பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..







எத்துனை முறை வழுக்கிக்கொண்டு
போனாலும் விளக்கிலிட்ட திரியாய்
உறிந்தெரிக்கிறாய்...
உனக்கென்ன ஜொலிஜொலிப்பு..,
பிரகாசம் ஊரெல்லாம் உன்பக்கம்
முகமெல்லாம் கரியாக சொத்தென்று
வீசியபின்னும்
ஒரு எலிக்காவது உணவாகிறேன்
உன் ஜொலிப்பில்
அடுத்த கரி முகத்துக்கு
ஆழ்ந்த அனுதாபத்துடன் .








எண்பது வயது என் தந்தையின்
இருமலைப்போலிருமும்
என் குழந்தையின் கேலியை
ரசிக்க முடியவில்லை...
என் பேரக்குழந்தைகளின் கேலிகள்
சட்டம் போட்டு மாலையிட்ட
என் படத்தை பார்த்திருக்குமோ
என்ற பயமாயுமிருக்கலாம்...


**  ** ** ** **



கோவிலில்
நான் வீணாக்கிய
நாட்களை
நினைவுபடுத்தினான்
இறைவன்
நாட்காட்டியின்
தாள்களில்
குங்குமம் மடிக்கும்போது...









என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது

உன் சுயம்வரத்தில்
மாலைகள் மட்டுமே
பங்கேற்க வேண்டும்
மறந்தவைகள் அல்ல

அடியே
என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல..

                 :((((

செவிப்பறை தட்டி
வாடா என்று குரல் கொடுப்பவனே

வேட்டி தூக்கி மடித்தாலும்
மல்லுக்கட்டும்
களிறுகள் யாருமிலர் இங்கே
பூனைகளுக்கு நடுவில் பிளிறுவது மறந்து
பூனை உயிரில் தன்னுயிர் யாசித்த சுயம்புகள்

போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..
உனக்கும் பூக்கள் சாலையில் சிதறக்கூடும்...




 இது இந்த நண்பர்களுக்காக



35 comments:

சீமான்கனி said...

///எத்துனை முறை வழுக்கிக்கொண்டு
போனாலும் விளக்கிலிட்ட திரியாய்
உறிந்தெரிக்கிறாய்...
உனக்கென்ன ஜொலிஜொலிப்பு..,
பிரகாசம் ஊரெல்லாம் உன்பக்கம்
முகமெல்லாம் கரியாக சொத்தென்று
வீசியபின்னும்
ஒரு எலிக்காவது உணவாகிறேன்
உன் ஜொலிப்பில்
அடுத்த கரி முகத்துக்கு
ஆழ்ந்த அனுதாபத்துடன் .//

ரசித்தேன் பாலா...

//எண்பது வயது என் தந்தையின்
இருமலைப்போலிருமும்
என் குழந்தையின் கேலியை
ரசிக்க முடியவில்லை...
என் பேரக்குழந்தைகளின் கேலிகள்
சட்டம் போட்டு மாலையிட்ட
என் படத்தை பார்த்திருக்குமோ
என்ற பயமாயுமிருக்கலாம்...//

இது அருமை...வாழ்த்துகள் பாலா....இம்ம்ம்...

என் நடை பாதையில்(ராம்) said...

எப்டித்தான் எழுதுவாஞ்களோ! இவிஞ்கலுக்கு மட்டும் இப்படி கவித வருதே!

நல்லாதேன் இருக்கு!

Ramesh said...

குங்குமம்.. கோயிலுக்கு ஏம்ப்பா போன எய்டு தெரிஞ்சுக்கலாமா??
கவிதை மனசுக்குள்

Ramesh said...

குங்குமம்.. கோயிலுக்கு ஏம்ப்பா போன எய்டு தெரிஞ்சுக்கலாமா??
கவிதை மனசுக்குள்

சைவகொத்துப்பரோட்டா said...

//எப்டித்தான் எழுதுவாஞ்களோ//

இதேதான் எனக்கும் தோன்றியது. ஒவொரு வரிகளையும் ரசித்தேன், அருமை.

நட்புடன் ஜமால் said...

என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல..]]

வரிகள் அழகாய்
வலிகள் அதிகமாய்

sathishsangkavi.blogspot.com said...

//என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது//

ரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை....

அண்ணாமலையான் said...

கலக்கல் பலா...

சங்கர் said...

//போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..//

அருமை, ஆனா நேத்து நீங்க சொல்லியிருக்காவிட்டால் எனக்கு புரிந்திருக்காது :)))

Chitra said...

சின்ன சின்ன கவிதைகளில் பெரிய பெரிய விஷயங்கள். அருமை.

மீன்துள்ளியான் said...

//போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..
உனக்கும் பூக்கள் சாலையில் சிதறக்கூடும்...
//

அருமை ..

//என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது //

கலக்கிட்டீங்க போங்க

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லா இருக்கு பலா பட்டறை

ரிஷபன் said...

நல்ல சிந்தனை.. ரசிக்க வைத்தன..

vasu balaji said...

எல்லாம் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

மந்திரன் said...

கவிதைகள்
என்னமோ பண்ணுது , என்ன வென்று சொல்லத் தெரியவில்லை

ஹேமா said...

நடுவில் இரண்டு கவிதைகள் நல்லாயிருக்கு.

Thenammai Lakshmanan said...

நாளுக்கு நாள் உங்க உயரம் அதிக மாகிக் கிட்டே போகுது ஷங்கர்

ப்ரியமுடன் வசந்த் said...

என் பேரக்குழந்தைகளின் கேலிகள்
சட்டம் போட்டு மாலையிட்ட
என் படத்தை பார்த்திருக்குமோ
என்ற பயமாயுமிருக்கலாம்//

அட... அருமை ஷங்கர்

நாட்காட்டி கவிதையும் சூப்பர்ப்...

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசிக்கவிதை படிச்சதும் புரியல ஷங்கர்...

நீங்க சொன்னதுக்கப்புறம் படிச்சதும் மூஞ்சில அடிச்சதுமாதிரியிருந்துச்சு...
என்னையில்லை அந்த நிகழ்வுக்கு காரணமானவர்களுக்கு சரியான சவுக்கடி...

இனி புரியலைன்னா மெயில் பண்ணி கேக்குறேன் சொல்லிடுங்க ஷங்கர் சரியா?

Paleo God said...

seemangani said...
ரசித்தேன் பாலா..//
இது அருமை...வாழ்த்துகள் பாலா....இம்ம்ம்..

மிக்க நன்றி..கனி..:)

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்) said...
எப்டித்தான் எழுதுவாஞ்களோ! இவிஞ்கலுக்கு மட்டும் இப்படி கவித வருதே!

நல்லாதேன் இருக்கு!//

மிக்க நன்றி..ராம்..:)

Paleo God said...

றமேஸ்-Ramesh said...
குங்குமம்.. கோயிலுக்கு ஏம்ப்பா போன எய்டு தெரிஞ்சுக்கலாமா??
கவிதை மனசுக்குள்//

::)) நன்றி றமேஸ்..::))

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
//எப்டித்தான் எழுதுவாஞ்களோ//

இதேதான் எனக்கும் தோன்றியது. ஒவொரு வரிகளையும் ரசித்தேன், அருமை//

நன்றி நண்பரே..:))

Paleo God said...

நட்புடன் ஜமால் said...
என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல..]]

வரிகள் அழகாய்
வலிகள் அதிகமாய்//

அதே அதே...மிக்க நன்றி ஜமால்::)

Paleo God said...

Sangkavi said...
//என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது//

ரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை...//
மிக்க நன்றி சங்கவி,:))

Paleo God said...

அண்ணாமலையான் said...
கலக்கல் பலா..//

மிக்க நன்றி தல::))

Paleo God said...

சங்கர் said...
//போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..//

அருமை, ஆனா நேத்து நீங்க சொல்லியிருக்காவிட்டால் எனக்கு புரிந்திருக்காது :)))//

ஒரளவுக்கு சரியா வந்துட்டனா..::))

Paleo God said...

Chitra said...
சின்ன சின்ன கவிதைகளில் பெரிய பெரிய விஷயங்கள். அருமை//

மிக்க நன்றி சகோதரி..::))

Paleo God said...

மீன்துள்ளியான் said...
//போகட்டும்... எதற்கும் வாடி என்றழைத்துப்பார்
ஒருவேளை ஒண்டிக்கு ஒண்டி
யாரேனும் கிட்டக்கூடும்..
உனக்கும் பூக்கள் சாலையில் சிதறக்கூடும்...
//

அருமை ..

//என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்காது //

கலக்கிட்டீங்க போங்க//

மிக்க நன்றி மீன்ஸ்...:))

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
எல்லாமே நல்லா இருக்கு பலா பட்டறை//

மிக்க நன்றி நவாஸ்..::))

Paleo God said...

ரிஷபன் said...
நல்ல சிந்தனை.. ரசிக்க வைத்தன..//

மிக்க நன்றி ரிஷபன்,,::))

Paleo God said...

வானம்பாடிகள் said...
எல்லாம் அருமை.

//
மிக்க நன்றி சார்..::))

Vidhoosh said...

விளக்குதிரி, பேரன், காலண்டர் பேப்பர், தோழி, ரொம்ப ரசித்தேன். இவை எல்லாத்துக்கும் மட்டும் ஓட்டும் போட்டு விட்டேன். 7/7


///யாரேனும் கிட்டக்கூடும்..
உனக்கும் பூக்கள் சாலையில் சிதறக்கூடும்..////
இங்கே என்ன மனவருத்தம் என்று தெரியாததால் :(

Vidhoosh said...

ம்ம்ம். அதானே. இத்தனை வருத்தம் தெரிக்கிறதே என்னாச்சோன்னு பாத்தேன்..
புரிஞ்சதும், யப்பா சாமி,
அசந்தே போனேன் .... வாவ்.. இதை விட எப்படி சொல்வது? சூப்பர் சார்.

நீங்க ஏற்கனவே எழுத்தாளரான்னு தெரில.. ஆனா நிச்சயம் இன்னும் நிறைய சங்கதிகளை பேனா மூலம் பேசும் ஆற்றல் நிரம்ப உள்ளது. எழுதிக் கொண்டே இருங்க.

=வித்யா.