பலா பட்டறை: அகழி

அகழி



என்னை சுற்றிய ஒழுக்கச்சுவற்கள்
பாசி பிடிக்க ஆரம்பித்துவிட்டது
வெளிவர துடித்து
மேலேறும்பொதெல்லாம்
ஒவ்வொன்றாய் வழுக்கி
உயரத்திற்கு கொண்டு போகிறது
அகழிகள் சூழ் ஒழுக்கச்சுவற்றின்
விளிம்புகள் எப்போதும்
திரும்ப வா
என்ற வாஞ்ஞையுடன்
நான் விழுந்ததை
பார்த்துக்கொண்டிறுக்கிறது
மவுனமாய்...

-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி,போன பதிவை படித்த, பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும்... 

//பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை.//  

இதுதான் எனக்கு தோன்றிய MATTER கதை வடிவில் எப்படி சொல்லலாம் என்று யோசித்தது..முதலில் அங்கே நான் கூற விரும்பியது..மேலே உள்ள செய்திதான் என்றாலும், ஒரு சாவு அரசாங்கத்தில் எந்த DEPARTMENT க்கு சொந்தமானது என்ற கேள்வியும், யார் எப்படி பதிவு செய்ய போகிறார்கள் என்ற வழியும். அது போக போலீஸ் ஸ்டேஷன் எல்லை தகராறுகளில் பிணத்துக்கு யார் பொறுப்பேற்பது என்பது எந்த அளவுக்கு சரி என்பது எனக்கு புரியாத ஒன்று. தேர்தல் காலங்களில் யானையை கூட ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்ற மறுத்த செய்திகள் படித்திருக்கிறேன். இங்கே வண்டி இடித்து விழுந்தால்தான் அது என் கேசு, இல்லையென்றால் வேறு எங்காவது போ என்ற விதிகள் சகிக்கவில்லை (எனக்கும் சில நண்பர்களுக்கும் சில நிகழ்வுகள் இவ்வாறு நடந்திருக்கிறது). சாதாரணமாய் சாலையில் போகும் சக மனதருக்குள்ள அக்கறை கூட அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களுக்கு இல்லை. நம் மதிப்பு அவ்வளவுதான்.

ஆனால் இவ்வளவு விஷயம் எல்லாருக்கும் புரியும் வரையில் நான் எழுதி இருக்கிறேனா என்றால் இல்லை ..முடியவில்லை.:) நிறைய காலம் பிடிக்கும். அல்லது முடியாமல் போகலாம்.

ஆனால் கவிதையில் (!?) ஓரளவு என்னால் ஒரு பகுதியை தொட முடிந்தது. அதையும் சுருக்கி முதலில் உள்ள வாக்கியம் போல் சொல்லி அதை மொத்தமாய் உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமென்றால் ...அடேங்கப்பா..எழுதுவது சாதாரணமானதில்லை..கடின உழைப்பு தேவை..எனக்கும் நன்றாக தெரியும். இதை ஒரு TRIAL & ERROR மாதிரி மன்னித்து ..ஹி ஹி .. (என்னது மொத்தமும் ERRORஆஆஆ?? ) 

 அய்யய்யோ ... 10 வரியில் விளக்கம் முதலில் எழுத பழக வேண்டும்.:)) 


டிஸ்கி 1 : வெறுமன விளக்கம்ன்னு போட்டா அடிக்க வருவீங்களோன்னு தான் ஒரு கவிதை (!??)
டிஸ்கி 2: எழுத்து பிழை முடிந்த வரை திருத்துகிறேன் ,, இருப்பினும் சுட்டிக்காட்டவும் நன்றி. 
டிஸ்கி 3: ஸ்ஸ்ஸ் போதும் எனக்கே கண்ண கட்டுது..... ::))))))))




20 comments:

கலகலப்ரியா said...

/டிஸ்கி 2: எழுத்து பிழை முடிந்த வரை திருத்துகிறேன் ,, இருப்பினும் சுட்டிக்காட்டவும் நன்றி. //

இப்போ தலை வலிக்குதே... இனிமே வந்து அந்த வேலைய மட்டும் பண்ணிட்டு போறோம்... =))...

கவிதை அருமை..

பூங்குன்றன்.வே said...

கவிதை வழக்கம் போல நச்..

/டிஸ்கி 3: ஸ்ஸ்ஸ் போதும் எனக்கே கண்ண கட்டுது..... ::)))))))) //

எனக்கும்தான் பாஸ் :)))))

Chitra said...

ஆனால் இவ்வளவு விஷயம் எல்லாருக்கும் புரியும் வரையில் நான் எழுதி இருக்கிறேனா என்றால் இல்லை ..முடியவில்லை.:) நிறைய காலம் பிடிக்கும். அல்லது முடியாமல் போகலாம்...........முடியும். முடியும். முடியும்.

என் நடை பாதையில்(ராம்) said...

/*அதையும் சுருக்கி முதலில் உள்ள வாக்கியம் போல் சொல்லி அதை மொத்தமாய் உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமென்றால் ...அடேங்கப்பா..எழுதுவது சாதாரணமானதில்லை*/

எங்களுக்கும் சாதாரணமில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களின் சமுதாயம் பற்றிய அக்கறை பிடித்து இருக்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

ஜிகர்தண்டா Karthik said...

கவிதை நன்றாக இருக்கிறது பலா.. ஆனால் புரியவில்லை எனக்கு :)
மூளை எனக்கு ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கிறது.
இன்னும் இரண்டு முறை படித்து பார்கிறேன்.
ஆனால் அதக்கு கீழுள்ள வரிகளுக்கு சலாம், உண்மையை சொல்லியுள்ளீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு.

///பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை///

போன பதிவிலேயே நல்லாப் புரிஞ்சுதே.

Thenammai Lakshmanan said...

கவிதை நல்ல இருக்கு பலா பட்டறை

என்ன தினம் ஒன்று வந்துருது ?

அண்ணாமலையான் said...

தினம் வர்றதுன்னா நியூஸ் பேப்பர் இத்யாதிகளை சொல்லலாம். ஆனா சுவையா சொல்றதுக்கு திறமை வேனும்.. வாழ்த்துக்கள்....

Paleo God said...

கலகலப்ரியா said...
/டிஸ்கி 2: எழுத்து பிழை முடிந்த வரை திருத்துகிறேன் ,, இருப்பினும் சுட்டிக்காட்டவும் நன்றி. //

இப்போ தலை வலிக்குதே... இனிமே வந்து அந்த வேலைய மட்டும் பண்ணிட்டு போறோம்... =))...//

ஙே....:))))

Paleo God said...

பூங்குன்றன்.வே said...
கவிதை வழக்கம் போல நச்..

/டிஸ்கி 3: ஸ்ஸ்ஸ் போதும் எனக்கே கண்ண கட்டுது..... ::)))))))) //

எனக்கும்தான் பாஸ் :))))//

எனக்கே கட்டும்போது...:)) நன்றி.பூ.

Paleo God said...

Chitra said...
ஆனால் இவ்வளவு விஷயம் எல்லாருக்கும் புரியும் வரையில் நான் எழுதி இருக்கிறேனா என்றால் இல்லை ..முடியவில்லை.:) நிறைய காலம் பிடிக்கும். அல்லது முடியாமல் போகலாம்...........முடியும். முடியும். முடியும்//

நன்றி..நன்றி...நன்றி.::))))

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்) said...
/*அதையும் சுருக்கி முதலில் உள்ள வாக்கியம் போல் சொல்லி அதை மொத்தமாய் உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமென்றால் ...அடேங்கப்பா..எழுதுவது சாதாரணமானதில்லை*/

எங்களுக்கும் சாதாரணமில்லை//

நன்றி ராம்..//

Paleo God said...

T.V.Radhakrishnan said...
அருமை.//

Thank you sir:))

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
உங்களின் சமுதாயம் பற்றிய அக்கறை பிடித்து இருக்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே நம் எல்லோருக்குமே இருக்கிறது ::))

Paleo God said...

ஜிகர்தண்டா Karthik said...
கவிதை நன்றாக இருக்கிறது பலா.. ஆனால் புரியவில்லை எனக்கு :)
மூளை எனக்கு ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கிறது.
இன்னும் இரண்டு முறை படித்து பார்கிறேன்.
ஆனால் அதக்கு கீழுள்ள வரிகளுக்கு சலாம், உண்மையை சொல்லியுள்ளீர்கள்//

அப்படியெல்லாம் சொல்ல இது அமர காவியம் அல்ல அல்ல அல்ல என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டேனே... நன்றி ஜிகர் ...

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை நல்லா இருக்கு.

///பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை///

போன பதிவிலேயே நல்லாப் புரிஞ்சுதே.//

அதுக்கில்ல நவாஸ் ஜி ஒரு கருத்த எப்படி சுவாரஸ்யமா முழுவதும் சொல்லமுடியும் என்பதற்கான ஒரு சிறிய முயற்சி ...::))

Paleo God said...

thenammailakshmanan said...
கவிதை நல்ல இருக்கு பலா பட்டறை

என்ன தினம் ஒன்று வந்துருது ?//

ஐயையோ இனிமே வராம பாத்துகிடறேன் ...:)) நன்றி மேடம் .

Paleo God said...

அண்ணாமலையான் said...
தினம் வர்றதுன்னா நியூஸ் பேப்பர் இத்யாதிகளை சொல்லலாம். ஆனா சுவையா சொல்றதுக்கு திறமை வேனும்.. வாழ்த்துக்கள்..//

நன்றி மல சார் ...அடுத்த பதிவு என்னவோ ??? ::))