சந்ததிகளுக்கான இயக்கத்திலிருந்த
வேகத்தை பார்த்த நண்பன்
கல்வீசி துரத்தும்போது
சிரித்தபடி சொன்னான்
நாய்களுக்கு சிரிக்கத்தெரியாதுசரிதான்
ஆறறிவு அதற்கில்லை..
தோப்புகளழித்து வீடுகளான
கிரீன் பார்க் அவென்யுவில்
அவ்வப்போது
கடந்து போகையில் நான் கேட்டது
வெக்கையா இருக்கு ஏசி போடுப்பா..
ரொம்ப குளிருது கதவ மூடும்மா ..
தப்பிப் பிழைத்த மரத்திலொரு
கூட்டில் பறவையும் குஞ்சும்
மழையில் உதறியவாறு
மழை பற்றி குறை ஏதும்
சொல்லாமலிருந்தது
சரிதான்
ஆறறிவு அதற்கில்லை..
.
.
20 comments:
உண்மைதான், ஆறறிவு தப்பி பிழைத்து வாழ இடைஞ்சலாய் இருப்பதால்
நிறைவான கவிதைகள்...
விலங்குகளின் ஆறவதுஅறிவு எப்படியிருக்கும்?
பாக்குறீங்களா சங்கர்?
http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_08.html
கலக்கல் நண்பரே, மீண்டும் ஒருமுறை பொங்கல் நல் வாழ்த்துக்கள்
வாவ். மூனுமே.... க்ளாஸ்.
அருமை சங்கர்.
மிக்க நன்றி :: vellinila
மிக்க நன்றி :: ..வசந்த்..பார்த்தேன்::)
மிக்க நன்றி :: சைவகொத்துப்பரோட்டா
மிக்க நன்றி :: நவாஸ்,,::)))
அருமையான பாடம் கற்வேண்டியது மனிதன் அதாவது ஆற்றிவு இருந்தும் பலநேரம் ஐந்தறிவைவிட !!!!!!!!!!!!!!!!!!!
என்னசொல்ல கவிதை சூப்பர்
அன்புடன் மலிக்கா said...
அருமையான பாடம் கற்வேண்டியது மனிதன் அதாவது ஆற்றிவு இருந்தும் பலநேரம் ஐந்தறிவைவிட !!!!!!!!!!!!!!!!!!!
என்னசொல்ல கவிதை சூப்பர்//
நன்றி மலிக்கா..::))
பலா கவிதை ஒன்னும் ஒன்னும் ஒரு பஞ்ச் மாதிரி அருமைய இருக்கு ...
என்ன பண்றது மனிசன் முன்னேற்றம் என்ற பேர்ல பின்னால போய்கிட்டு இருக்கான் .
மிக்க நன்றி மீன்ஸ்..
நிஜம்தான். இந்த ஆறறிவு படுத்தற பாடு கொஞ்ச நஞ்சமில்லை.:)) சூப்பர்ப்
வானம்பாடிகள் said...
நிஜம்தான். இந்த ஆறறிவு படுத்தற பாடு கொஞ்ச நஞ்சமில்லை.:)) சூப்பர்ப்//
மிக்க நன்றி சார்..::))
வாழ்த்துக்கள்...
எனக்கென்னமோ இரண்டாவது அதிகமா வாட்டியது ஷங்கர்
நிஜமான ஒன்றுதான், வாழ்த்துக்கள்!
அண்ணாமலையான் said...
வாழ்த்துக்கள்...//
நன்றி மல சார்..::))
D.R.Ashok said...
எனக்கென்னமோ இரண்டாவது அதிகமா வாட்டியது ஷங்கர்//
மிக்க நன்றி நண்பரே..::)
Priya said...
நிஜமான ஒன்றுதான், வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி ப்ரியா ஜி..:))
குறை காண்பது மனிதருக்கு மட்டுமே உரிய ஏழாவது அறிவு!
:) அழாகாய் வாய்த்திருக்குங்க கவிதை.
/// சரிதான்
ஆறறிவு அதற்கில்லை..///
இதை நீக்கி விடுங்கள். படிக்கிறவர் கற்பனையில் இன்னும் அழகாகும் இக்கவிதை.
-வித்யா
காக்கை குருவி எங்கள் ஜாதியா
ஷங்கர்
Post a Comment