புத்தக கண்காட்சியில் திரு.பா.ராகவன், அண்ணன் உண்மை தமிழனிடம், பதிவுன்னா பத்து வரிக்குமேல எழுதாத, சினிமா விமர்சனம்னா ஒரு வரியோடநிறுத்திக்க என்று சிரியஸா (எழுத்து பிழை அல்ல )அட்வைஸ் பண்ணினார். நடக்கிற கதையா அது. என்று எறும்பு ராஜகோபால் கேட்டுக்கொண்டிருந்தபோது அருகில் நானும் இருந்தேன். முடியுமா என்று சோதித்து பார்த்ததில் வந்தது இது.
திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))
இனி உங்க பாடு....:).......
”சார்... ”
சிக்னல் சிவப்பிலிருந்தது குறையும் எண்கள் இன்னும் 120 நொடிகள் காத்திருக்கச் சொல்லியது. அப்போதுதான் பார்த்தேன்..
”சார்.. ” அருகே நின்றிருந்த போக்குவரத்து காவலரிடம் வந்த சிவப்பு சட்டைகாரரை
“இன்னாயா”
”சார்..அங்க ஒரு வயசான அம்மா அப்படியே கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாம கிடக்கறாங்க,செத்துட்டா மாதிரி தெரியிது சார் வாங்க சார்..”
”என்ன ஏன்யா கூப்புட்ற பக்கத்துல போலிஸ் ஸ்டேஷன் இருக்கு பார் அங்க போய் சொல்லு, நான் ட்ராபிக் புரியுதா சட்டப்படி நான் பாக்க முடியாது ..”
”இல்ல சார் ஒரு ஆட்டோ இடிச்சிட்டு தான் அந்தம்மா விழுந்துட்டாங்க போல....”
”ஆங்.. அப்படியா.. சரி.. இரு நான் வரேன்..”
கண்ட்ரோல் ரூம்..கர..கர.. என்று சப்தமிடும் வாக்கி டாக்கியுடன் அவர் மெல்ல சிவப்பு சட்டைக்காரருடன் நடந்து போனார்..
”சரி யாராவது இடிச்ச ஆட்டோ நம்பர் பாத்தாங்களா..”
“இல்ல சார்..”
“இதக்கூட பாக்காம ஏன்யா என் தாலியறுக்கறீங்க...”
”இல்ல சார் நான் பொடவ விக்கறவன்..”
சிவப்பு நொடிகள் 07 சமீபம் காட்டியது..
”ஏன் பொடவ விக்கறவன் நம்பர் பாக்கக்கூடாதுன்னு எதுனா சட்டமா?”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சள் வாகனம்
இடித்து சிவப்பாய்
சரிந்த யாருடைய
தாயோ
இன்றைய இறப்பு
பதிவுக்கான பழுப்புக்
காகிதங்களை நிறப்பப்போகிறார்
இடித்துச்சென்றவனின்
தடயங்கள் பிறந்த நீண்ட சாலை
வெயிலில்
தகித்துக்கொண்டிருந்தது...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
டிஸ்கி : அண்ணன் உண்மை தமிழனுக்கும் நன்றி.:)
18 comments:
நல்லா இருக்கு பலா பட்டறை
சரிந்த. /சறிந்தல்ல/
அழகான இடுகை..
நேரம் கிடைக்கும்போது இதைபார்க்கவும்
http://fmailkka.blogspot.com
அருமையாக இருக்கின்றது. எதுக்கு சிறுகதை, நடுவில் ஒரு கவிதை... சூப்பர்
கவிதையில் எழுத்து நடை வித்யாசமாய் நல்லா இருக்கு பலா வாழ்த்துகள்
நன்றாக இருக்கிறது.
பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை. ........
The best!
"நிறப்பப்போகிறார்" இல்லை நிரப்பப்போகிறார்.
nice one.
///பொறுப்பற்ற ஒரு நபரின் தவறால் இறந்த ஒரு பெண்மணியின் சாவுக்கு யார் பொறுப்பேற்பது என்று முடிவாகவில்லை. ////
அருமை பலாபட்டறை. நல்ல முயற்சி. நிறைவான ரிசல்ட்.
போச்சுடா இங்கயும் ஃப்ரூப் ரீடிங்கா?
அருமையாக இருக்கின்றது...
கவிதை சொல்ல வந்த விசயத்தை முழுதாய் சொல்லி விட்டது .2010 ல புது அவதாரம் எடுத்து இருக்கீங்க போல..வாழ்த்துக்கள்...
சும்மாச்சுக்கும்:
இருந்தாலும் பத்து வரிக்கும் மேல்தான் இருக்கு. இது பதிவா / சினிமா விமர்சனமா? ;)
sincerely speaking: நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் நண்பா நல்ல பதிவுக்கு
விஜய்
வித்யாசமா இருக்கு
:)
அட இப்படியும் எழுதலாமா பலா பட்டறை
நல்லா இருக்கு
நண்பா,திரும்ப வந்துட்டேன்...இடுகை அசத்தல்..
கலக்குங்க,
"நிறப்பப்போகிறார்" அல்ல, நிரப்பப்போகிறார் என்பது சரி.
வல்லினம், மெல்லினம், இடையினம் முக்கியம் தலைவரே.
இடையினம்னா யாரோட இடைன்னு கேக்காதீங்க.
ரொம்ப அருமை!!
Post a Comment