பலா பட்டறை: ஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2

ஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2





ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயத்தை அவரது வலைபக்கத்தில் அறிவித்து, விருப்பமிருந்தால் கழக கண்மணிகள் மெரினா கடற்கரையில், மஹாத்மா சிலைக்கு பின் புறம் மாலை வந்து சந்திக்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.

ஸ்வாமி ஓம்காரின் எல்லா பதிவுகளையும் நான் படித்ததில்லை படித்த சில பதிவுகளும், அதற்கான பின்னூட்டங்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் அவரை ஒரு சக பதிவராகவே என் மனது என்ணிக்கொண்டது. பொதுவாகவே எனக்கு கூட்டிய கூட்டங்கள் அலர்ஜி ஆன்மீகமோ, அரசியலோ! மேலும் End User Satisfaction is Important. என்பதில் எனக்கு மிக ஆழ்ந்த நம்பிக்கை உண்டு, சாமானிய மக்களுக்காக, அவர்களால் எளிதில் அனுக முடியாத எதுவும் எனக்கு அக்கறையே இல்லை (எந்த சப்ஜெக்டாக இருந்தாலும்).

இவர் பக்கங்கள் பார்க்க நேர்ந்தபோது இவர் தனக்கென எந்த ஒளிவட்டமும் வைத்துக்கொள்ளாது தான் கற்றதை, உணர்ந்ததை வெளியிடுகிறார், பதிவு செய்கிறார், அதையே நீங்களும் உணருங்கள் என்று கட்டாயப்படுத்தவதில்லை,

வாழ்க்கை எனும் பாதைகள் ஒளிந்த காட்டில் உள் நுழையும் போது தன்னால் முடிந்த வரை சுற்றிபார்த்து வந்த இந்த மனிதர், கானகத்தின் வாயிலில் நின்று கொண்டு உள்ளே தேனும் இருக்கிறது, விஷமும் இருக்கிறது பார்த்து ஜாக்கிரதையாக போங்கள், நான் குடித்த தேன் இனிப்பு உங்களுக்கும் அது கிடைக்கும் தேடுங்கள், குடித்து இனிப்பு அனுபவியுங்கள், இரண்டு பேரின் இனிப்பின் சுவையை நமக்கு தெரிந்த மொழிகளில் பேசலாம் என்றுதான் கூறுகிறார். நாம் போன பாதை எது என்று ஆர்வத்துடன் கேட்கிறார்,

“அத நான் எங்கங்க பார்தேன், நீங்க சொன்ன ரூட்லயே போய்ட்டு வந்துட்டேன் ஸூப்பரா இருந்திச்சு நீங்க சொன்னாமாதிரியே..” என்பதை இவர் ரசிக்க காணோம்.

 கிட்டத்தட்ட ஆயிரத்தில் ஒருவன் பட விமர்சனம் மாதிரிதான் ஒரே படம் ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு கருத்து, பிடிச்சிதா பிடிக்கலையா முக்கியமில்லை, படம் பார்த்தீங்களா? அது கேள்வி? என் விமர்சனம்தான் பெஸ்ட் அதயே நீயும் சொல்லு என்று சொன்னால் கோவம் வருகிறதல்லவா?? படமே பார்கலயா ரொம்ப சந்தோஷம். முடிந்தது விஷயம்.

எதையோ தேடி படத்துக்கு போகிறோம் அது கிடைப்பின் ஆஹா ஓஹோ இல்லையா பூட்டகேஸு ன்னு விமர்சனம் பண்ணிட்டு அடுத்த படம், படமே பார்க்கலயா - ”என்னது ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆயிடிச்சா?” அப்படின்னு போய்ட்டே இருக்கிறோம்.

சரி அது என்ன ”சத் சங்கம்”, சென்னையில் பதிவர் சந்திப்புன்னா, செயர்குழு பொதுகுழு கூடி முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டு, அதிகார்வபூர்வமா அறிவிக்கனும், ஸோ இது கிட்டத்தட்ட அதுபோல ஆனா இல்ல:) அதனாலதான் அந்த பேரு. ( அதாவது ரவுண்டுகட்டி ரவுண்டு இல்லாம பேசறது:) )

ப்ளாக்கர்ஸ்/பதிவர்கள் முக்கியமான நோக்கம் என்ன? எதற்காக பதிவு எழுதறீங்க? என்னவிதமான கவனிப்புகள் சமூகத்தில் கிடைக்கிறது? என்பது போல சில விஷயங்கள் கேட்டார், எனக்கு தெரிந்த இரண்டு விஷயம் எங்கோ வெளிநாடுகளில் குடும்பம், சொந்தபந்தங்களை விட்டு, சொந்த மொழி பேச முடியாது தவிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வடிகால், நிறைய நட்புகள் கிடைத்துள்ளன (போட்ட சட்ட பேண்ட்டோட தேசாந்திரியா சுத்தலாம்-ஒரு வேளை சாப்பாடு, தங்க இடம் நிச்சயம்:), ஏதேனும் உதவியா தைரியமாய் தூனிலும் துரும்பிலும் ஒரு பதிவர் இருப்பார் - அப்படித்தானே நண்பர்களே??:-) ) மேலும் என் குழந்தைகளுக்கு என் முகத்தை (அது வேற வாய்..இது..) காட்டவும் இது பயன்படும் என்று நான் ஒரு பிட்டை போட்டேன்.

திரு. அப்துல்லா மொத்த பதிவர்களின் சார்பாக பதிவர்களை பற்றி லைட்டாக/டைட்டாக (எல்லோரும் அமோதித்த) ஒரு கருத்து சொன்னார்.:))


கேபிள் ஜி தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் மற்றும் ஹோட்டல்கள் பற்றி குறி சொன்னது (அது பலித்து பலர் தன் தாயின் நினைவாக போனில் அழுதது) போன்றவைகளை பகிர்ந்துகொண்டார்.

எறும்பு ராஜகோபால் ஸ்வாமியை பார்த்த உடனேயே உள் சக்கரங்கள் சுழல ஆரம்பித்து மோன நிலையை எட்டி விட்டதால் அவர் பேசிய தேவ பாஷை எனக்கு புரியவில்லை அவரே அவர் பக்கத்தில் அதை விவரிப்பார்.:)

பால சாமி ஜெட்லி சங்கர் (என்னோட சேர்த்து மொத்தம் மூணு சங்கர்) அமைதியாக ஜோதியில் ஐக்கியமாகி வழக்கம்போல மொபைலில் படமெடுத்துதள்ளிக்கொண்டிருந்தார்.

துளசி தளம் - துளசிகோபால் மேடம் ஆர்வத்துடன் வந்திருந்து, கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார் கூடவே காமெராவில் படங்களும். அவரின் ஆர்வமும் வேகமும்.. மேடம் உங்களுக்கு ஒரு சலாம்.::))

திரு.முனுசாமி என்ற வாசகரும் (சென்னை துரைமுகத்தில் பணிபுரிபவர் - இரண்டு பெண்குழந்தைகளுக்கு திருமணம், பேர பிள்ளைகள் எடுத்து ஒரு தேடலில் ஸ்வாமியை பார்க்க வந்திருந்தார். அருகில் அமர்ந்துகொண்டு நிறைய கேள்விகள் கேட்டும், கவனித்தும்.

மேலும் இரண்டு வாசகர்கள் திரு.உமாசங்கர், திரு. ரங்கன்- கேள்விகள், அனுபவங்கள், கவனிப்பு.

முதலில் மஹாத்மா சிலை பின்புறமுள்ள படிக்கட்டில் ஆரம்பித்தோம், சாதா ஆத்மாக்கள் உட்காரக்கூடாது என்று ஒரு செக்யூரிட்டி சொன்னதால், குடியரசு தினத்துக்காக அருகிலிருந்த புல் வெளியில் பலகைகள் போட்டு ஆணி அடித்துகொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டே நடந்தபோது, வேறு ஒரு செக்யூரிட்டி புல்லுல நடக்கக்கூடாது தெரியுமா? ன்னு, முறைச்சார், நான் அங்கே புல்லில் பலகை தட்டியவர்களை காண்பித்து நாங்களும் பொட்டி தட்டரவங்கதான் என்றதும் பேசாமல் போய்விட்டார். (கையில் தடி இருந்தது தண்டல்கார் போல).

இதெல்லாம் வேலைக்காவாது என்று முடிவெடுத்து கடைசியாக கடற்கரை மணலில் ரவுண்டு கட்டி மீட்டிங் ஆரம்பித்து 2 மணி நேரம் இனிதே கழிந்தது. மற்ற விஷயங்கள் சக பதிவர்கள் இடுகைகளில் காண்க.

தினம் தினம் திருமந்திரம் என்று ஸ்வாமி ஓம்காரின் புத்தகம் வாங்கி வந்தேன். எளிய யாராலும் அணுகக்கூடிய தான் கற்ற வித்தையில் தெளிவு கொண்ட ஒரு நல்ல மனிதர்/நண்பராகவே நான் ஸ்வாமி ஓம்கார் அவர்களை கண்டேன். நீங்களும் அவர் தளத்தில் சுற்றலாம் கேள்விகள் கேட்க்கலாம், இனம் மதம் என்ற வட்டங்கள் இல்லை.

சத்தியமா சக பதிவர்தாங்க. :))

34 comments:

Thenammai Lakshmanan said...

//வாழ்க்கை எனும் பாதைகள் ஒளிந்த காட்டில் உள் நுழையும் போது தன்னால் முடிந்த வரை சுற்றிபார்த்து வந்த இந்த மனிதர், கானகத்தின் வாயிலில் நின்று கொண்டு உள்ளே தேனும் இருக்கிறது, விஷமும் இருக்கிறது பார்த்து ஜாக்கிரதையாக போங்கள், நான் குடித்த தேன் இனிப்பு உங்களுக்கும் அது கிடைக்கும் தேடுங்கள், குடித்து இனிப்பு அனுபவியுங்கள், இரண்டு பேரின் இனிப்பின் சுவையை நமக்கு தெரிந்த மொழிகளில் பேசலாம் என்றுதான் கூறுகிறார். நாம் போன பாதை எது என்று ஆர்வத்துடன் கேட்கிறார்,//

அருமை ஓம்கார் ஜிமற்றும் ஷங்கர் நல்ல பகிர்வு


,

எறும்பு said...

அண்ணா, இதுக்கும் மேல நான் எழுதுறதுக்கு ஏதாவது இருக்கா...

எறும்பு said...

But you missed one intresting topic that we discussed... surely it (title & the matter) will pull the crowd (minimum 200 hits)

If you dont know.. then i will write the post...

guess

;)

ஜெட்லி... said...

//எறும்பு ராஜகோபால் ஸ்வாமியை பார்த்த உடனேயே உள் சக்கரங்கள் சுழல ஆரம்பித்து மோன நிலையை எட்டி விட்டதால் அவர் பேசிய தேவ பாஷை எனக்கு புரியவில்லை அவரே அவர் பக்கத்தில் அதை விவரிப்பார்.:)
//


ரைட்...

எறும்பு said...

//றும்பு ராஜகோபால் ஸ்வாமியை பார்த்த உடனேயே உள் சக்கரங்கள் சுழல ஆரம்பித்து மோன நிலையை எட்டி விட்டதால் அவர் பேசிய தேவ பாஷை எனக்கு புரியவில்லை அவரே அவர் பக்கத்தில் அதை விவரிப்பார்.:)//



Why திஸ் கொலை வெறி??
:)

எறும்பு said...

.

Ashok D said...

ஒய்ட் & ஒய்ட்ல நிக்கறாரே அவர்தான் சாமியாருங்களா?

Paleo God said...

நன்றி தேனம்மை சகோதரி..:)

Paleo God said...

@ எறும்பு:

நான் எழுதினது ஒண்ணுமே இல்ல தல நீங்க தான் எழுதனம். மீ ஒன்லி போட்டோ கிராபர்..:)

உங்களோடதும், கேபிள் ஜி யோடதும் ஆர்வமுடன் எதிர்னோக்கி..உள்ளேன்.:)

Paleo God said...

@ஜெட்லி,

ரை.. ரைட்..”))

Vidhoosh said...

:)) ஆகா..நான் மிஸ் பண்ணிட்டேன்னே...:(

Vidhoosh said...

சொல்லி இருக்கலாமே சகோ!!

Paleo God said...

D.R.Ashok said...
ஒய்ட் & ஒய்ட்ல நிக்கறாரே அவர்தான் சாமியாருங்களா?//

நீங்கதானே அந்த ஞானப்பழத்துக்காக டாடி, மம்மிய சுத்தினீங்க..??

லேட்டாவந்ததுமில்லாம ரவுசு வேற..:)
ஆக்சுவலி அந்த போட்டோ எடுத்ததுதான் சாமியார்..:)

நட்புடன் ஜமால் said...

நல்லா தெளிவா இருக்கே

சென்னையிலும் ஒரு நாள் சந்திக்கனும் மக்களை (அவங்க எல்லோருக்கும் விருப்பம் இருந்தா)

Paleo God said...

Vidhoosh said...
:)) ஆகா..நான் மிஸ் பண்ணிட்டேன்னே...:(

சொல்லி இருக்கலாமே சகோ!!//

ரொம்ப சாரிங்க.. நீங்க படிச்சி இருப்பீங்க வேலை அதனால வரலன்னு நினைச்சிட்டேன்.. இனிமே கண்டிப்பா தகவல் வரும்.

Paleo God said...

நட்புடன் ஜமால் said...
நல்லா தெளிவா இருக்கே

சென்னையிலும் ஒரு நாள் சந்திக்கனும் மக்களை (அவங்க எல்லோருக்கும் விருப்பம் இருந்தா)//

ஜமால்ஸ்ஸ் வொய் திஸ் கொக்கி.. நாமெல்லாரும் கூகிள்தாய் குழந்தை அல்லவா...::)) அசத்திடலாம்..:)

Indy said...

உங்களுக்கு சுவாமி அருள் கிடைத்ததா? புத்தகம் வாங்க சொன்னாரா?

Paleo God said...

Indy said...
உங்களுக்கு சுவாமி அருள் கிடைத்ததா? புத்தகம் வாங்க சொன்னாரா?//

உங்களுக்கு இந்த பதிவு படித்து அருள் கிடைத்ததா??

இந்த பதிவு நான் படிக்க சொன்னேனா??

இதுதான் உங்க கேள்விகளுக்கான பதில். சத்தியமா கிண்டல் இல்லைங்க. ஒரு பகிர்தல்.

வருகைக்கு நன்றி நண்பரே..:)

S.A. நவாஸுதீன் said...

படிக்கும்போதே சந்தோசமா இருக்கு சங்கர்.

இந்தமுறை ஊருக்கு வரும்போது இதுபோன்று எல்லோரையும் சந்திக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

படிக்கும்போதே சந்தோசமா இருக்கு சங்கர்.

இந்தமுறை ஊருக்கு வரும்போது இதுபோன்று எல்லோரையும் சந்திக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

sathishsangkavi.blogspot.com said...

நாங்களும் சென்னையில் இருந்தா வந்து எல்லோரையும் சந்தித்து இருப்போம்...

G.MUNUSWAMY said...

Nanbarukku,
Nan thangalai sandhithu oru naal agiradhu. Ennaipatriya seidhiyai thangal valaipookkalil padinthu iruppadhu padithu ullathil mikka magizhchi. En kudumbatharukkum sandosham. Thangalukku en manamarndha nandrigal pala. Vazhga pallandu neengalum ungal kudumbatharum.
Ippadikku,
G.Munuswamy
Chennai Port Trust.
gmswamynaidu@gmail.com
9600 13 26 19.

ஸ்வாமி ஓம்கார் said...

கவிதை எழுதி எழுதி ... பதிவு எழுதினாலே கவிதை நடையா இருக்கே :)

உங்களை சந்தித்த மாலை பொழுது குளுமையாக இருந்தது...

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
படிக்கும்போதே சந்தோசமா இருக்கு சங்கர்.

இந்தமுறை ஊருக்கு வரும்போது இதுபோன்று எல்லோரையும் சந்திக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்//

நன்றி நவாஸ், கண்டிப்பாக சந்திப்போம்.:)

Paleo God said...

Sangkavi said...
நாங்களும் சென்னையில் இருந்தா வந்து எல்லோரையும் சந்தித்து இருப்போம்..//

அட என்ன சங்கவி, சென்னை வரும்போது சொல்லுங்க பட்டறைய போட்டுடலாம்..:))

Paleo God said...

gmnaidu said...
Nanbarukku,
Nan thangalai sandhithu oru naal agiradhu. Ennaipatriya seidhiyai thangal valaipookkalil padinthu iruppadhu padithu ullathil mikka magizhchi. En kudumbatharukkum sandosham. Thangalukku en manamarndha nandrigal pala. Vazhga pallandu neengalum ungal kudumbatharum.
Ippadikku,
G.Munuswamy
Chennai Port Trust.
gmswamynaidu@gmail.com
9600 13 26 19.//

அட என்னங்க சார், நீங்க பெரியவங்க உங்க வாழ்த்துக்கு சந்தோஷம்.:)) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.:)

Paleo God said...

ஸ்வாமி ஓம்கார் said...
கவிதை எழுதி எழுதி ... பதிவு எழுதினாலே கவிதை நடையா இருக்கே :)

உங்களை சந்தித்த மாலை பொழுது குளுமையாக இருந்தது..//

மிக்க மகிழ்ச்சி ஸ்வாமிஜி.:)

Radhakrishnan said...

ஆஹா இப்பொழுதுதான் எறும்பு ஊறிய தேன் பருகி வந்தேன்.

இங்கே பட்டறையில் மிகவும் அழகாகவே தங்கம் செய்யபபட்டு இருக்கிறது.

பதிவர்களின் சந்திப்பு கண்டு மகிழ்ந்தேன்.

Romeoboy said...

நான் மறந்தே போயிட்டேன் தலைவரே.. ச்சே நல்ல ஒரு சந்திப்பை மிஸ் பண்ணிட்டேன்.

cheena (சீனா) said...

அன்பின் பலா

நல்லதொரு இடுகை - ஓம்காருடனான சந்திப்பு வர்ணனை அருமை

நல்வாழ்த்துகள்

Paleo God said...

வெ.இராதாகிருஷ்ணன் said...
ஆஹா இப்பொழுதுதான் எறும்பு ஊறிய தேன் பருகி வந்தேன்.

இங்கே பட்டறையில் மிகவும் அழகாகவே தங்கம் செய்யபபட்டு இருக்கிறது.

பதிவர்களின் சந்திப்பு கண்டு மகிழ்ந்தேன்//

வாங்க நண்பரே..:)நன்றி

Paleo God said...

||| Romeo ||| said...
நான் மறந்தே போயிட்டேன் தலைவரே.. ச்சே நல்ல ஒரு சந்திப்பை மிஸ் பண்ணிட்டேன்//

கூடிய விரைவில் அடுத்த சந்திப்பு ஏற்பாடு பண்ணிடலாம்..:)

Paleo God said...

cheena (சீனா) said...
அன்பின் பலா

நல்லதொரு இடுகை - ஓம்காருடனான சந்திப்பு வர்ணனை அருமை

நல்வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க..:))

கண்ணகி said...

கடலோரம் காற்று வாங்கிக்கொண்டே அழகா பதிவர் சந்திப்பு நடத்திட்டீங்க.