பலா பட்டறை: பதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு

பதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு

நேற்று புத்தக கண்காட்சியில் கிழக்கு புத்தக அரங்கு அருகில் பதிவர் சந்திப்பு நடந்தது. நானும் சென்றிருந்தேன். ஆகக்கூடி நாங்கள் ஆற்றிய இலக்கியப் பேருரையில் கிழக்கு பதிப்பகத்தின் பக்கசுவர்கள் ஆட ஆரம்பித்து சுமார் மூன்று முறை சாயாம இருங்க சார் ஸ்டால் விழுந்துடப்போவுது என்ற எச்சரிக்கைகள் வரப்பெற்றோம். நான்காவது முறையாக போன எனக்கு நேற்றுதான் நல்ல கூட்டத்தை காண முடிந்தது (இதில எங்க கூட்டம் வேற) மொத்த யூத்து கும்பல்ல நாந்தான் படு கெழம் ::))

அது சரி என்ன இலக்கிய கூட்டம்ன்னு கேட்டீங்கன்னா 'வெள்ளிநிலா' என்ற பதிவர்களுக்கான ஒரு தனி மாத இதழ் வெளிவர இருக்கும் செய்திக்கான அறிமுக உரையாடல் நடந்தது 'ஷர்புதீன்' என்ற ஒரு 'நல்லவர்' இதற்கான பெரு முயற்சிகள் மேற்கொண்டு பதிவர்களுக்கான இதழ் குறித்த சிறப்பு முன்னோட்டத்தை அளித்துக்கொண்டிருந்தார். மேலதிக விவரங்களுக்கு 'வெள்ளிநிலா' பக்கத்தை பார்க்கவும்.

பதிவர்களின் பதிவிலக்கிய தமிழான 'உள்குத்து', 'வெளிகுத்து','வட போச்சே', 'ரொம்ப நல்லவரு',நாங்களும் ரௌடிதான், என்னா வில்லத்தனம், மைனஸ் ஒட்டு,  யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க, மானிட்டர்,  என்டர் கவிதைகள், யூத்து, இட்லி வடை போட்டோ, இன்ன பிற   - இலக்கிய அர்த்தங்களுக்கான கோனார் தமிழ் உரை நூல்கள் புத்தக கண்காட்சியில் ஷர்புதீன்க்கு  எங்கு தேடியும் கிடைக்காததால் 'வெள்ளிநிலா' விற்கு சக பதிவர்களாகிய உங்களின் மேலான பேராதரவு தரவேண்டி அன்புடன் கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இதழை இலவசமாய் பெற மின் அஞ்சல் செய்தால் வீடு தேடி வரும் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இலக்கிய கூட்டத்தின் புகை படங்களுக்கு, மேலதிக சுவாரஸ்ய தகவல்களுக்கு


ஜாக்கி சேகர்,(இவரது பின்னூட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்ட  பதிலில் எந்த உள்குத்தும் இல்லை என்பதையும் அவருக்கு எப்போதும் கால்ஷீட் உள்ளது என்பதும் இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :) )


கேபிள் ஷங்கர்,  

ஜெட்லிஷங்கர்சித்து,

போன்ற நண்பர்களின் பதிவுகளை பார்க்கவும்.
கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த திருவாளர்கள்.  தண்டோரா, அவிங்க ராசா, நர்சிம், கேபிள் ஜி, பட்டர்பளை  சூர்யா, எறும்பு ராஜகோபால், அசோக்.D.R.,அப்துல்லா, ஜெட்லி, ஷங்கர், மீன்துள்ளியான், கார்க்கி, காவேரி கணேஷ், பைத்தியக்காரன் (எ) சிவராமன், குகன், ரோமியோபாய், ,அகநாழிகைவாசு,  புலவன் புலிகேசி, வெள்ளி நிலா பத்திரிக்கை ஆசிரியர் சர்பூதின், நிலாரசிகன், மயில் ராவணன், செல்வகுமார், போன்றவர்களுக்கு நன்றி !: )யாருடைய பெயராவது விட்டுப்போயிருப்பின் மன்னிக்க (அட என் பேரே இல்லீங்க:( )

மறவாதீர் 'வெள்ளிநிலா' 'வெள்ளிநிலா' 'வெள்ளிநிலா'....

23 comments:

வெள்ளிநிலா said...

நன்றி சங்கர் !

Prathap Kumar S. said...

சர்புதினின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
போட்டோ போட்டிருக்கலாமே...

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்கணா :)

S.A. நவாஸுதீன் said...

வெள்ளிநிலா - நல்ல விஷயம்

ஜெட்லி... said...

உங்க profile ஸ்டில் மற்றும் உங்களை நேரில் பார்த்தவுடன் ஒரு வெள்ளை ரஜினி
வந்துட்டார் என்றே நினைக்க தோன்றியது....(கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி)....
ஒரு வேளை வருங்காலத்தில் நீங்க பெரிய நடிகர் ஆயிடிங்கனா எனக்கு தலைமை மன்ற தலைவர் போஸ்ட் கொடுத்துடுங்க அண்ணே....

என் நடை பாதையில்(ராம்) said...

/*மொத்த யூத்து கும்பல்ல நாந்தான் படு கெழம்*/

அப்போ போட்டோல இருக்கறது....!??

butterfly Surya said...

நன்றி.

வாழ்த்துகள்.

மணிஜி said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

Chitra said...

"வெள்ளி நிலாவுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

வெள்ளி நிலாவுக்கு வாழ்த்துக்கள்....

கார்க்கிபவா said...

//ஒரு வேளை வருங்காலத்தில் நீங்க பெரிய நடிகர் ஆயிடிங்க//

இப்பவே பெருசாயிட்டாரு.. இன்னும் நடிகர் மட்டும்தான் ஆகனும். ரைட்டா சகா?

Paleo God said...

vellinila said...
நன்றி சங்கர் //

நன்றி vellinila:)

Paleo God said...

நாஞ்சில் பிரதாப் said...
சர்புதினின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
போட்டோ போட்டிருக்கலாமே.//

நண்பரே நான் படம் எடுக்கவில்லை அதனால் தான் நண்பர்களின் தளங்களுக்கு லின்க்...
நன்றி..:))

Paleo God said...

D.R.Ashok said...
பகிர்வுக்கு நன்றிங்கணா :)//

சரிங்ணா....::))

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
வெள்ளிநிலா - நல்ல விஷயம்//

நன்றி நவாஸ்..:))

Paleo God said...

ஜெட்லி said...
உங்க profile ஸ்டில் மற்றும் உங்களை நேரில் பார்த்தவுடன் ஒரு வெள்ளை ரஜினி
வந்துட்டார் என்றே நினைக்க தோன்றியது....(கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி)....
ஒரு வேளை வருங்காலத்தில் நீங்க பெரிய நடிகர் ஆயிடிங்கனா எனக்கு தலைமை மன்ற தலைவர் போஸ்ட் கொடுத்துடுங்க அண்ணே...//

பயங்கரமா வெள்ளையா யோசிக்கிரீங்களே...

ஒரு வேளை...//

சாப்பாடு மட்டுமே இப்பொதைக்கு என் கவலை..:))
நன்றி நண்பர்களே..::))

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்) said...
/*மொத்த யூத்து கும்பல்ல நாந்தான் படு கெழம்*/

அப்போ போட்டோல இருக்கறது....!?//

கண்ணாடி போட்டுட்டு பாருங்க ராம்..::)) இல்லன்னா கார்க்கி கிட்ட வாங்கிக்குங்க..::))

Paleo God said...

butterfly Surya said...
நன்றி.

வாழ்த்துகள்.//

நன்றி ஜி..::))

Paleo God said...

தண்டோரா ...... said...
நீங்கள் மொக்கை பதிவரா?

தெரிலீங்க...

நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்//

சரீங்க...::))

Paleo God said...

Chitra said...
"வெள்ளி நிலாவுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.//

நன்றி சகோதரி..::))

Paleo God said...

Sangkavi said...
வெள்ளி நிலாவுக்கு வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி சங்கவி:)

Paleo God said...

கார்க்கி said...
//ஒரு வேளை வருங்காலத்தில் நீங்க பெரிய நடிகர் ஆயிடிங்க//

இப்பவே பெருசாயிட்டாரு.. இன்னும் நடிகர் மட்டும்தான் ஆகனும். ரைட்டா சகா?//

இப்பவே பெருசாயிட்டாரு ரைட்டா சகா?//

சரிதான் சகா..
-----------------------------------
நடிகர் மட்டும்தான் ஆகனும்.//

இதுல நீங்க கார்க்கி மட்டும்தான் சகா கிடையாது சரியா..::)

புலவன் புலிகேசி said...

நான் இந்த வார டரியல்லதான் வெள்ளிநிலா பத்தி எழுதலாமுன்னு இருக்கேன்..