், லா வோத் ஸு - தௌ த ஜிங், நவீன சிறுகதைகள் - ம.வெ.சிவகுமார் ( அல்லயன்ஸ்), பாம்பு என்றால்? - ச.முகமது அலி (இயற்கை வரலாறு அறக்கட்டளை ) போன்றவை நான் வாங்கியவற்றில் சில.
படங்கள் : நன்றி : இட்லிவடை, விழியன் பக்கம்.
22 comments:
நிறை= நல்லாருக்குது.
குறை= நம்ம பக்கம் வரவேல்லியே?
வந்து ஒரு ஓட்டும், பிரமாதமா ஒரு கமெண்டும் போட்டா என் குறை தீந்துடும்...
//அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது// :)
புத்தகம் படிச்சுட்டு கவர்ந்த விஷயங்களை பதிவா போடுங்க.. ஒவ்வொரு புத்தகத்திற்கு ஒரு பதிவு.. (கவர்ந்த புத்தகம் மட்டும்)
அண்ணாமலையான் said...
நிறை= நல்லாருக்குது.
குறை= நம்ம பக்கம் வரவேல்லியே?
வந்து ஒரு ஓட்டும், பிரமாதமா ஒரு கமெண்டும் போட்டா என் குறை தீந்துடும்..//
தல .நீங்க ...மல ..:))
D.R.Ashok said...
//அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது// :)
புத்தகம் படிச்சுட்டு கவர்ந்த விஷயங்களை பதிவா போடுங்க.. ஒவ்வொரு புத்தகத்திற்கு ஒரு பதிவு.. (கவர்ந்த புத்தகம் மட்டும்)//
நன்றி அசோக் ஜி..
கவர்ந்த புத்தகம் (விஷயங்கள்) = கண்டிப்பாக..:))
விமர்சனம் அழகு
நானும் திங்கட்கிழமை பார்க்கப்போறன் பிறகு விரிவா சொல்லுறன்.
இன்னொரு ரவுண்ட் போயிட்டு வந்தாச்சா..??
மிக்க மகிழ்ச்சி.
அருமை பகிர்வு...
இவளவு புத்தகங்களா??
புத்தகங்கள் = நல்ல நண்பன்
வாழ்த்துகள் ...
எனக்கென்னமோ அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது :)).//
நடக்கும் நடக்கணும் ....!
வாங்கிய புத்தகங்களைப் பற்றியதான பகிர்வுக்கு நன்றி.
நீங்கள் படித்ததில் சிறந்த புத்தகத்தை பற்றி எழுதுங்கள்.
நினைவுகளுடன் -நிகே- said...
விமர்சனம் அழகு//
நன்றி நி நி ..:))
தியாவின் பேனா said...
நானும் திங்கட்கிழமை பார்க்கப்போறன் பிறகு விரிவா சொல்லுறன்//
கண்டிப்பா ...
வருகைக்கு நன்றி தியா :))
butterfly Surya said...
இன்னொரு ரவுண்ட் போயிட்டு வந்தாச்சா..??
மிக்க மகிழ்ச்சி.//
ஆமா ஜி .. இன்னும் கூட போக வேண்டும் ...:))
seemangani said...
அருமை பகிர்வு...
இவளவு புத்தகங்களா??
புத்தகங்கள் = நல்ல நண்பன்
வாழ்த்துகள் ..//
இது கம்மிங்க ..:(
நன்றி கனி ..:)
பிரியமுடன்...வசந்த் said...
எனக்கென்னமோ அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது :)).//
நடக்கும் நடக்கணும் ....!//
அதே தான் பதிவுலக நண்பர்கள் அமர்ந்து புத்தகங்கள் பற்றிய பகிர்தலுக்காகவாவது இது நடக்கவேண்டும் ... நீங்க சொல்றது போல நடக்கும்னுதான் தோன்றுகிறது காலத்தின் கட்டாயமாக கூட இருக்கலாம் ...:) என்னோட ஆசையும் அதுதான் ..நன்றி வசந்த்.
ராமலக்ஷ்மி said...
வாங்கிய புத்தகங்களைப் பற்றியதான பகிர்வுக்கு நன்றி//
மிக்க நன்றி ..ராமலக்ஷ்மி ..:)
சைவகொத்துப்பரோட்டா said...
நீங்கள் படித்ததில் சிறந்த புத்தகத்தை பற்றி எழுதுங்கள்.//
நிச்சயம் நண்பரே ..:)
நீங்களாவது அடுத்த ரவுண்ட்டுல உங்க செலவுல என்னையும் கூட்டிட்டுப் போவீங்கன்னு பார்த்தேன்..!
ஏமாத்துட்டீங்களேண்ணே..!
நல்ல பகிர்வு பலாபட்டறை.
///எனக்கென்னமோ அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது :)).///
அடுத்த ஆண்டு இல்லையென்றாலும் மிக விரைவில் கண்டிப்பாக வரும் என்பதை நம்பிக்கையோடு சொல்லமுடியும்.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நீங்களாவது அடுத்த ரவுண்ட்டுல உங்க செலவுல என்னையும் கூட்டிட்டுப் போவீங்கன்னு பார்த்தேன்..!
ஏமாத்துட்டீங்களேண்ணே..!//
அடுத்த ரவுண்ட்ல போயிடலாம்ணே....::))
S.A. நவாஸுதீன் said...
நல்ல பகிர்வு பலாபட்டறை.
///எனக்கென்னமோ அடுத்த ஆண்டு பதிவர்கள் ஸ்டால் ஒன்று வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது :)).///
அடுத்த ஆண்டு இல்லையென்றாலும் மிக விரைவில் கண்டிப்பாக வரும் என்பதை நம்பிக்கையோடு சொல்லமுடியும்//
கண்டிப்பா நடக்கணும் நவாஸ் ஜி ..:)
Post a Comment