பலா பட்டறை: யாசகம்..

யாசகம்..





பல வருடங்களாக கவனிக்கும் ஒரு நபர் ஜி.பி ரோடும், அண்ணா சாலையும் சந்திக்கும் அந்த ஒரு வழி சாலையில் வெலிங்டன் ப்ளாஸா அருகில் யாசகம் பெரும் ஒரு பாட்டி. சிக்னலில் வண்டிகள் நிற்கும் சில நொடிகள் அவருடைய அன்றைய பொழுதிற்கான வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொருவராய் சென்று கையை நீட்டுவார், இல்லை என்று லேசாக தலையை ஆட்டினால் கூட போதும், அடுத்த நபரை பார்க்க போய் விடுவார் (Time management) முகம் சுளிப்பதோ, இன்னொரு முறை கெஞ்சுவதோ ஒரு போதும் பார்த்ததில்லை.

சோர்வு ஏற்படும்போது அருகில் உள்ள டீ கடையில் ஒரு டீ யை போட்டுவிட்டு மறுபடியும் யாசகம். ஒரே இடம், ஒரே வேலை, வித விதமான மனிதர்கள், வித விதமான அவமதிப்புகள் இருப்பினும் ஒரு போதும் அந்த மூதாட்டியை சலிப்பாய் பார்த்ததில்லை, சுற்றி நடக்கும் எதுவும் அவரை பாதித்ததாக தெரியவில்லை, எத்துனையோ முறை நான் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது கவனித்திருக்கிறேன், வருவார் காசு கொடுப்பார், தனியே வாங்கிப்போய் டீ குடிப்பார் அவ்வளவுதான் பக்கத்திலிருக்கும் யாரிடமும் அப்போது யாசகம் கேட்டு நான் பார்த்ததில்லை. அவருக்கு போட்டியாய் சில சமயம் சில பேர் வந்தும் அவர்களை ஏதும் சொல்லாது தன் பாட்டுக்கு ஒவ்வொருவராய் அனுகி யாசகம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

என்னிடம் வேலை செய்த மார்கெட்டிங் இளைஞர்களுக்கு நான் எப்போதும் உதாரணம் காட்டியது இவரைத்தான். தயங்காமல் வாடிக்கையாளரை அனுகுவதற்கும், பல பேரை நேர விரயம் இல்லாமல் சந்திப்பதன் மூலம் சில வியாபாரமாவது கிடைக்கும் என்றும், சமய சந்தர்ப்பம் பார்த்து விற்பனை விஷயங்கள் பேசுவதும், ஏதேனும் முக சுளிப்பான பதில்கள் வந்தால் புறம் தள்ளி, அடுத்த வாடிக்கையாளரை மலர்ச்சியுடன் அனுகவும், போட்டிகள் இருந்தாலும், செய்யும் வேலை ஒன்றாகவே இருப்பது சலிப்பை தர அனுமதிக்காது அடுத்த இடத்திற்கு நகரவும் இவரையே உதாரணம் காட்டுவதுண்டு.

என்ன சார் பிச்சைகாரங்களை போய்..உதாரணம் காட்டுரீங்க என்று கேட்கும் கேள்விகளுக்கு என்னுடைய பதில்..அவங்களும் நாமளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் சொல்லப்போனால் அவங்க நம்மள விட ஒரு படி மேலதான் பாருங்க அவங்க எடத்துக்கு எல்லாவிதமான வாடிக்கையாளர்களும் வராங்க..சுலபமான வழி..ஆனா நம்மளோடது அப்படி இல்ல நாமதான் ஒவ்வொரு வாடிக்கையாளரா தேடிப்போறோம்... இன்னும் சரியா சொல்லப்போனா நம்மளோட ரீச் அவங்களோடத விட ரொம்ப கம்மி. ஒவ்வொரு நாளும் அவங்க வேலை சென்சாதான் அவங்களுக்கு சாப்பாடு, நமக்கு அது இல்லங்கறதுதான் நம்மளோட மைனஸ் என்பதாய் இருக்கும்.




யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .


கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது இவரிடம் நேரில் கற்ற ஒன்று. வேலைக்கு வருவதற்குத்தான் சம்பளம், வேலை செய்வதற்கு என்னா தறுவீங்க? என்று கேட்பவற்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். அடுத்த முறை அந்தப்பக்கம் போக நேர்ந்தால் துணி மூடிய தலையுடன் கொம்பு ஊன்றி வரும் அந்த நிராயுதபாணிக்கு ஏதேனும் கவச குண்டலம் தந்துவிட்டு போங்கள் நண்பர்களே.                 
          

புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??

47 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla padhivu

sathishsangkavi.blogspot.com said...

யோசிக்க வைத்த பதிவு...

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??//

hats oof boos!

vasu balaji said...

நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். கொத்தாகச் சில்லறை அள்ளிக் கொடுத்தாலும், பொறுக்கியெடுத்து ஒற்றை ரூபாய் கொடுத்தாலும் ஒரே புன்னகை.

வாழ்க்கைப் பாடம் படிக்கத் தெரிகிறது ஷங்கர். மனிதம் தானே வரும். படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது. கீப் இட் அப்.

malarvizhi said...

nanraaga ullathu

malarvizhi said...

nanraaga ullathu.

Ashok D said...

இன்னும் சுருங்க எழுதனும் சொல்லவந்தது மூனாவது பேராவிலேயே புரிஞ்சிடுச்சு...

நல்லாயிருந்தது.

The more u knock the doors, the more u get the sales :) & the more u get முகசுளிப்புகள் (மூனாவத choicela விட்டுரலாம்

markettingla இருக்கற கவிஞர் எனக்கு ஆச்சரியமே!

நல்ல mood அதான் பெரிய பி.

(மூனாவது: 2 சுழியா இல்ல 3)

Paleo God said...

T.V.Radhakrishnan said...
nalla padhivu//

நன்றி சார்..::)

Ashok D said...

சொல்ல மறந்துட்டேன் அந்த கடைசி வரி நச்

Paleo God said...

Sangkavi said...
யோசிக்க வைத்த பதிவு.//

நன்றி நண்பரே..::))

Paleo God said...

பா.ராஜாராம் said...
மிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??//

hats oof boos!//

நன்றி பாராண்ணே...::))
என்னையும் கலங்க வைத்தவர்கள் அவர்கள்..

Paleo God said...

malarvizhi said...
nanraaga ullathu//

நன்றி மலர்விழி..:)

Paleo God said...

வானம்பாடிகள் said...
நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். கொத்தாகச் சில்லறை அள்ளிக் கொடுத்தாலும், பொறுக்கியெடுத்து ஒற்றை ரூபாய் கொடுத்தாலும் ஒரே புன்னகை.

இத படிச்ச உடனே எனக்கு கண்ணு கலங்கிடிச்சி சார்..அவங்க அப்படித்தான்... கடவுளையும் புத்தனையும் இவர்களிடம் பார்க்கலாம்.

வாழ்க்கைப் பாடம் படிக்கத் தெரிகிறது ஷங்கர். மனிதம் தானே வரும். படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது. கீப் இட் அப்//

மிக்க நன்றி..:)

Ramesh said...

அந்த உள்ளத்தை யாசிக்கும் நீங்கள் மீண்டும் சொல்லுறேன் நம்ம கட்சிதாங்க.
marketing க்கு சரியாக பொருத்தியிருக்கிறீர்கள்.
//அனுகி// என்று இருக்குது அது அணுகி என்று வரவேண்டும்.

ஆனால் இங்கு இது பொருந்தும் முனகல் என்று பார்த்தால்

//யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே.//

உண்மைதாங்க

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??///

மனசு குளிருது
வாழ்த்துக்கள் சங்கர்

Paleo God said...

D.R.Ashok said...
இன்னும் சுருங்க எழுதனும் சொல்லவந்தது மூனாவது பேராவிலேயே புரிஞ்சிடுச்சு...

நல்லாயிருந்தது.

The more u knock the doors, the more u get the sales :) & the more u get முகசுளிப்புகள் (மூனாவத choicela விட்டுரலாம்

::)) நீங்களும் நம்ம கேஸ்தானா..??

markettingla இருக்கற கவிஞர் எனக்கு ஆச்சரியமே!//
அட அதுலதாங்க நிறைய மனிதர்களை சந்திக்க முடியும்..::))



நல்ல mood அதான் பெரிய பி.//

மிக்க நன்றி..:))

(மூனாவது: 2 சுழியா இல்ல 3)//


மூன்றுதான்..::))

Paleo God said...

றமேஸ்-Ramesh said...
அந்த உள்ளத்தை யாசிக்கும் நீங்கள் மீண்டும் சொல்லுறேன் நம்ம கட்சிதாங்க.
marketing க்கு சரியாக பொருத்தியிருக்கிறீர்கள்.
//அனுகி// என்று இருக்குது அது அணுகி என்று வரவேண்டும்.

ஆனால் இங்கு இது பொருந்தும் முனகல் என்று பார்த்தால்

//யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே.//

உண்மைதாங்க

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??///

மனசு குளிருது
வாழ்த்துக்கள் சங்கர்//

மிக்க நன்றி நண்பா..::))

சீமான்கனி said...

அருமையான பதிவு பாலா நல்ல உதாரணம் காட்டி இருக்கீங்க....யாசக பாடம்...

Paleo God said...

D.R.Ashok said...
சொல்ல மறந்துட்டேன் அந்த கடைசி வரி நச்//

ஏங்க சரிதானே..::)) ரெண்டுத்துல ஒண்ண தொட்டுத்தானே ஆகனும்..::)

Paleo God said...

seemangani said...
அருமையான பதிவு பாலா நல்ல உதாரணம் காட்டி இருக்கீங்க....யாசக பாடம்...//

நன்றி கனி..::))

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

good one,

யாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??//

மனிதத்திலும் நம்பிக்கை இல்லாமல் சிலபேர் இருக்கிறார்களே...

Paleo God said...

மோகன் குமார் said...
நல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்//

Thank you Mohan ji..:))

Paleo God said...

நாஞ்சில் பிரதாப் said...
good one,

யாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??//

மனிதத்திலும் நம்பிக்கை இல்லாமல் சிலபேர் இருக்கிறார்களே...//

பல பேர் நண்பரே.. இது மனிதம் மதிப்பவருக்காக.. அட அந்த மூதாட்டியே மனிதம் பற்றிய கவலை இல்லாது பார்க்கும் பல நூறு பேர்களில் கையில் கிடைக்கும் சில மனிதத்தை வாங்கிக்கொள்கிறார்கள்...
என்ன செய்ய..

//யாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.//

நாமும் ஒரு வகையில் யாசிப்போரே என்ற நிலையில் பார்த்தது அது..:))

நன்றி நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும்..:)

Chitra said...

யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .......சிந்தித்து பார்த்தால், பல உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்.

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை, சக மனிதர்களை மதிக்கும் உங்கள் பண்பு பாராட்டப்பட வேண்டியது.
பாராட்டுக்கள் நண்பரே.

நட்புடன் ஜமால் said...

தேவையுற்றவர்களை தாமாக தேடி கொடுப்பதே உதவி

அவர்களே கேட்டுவிட்ட பின் கொடுக்க வேண்டுமென்பது கடமை.

--------------------------------

புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??]]

அருமை நண்பரே
இரண்டிலும் உண்டு நம்பிக்கை

நல்ல இடுக்கை.

S.A. நவாஸுதீன் said...

///புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??///

பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நல்லதொரு இடுகை ஷங்கர்.

Thenammai Lakshmanan said...

//பா.ராஜாராம் said...
மிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??////

WELL SAID SHANKAR AND PAARAA....

Paleo God said...

Chitra said...
யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .......சிந்தித்து பார்த்தால், பல உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்//

ரொம்ப வலிக்கும் ...::))
நன்றி..சகோதரி..:)

Paleo God said...

நட்புடன் ஜமால் said...
தேவையுற்றவர்களை தாமாக தேடி கொடுப்பதே உதவி

அவர்களே கேட்டுவிட்ட பின் கொடுக்க வேண்டுமென்பது கடமை.

--------------------------------

புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??]]

அருமை நண்பரே
இரண்டிலும் உண்டு நம்பிக்கை

நல்ல இடுக்கை//

மிக்க நன்றி ஜமால்..::))

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
///புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??///

பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நல்லதொரு இடுகை ஷங்கர்.//

நன்றி தோழரே...::)

Paleo God said...

thenammailakshmanan said...
//பா.ராஜாராம் said...
மிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.

//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??////

WELL SAID SHANKAR AND PAARAA..//

thank you.. sister..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பல விசயங்களை உணர்த்துகிறது பதிவு..நன்றி

ஹேமா said...

சில வாழ்க்கைச் ச்மபவங்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.யாசகமும் அதில் ஒன்று.எழுதிச் சிந்திக்க வைத்த விதம் அருமை.

Vidhoosh said...

நல்ல பதிவு. வாழ்கையை கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள். நிச்சயம் இன்னும் சிறந்த எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


--வித்யா

Paleo God said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
பல விசயங்களை உணர்த்துகிறது பதிவு..நன்றி..//

மிக்க நன்றி முத்துலெட்சுமி::)

Paleo God said...

ஹேமா said...
சில வாழ்க்கைச் ச்மபவங்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.யாசகமும் அதில் ஒன்று.எழுதிச் சிந்திக்க வைத்த விதம் அருமை//

மிக்க நன்றி ஹேமா அவர்களே..:))

Paleo God said...

Vidhoosh said...
நல்ல பதிவு. வாழ்கையை கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள். நிச்சயம் இன்னும் சிறந்த எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


--வித்யா//

15 வயதிலிருந்து கவனிக்க ஆரம்பித்தாயிற்று..எழுத்தில் கொண்டுவரத்தான் முயற்சிகள்..

மிக்க நன்றி வருகைக்கும்..வாழ்த்துக்கும்..:))

வெள்ளிநிலா said...

dear friend, pls read www.vellinila.blogspot.com, if u like pls send ur postal address.

பாலா said...

அதே மாதிரி... முதலாளித்துவத்தையும் அவங்க கிட்டயே கத்துக்கலாம்.

அவங்களுக்காக.. மத்தவங்க உழைச்சி.. இவங்களுக்கு காசு போவுது.

--

பாரீஸ் கார்னரில் ஒரு பிச்சைக்கு 3-4 வீடு இருக்குதாம். ரெண்டுக்கு விட்டுட்டு.. இவரு... இதை ‘தொழிலா’ பண்ணுறாரு.

என்னம்மா உதாரணம் தர்றீங்க! :)

---

தூங்கப் போறேன்! குட் நைட்!

Paleo God said...

@பாலா சார்... குடுத்த லின்க்க விட்டுட்டு என் லின்க்குக்கு ஏன் வந்தீங்க...

சரியான பருத்தி வீரன் சித்தப்பு நீங்க..:)

கலகலப்ரியா said...

:)..

தேவன் மாயம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்ப்ரே!

Paleo God said...

ஷங்கர்...

மிக மிக அருமையாக எழுதப்பட்ட பதிவு....

மனித நேயம் வளர்க்கும் பதிவு..... அதிலும், அந்த கடைசி வரிகள்..... ஸோ டச்சிங் தலைவா...

//அடுத்த முறை அந்தப்பக்கம் போக நேர்ந்தால் துணி மூடிய தலையுடன் கொம்பு ஊன்றி வரும் அந்த நிராயுதபாணிக்கு ஏதேனும் கவச குண்டலம் தந்துவிட்டு போங்கள் நண்பர்களே.//
மென்மேலும் நல்ல பதிவுகளை பதிய....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்........

நான் தான் லேட்டா வந்து இருக்கேன் போல இருக்கு... ஏற்கனவே பெரிய தலைகள் (வித்யா...அஷோக்...கலகலப்ரியா...ஹாலிவுட் பாலா, முத்துலெட்சுமி, ஹேமா... நவாஸ்.....ஜமால்....சித்ரா....மோகன் குமார்....பா.ரா.... வானம்பாடிகள் எல்லாம் வந்தாச்சே....)


*-***************-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஆர்.கோபி
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com
//

மிக்க நன்றி கோபி சார்... உங்களின் மின் அஞ்சலுக்கு, வாழ்த்துக்கு...::))

Paleo God said...

ellinila said...
dear friend, pls read www.vellinila.blogspot.com, if u like pls send ur postal address.//

இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே..:)

Paleo God said...

தேவன் மாயம் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்ப்ரே!//

மிக்க நன்றி..திரு.தேவன்:)

பாலா said...

யாருங்க ஆர்.கோபி..., ப்லாகுக்கு புதுசா??? நம்மை போய்... ‘பெரிய ஆளு’ங்கறாரு? :) :)