பலா பட்டறை: ஒரு கவிதை, சில படங்கள்..

ஒரு கவிதை, சில படங்கள்..















தினமும் நடக்கும்
சாலையிலென் காலை
நடையில் ஒரு நாள்

ஒரு இழவு விழுந்த
சோகத்திலிருந்த
கூவத்தின் ஓரத்தில் தகரத்தாலான
வசிப்பிடத்தில்

எப்போதும் போலவே
கடந்து சென்றிருப்பேன்

என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே

என்ற ஓலத்தில்

ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம் என் மனதை அவளோடு
மாரடிக்கவைத்துவிட்டது..



.

19 comments:

நட்புடன் ஜமால் said...

சொல்ல இயலாத அல்லது தெரியாத துயரம் கொள்கிறேன்


[[ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம்]]

cheena (சீனா) said...

ஒரு பிள்ளை - அதுவும் இறந்து போகிறது - மறு பிள்ளைக்கு வழி இல்லாத போது ......

துயரம் - சோகம் - ம்ம்ம்ம்ம்

கமலேஷ் said...

ஒரு வழிபோக்கனின் வலியாகிபோன நடைபாதை கவிதை...வலியோடு இருக்கிறது....படங்கள் மிக அருமை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே//

:-(((

ராமலக்ஷ்மி said...

அழகான படங்கள் என நினைத்தப்டி கடந்து வந்த போது கவிதை உலுக்கி விட்டது.

sathishsangkavi.blogspot.com said...

அழகான படம், அழுத்தமான கவிதை...

சந்தான சங்கர் said...

பிம்பங்களுக்குபின்

கவிதையின் சோகநிழல்..

Ramesh said...

படங்கள் அருமை..
ஒருகவிதை = பல கவிதை மனசுக்குள்
நல்லா இருக்கு பலா வழக்கம்போல அசத்தல்

ப்ரியமுடன் வசந்த் said...

//என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே

என்ற ஓலத்தில்

ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம் என் மனதை அவளோடு
மாரடிக்கவைத்துவிட்டது..
//

:(

டக்குன்னு சின்ன விஷயங்கள் பெரிய சோகத்தை ஏற்படுத்துகிறது இந்த கவிதையில் ஏனோ எனக்கும் சம்பந்தம் இருப்பதாலோ என்னவோ

Vidhoosh said...

நடைபயிலும் காலைகளில்
எப்போதும் திறந்திருக்கும்
தகரக்குடிசையின் கதவற்ற வாயில்
அவனது ஆபரேஷன் ஐநூறால்
திரைசீலை கட்டியிருந்தது நேற்று

என் மனதை மாரடிக்க வைத்த "விட்டுட்டு போயிட்டியே எஞ்செல்லமே"
என்றவளின் ஓலம் கேட்காதிருந்தால்
இன்றும் கடந்திருப்பேன்
===========
படங்கள் அழகு

க.பாலாசி said...

//ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம் என் மனதை அவளோடு
மாரடிக்கவைத்துவிட்டது..//

உங்கள் மனதைமட்டுமல்ல....

vasu balaji said...

ம்ம்.

முரளிகண்ணன் said...

துயரமான சம்பவம்

நாடோடி said...

கடைசி நான்கு வரிகள் மனதைக் கரைத்த வரிகள்..

Unknown said...

வணக்கம்.போட்டோ அருமை

balavasakan said...

தினமும் நடக்கும்
சாலையிலென் காலை
நடையில் ஒரு நாள்

அழகான வரிகள் உருக்கமான கவிதை ...

சீமான்கனி said...

//என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே//

''சோகம்....''தாயின் கதறல்... எதார்த்த வரிகள் ...படங்களும் நல்ல இருக்கு....

Romeoboy said...

படங்கள் அருமை ..

கவிதை No Comment :D

S.A. நவாஸுதீன் said...

படங்கள் அனைத்தும் அருமை.

கவிதை - ஒரு இனம்புரியாத படபடப்பை ஏற்படுத்தி விட்டது.