நினைவிருக்கட்டும்
வைக்கும் பாதங்களடியில்
ஏதோ ஒரு உயிர்க்குடும்பம்
வீணாய் விஷமாய் தூக்கிப்போடும்
ஏதோ ஒன்றும் எவற்றிற்கோ அமுதமாய்
சாப்பிட்டு மூடிய இலையினுள்
பல உயிரிகளுக்கான உணவுகள்
பந்தி முடிந்து வீசிய எச்சில் இலை தொட்டியில்
பந்தி ஆரம்பிக்க காத்திருந்தது காகம், நாயுடன்
சில மனிதர்களும்...
விதியை மதியால் வெல்ல
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.
நிற்காமல் நான் போனால்தான் என்ன
உன் வீட்டு முற்றத்தில் தான்
அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறதே
என் மனம்
முகம் கழுவும்போது கூட சரியாய்
கவனிப்பதில்லை நான்
ஆனால் உன்னால் தான் முடிகிறது
உள்ளங்கைகளை
பச்சையத்தில் அலங்கரித்து காயவைத்து
சிவப்பாக்கும் மருதாணி கோலமிட...
நான்
சிறகுகள் வெட்டப்பட்ட
தந்தை பறவை
கொஞ்சம் பொறு
என் பொன் குஞ்சே
உன் சிறகுகள் உதிர்த்த பிறகு
கேள்விகள் கேள்..
எப்படி பறக்கலாம் என்று
நானும் அப்படித்தான்
தெரிந்துகொண்டேன்..
35 comments:
கவிதையும் வரிகளும் அழகு...
சில கவிதைகள் அருமை.
Small suggestion: தலைப்பு பெரிதாய் வைக்காதீர்கள். ரெண்டு வார்த்தைக்குள் இருந்தால் நலம். சிலவற்றில் முதல் வரி பெரிதாக (Bold) தலைப்பு போல் எழுதி உள்ளீர்கள்..Take care
சாப்பிட்டு மூடிய இலையினுள்
பல உயிரிகளுக்கான உணவுகள் ........ சின்ன கவிதையில் பெரிய சிந்தனை.
சின்ன சின்னக் கவிதைகளின் சிந்தனை எல்லாமே சிறப்பு. வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு சின்னக் கவிதையிலும் பெரிய விஷயம் இருக்கு. எல்லாமே நல்லா இருக்கு.
அனைத்தும் அருமை..
//உன் வீட்டு முற்றத்தில் தான்
அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறதே
என் மனம் //
ரொம்பவும் ரசித்தேன்..
அப்புறம் அந்த 'சாலை விதி' ரொம்பவும் டச்சிங்!!!
உள்ளங்கையை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். --நிஜமாகவே. உள்ளங்கை கவிதை ரொம்ப ரசித்தேன்.
-வித்யா
ரொம்ப பிடிச்சிருக்கு எல்லா கவிதைகளும்!
படம் பிரமாதம்!
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.
எல்லா வரிகளும் மிக அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...
சின்ன சின்ன கவிதைகள்..... superb!!!
எல்லா கவிதைகளும் அருமை வரிகளும் அழகு பாலா...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது....நேரம் இருந்தால் இங்கும் வரவும்...
http://ganifriends.blogspot.com
விதியை மதியால் வெல்ல
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.//
எல்லாமே நல்லாயிருக்கு இந்த கவிதை நச்..!
ரொம்ப நல்லாருக்கும்மா:)
கவிதையும் வரிகளும் அழகு...
January 7, 2010 10:56 AM
ஐந்தும் அருமை பலா
:-)
பஞ்ச ரத்ன கீர்த்தனக் கவிதைகள் !
Sangkavi said...
கவிதையும் வரிகளும் அழகு..//
மிக்க நன்றி சங்கவி..:))
மோகன் குமார் said...
சில கவிதைகள் அருமை.
Small suggestion: தலைப்பு பெரிதாய் வைக்காதீர்கள். ரெண்டு வார்த்தைக்குள் இருந்தால் நலம். சிலவற்றில் முதல் வரி பெரிதாக (Bold) தலைப்பு போல் எழுதி உள்ளீர்கள்..Take care//
நன்றி மோகன் சார்..:))
Chitra said...
சாப்பிட்டு மூடிய இலையினுள்
பல உயிரிகளுக்கான உணவுகள் ........ சின்ன கவிதையில் பெரிய சிந்தனை//
நன்றி சகோதரி..:))
ராமலக்ஷ்மி said...
சின்ன சின்னக் கவிதைகளின் சிந்தனை எல்லாமே சிறப்பு. வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி..மேடம்..:))
S.A. நவாஸுதீன் said...
ஒவ்வொரு சின்னக் கவிதையிலும் பெரிய விஷயம் இருக்கு. எல்லாமே நல்லா இருக்கு.//
மிக்க நன்றி நவாஸ்..::))
butterfly Surya said...
அனைத்தும் அருமை..//
நன்றி சூர்யா ஜி..:))
பூங்குன்றன்.வே said...
//உன் வீட்டு முற்றத்தில் தான்
அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறதே
என் மனம் //
ரொம்பவும் ரசித்தேன்..
அப்புறம் அந்த 'சாலை விதி' ரொம்பவும் டச்சிங்!!!//
நன்றி நண்பா..::))
Vidhoosh said...
உள்ளங்கையை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். --நிஜமாகவே. உள்ளங்கை கவிதை ரொம்ப ரசித்தேன்.
-வித்யா//
அப்படிங்களா..:)) நன்றி மேடம்.:))
பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு எல்லா கவிதைகளும்!
படம் பிரமாதம்!//
மிக்க நன்றிண்ணே..::)))
கமலேஷ் said...
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.
எல்லா வரிகளும் மிக அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள்..//
நன்றி கமலேஷ்...::))
Priya said...
சின்ன சின்ன கவிதைகள்..... superb!!!//
நன்றி ப்ரியா ஜி..:))
seemangani said...
எல்லா கவிதைகளும் அருமை வரிகளும் அழகு பாலா...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது....நேரம் இருந்தால் இங்கும் வரவும்...
http://ganifriends.blogspot.com//
அடிக்கடி வரேன்..பக்கம் திறக்கத்தான் முடியல நண்பா..:(
நன்றி..:)
பிரியமுடன்...வசந்த் said...
விதியை மதியால் வெல்ல
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.//
எல்லாமே நல்லாயிருக்கு இந்த கவிதை நச்..!//
மிக்க நன்றி வசந்த்..::))
வானம்பாடிகள் said...
ரொம்ப நல்லாருக்கும்மா:)//
நன்றி சார்.. இன்னும் சிறப்பா எழுதி உங்க பேரயாச்சும் காப்பாத்தனும்...::))
சே.குமார் said...
கவிதையும் வரிகளும் அழகு.//
நன்றி குமார்..:))
thenammailakshmanan said...
ஐந்தும் அருமை பலா
:-)//
நன்றி சகோதரி...:))
//
நிற்காமல் நான் போனால்தான் என்ன
உன் வீட்டு முற்றத்தில் தான்
அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறதே
என் மனம் //
அருமை
சாப்பிட்டு மூடிய இலையினுள்
பல உயிரிகளுக்கான உணவுகள்
பந்தி முடிந்து வீசிய எச்சில் இலை தொட்டியில்
பந்தி ஆரம்பிக்க காத்திருந்தது காகம், நாயுடன்
சில மனிதர்களும்... //
மிகா அருமைங்க. பொங்கல் வாழ்த்துக்கள்
Post a Comment