குடும்பம் நடத்தினாலும்
சுவற்றின் விரிசல்களில்
விழுந்த
பறவைகளின் எச்சத்திலும்
வளர தயாராய்
விருட்சத்தின் விதைகள்..
கண் மூடிய
நித்திரைகளில்
முழிக்காமல்
போய் விடுவேனோ
என்ற பயத்தில்
கனவுகள் மட்டுமே எனை
காப்பாற்றுகின்றன...
கண் மூடிய
நித்திரைகளில்
முழிக்காமல்
போய் விடுவேனோ
என்ற பயத்தில்
கனவுகள் மட்டுமே எனை
காப்பாற்றுகின்றன...
வழியெங்கும்
ஒற்றை கொலுசுகளை
தேடிக்கொண்டிருக்கிறேன்
அட ஒரு தோடுகூட கிடைக்கவில்லை
பணமில்லாதவனின்
வாழ்க்கையில் பசியும்
பிணியும் தேடாமலேயே
கிடைக்கிறது எப்போதும்...
வெறும் பாத்திரங்களோடு
வயிறு நிரம்ப காத்திருக்கிறது
என் வீட்டு ஜீவன்கள்
39 comments:
மூன்றாவது படமும் - வரிகளும்
அருமை.
முதல் கவிதை மீள்பதிவா? புறாவை மீண்டும் ரசிக்கிறேன்.
கனவுகள் பிரமாதம்
ஆதங்கம் :(
உள்ளேன் அய்யா!!!
என்னங்க. முதல் சின்ன கவிதையில் அவ்வளவு positive attitude கொடுத்து அருமையா எழுதிட்டு, அப்புறம் கடைசி சின்ன கவிதையில் முரண்பாடோட முடிச்சிட்டீங்களே?
நட்புடன் ஜமால் said...
மூன்றாவது படமும் - வரிகளும்
அருமை.//
நன்றி ஜமால், இரண்டாவது, மூன்றாவது படம் நான் எடுத்தது..:) முதல் படம் நவாஸ் ஜி என்.ஆர்.ஐ இதயத்திலிருந்து சுட்டது..:)
Vidhoosh said...
முதல் கவிதை மீள்பதிவா? புறாவை மீண்டும் ரசிக்கிறேன்.
இல்லைங்க.. நவாஸ் ஜி கவிதைல பார்த்திருப்பீங்க, அத பார்த்ததும் தோணியது.:)
கனவுகள் பிரமாதம்
ஆதங்கம் :(
நன்றி..:))
ஹாலிவுட் பாலா said...
உள்ளேன் அய்யா!!//
மாணவ்.. அடுத்தது சினிமா விமர்சனம் தயாராய் இருங்கள்...:)
Chitra said...
என்னங்க. முதல் சின்ன கவிதையில் அவ்வளவு positive attitude கொடுத்து அருமையா எழுதிட்டு, அப்புறம் கடைசி சின்ன கவிதையில் முரண்பாடோட முடிச்சிட்டீங்களே?//
இல்லைங்க.. மொத குடும்பம் பறவைகளோடது, மத்த ரெண்டும் மனிதர்களோடது, அதுங்க அருமையாதான் வாழுதுங்க.. நாமதான்...:(
பட்டறையில் பயில வரலாமா?
தண்டோரா ...... said...
பட்டறையில் பயில வரலாமா?//
வாங்க தல...
வடயோட வரவும்..:))
ரசிக்கும்படி இருந்தது .. முதல் கவிதை இன்னும் நன்றாக இருக்கிறது !
வாழ்த்துக்கள்
அருமை
அருமை சங்கர்.
முரணும் அழகுதான்.
சூப்பர்.
பிடிச்சுருந்தது தல..!
அந்த சாமி வேஷம் போட்ருக்க்குற பையன் CUTE.
ஜெனோவா said...
ரசிக்கும்படி இருந்தது .. முதல் கவிதை இன்னும் நன்றாக இருக்கிறது !
வாழ்த்துக்கள்//
நன்றி ஜெனோ::))
T.V.Radhakrishnan said...
அருமை//
நன்றி சார்..:))
butterfly Surya said...
அருமை சங்கர்.
முரணும் அழகுதான்.
சூப்பர்//
நன்றி சூர்யாஜி:)
மூன்றும் அருமை.
♠ ராஜு ♠ said...
பிடிச்சுருந்தது தல..!
அந்த சாமி வேஷம் போட்ருக்க்குற பையன் CUTE//
வாங்க ராஜு..:) அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)
வானம்பாடிகள் said...
மூன்றும் அருமை//
நன்றி சார்..::))
///அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)//
அட...!! :) :) :)
அடுத்த வருஷம் ‘நா’வி’ வேஷம் போடுங்க. எல்லாம் ஒரே கலர்தான்.
ஹாலிவுட் பாலா said...
///அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)//
அட...!! :) :) :)
அடுத்த வருஷம் ‘நா’வி’ வேஷம் போடுங்க. எல்லாம் ஒரே கலர்தான்//
அது ராமர் கதையாமில்ல, என் புள்ள கிருஷ்ணரே நல்லாருக்குப்பா,அப்பதான் உன்ன மாதிரி முறிந்த கவிதகள் எழுதி ஹாலிமாமாவ பழி வாங்குவேன்னு சொல்றான். ::)
க்யா தல... எனி சொல்யுசன்..??
///பறவைகளின் எச்சத்திலும்
வளர தயாராய்
விருட்சத்தின் விதைகள்..///
////கனவுகள் மட்டுமே எனை
காப்பாற்றுகின்றன...///
///வெறும் பாத்திரங்களோடுவயிறு நிரம்ப காத்திருக்கிறதுஎன் வீட்டு ஜீவன்கள்///
எல்லாமே அருமை சங்கர். மூன்றாவது ரொம்ப நல்லா இருக்கு.
உங்க பையன் சோ.......... க்யூட் சங்கர்.
எனக்கு மூன்றுமே பிடிச்சிருக்கு.....முதல் படம் சூப்பர்....
மூன்றுமே முத்திரை பதித்துவிட்டது என் மனதில்.... அருமை.., வாழ்த்துக்கள்....
--
அன்புடன்
கவிநா...காயத்ரி...
"Every little smile can touch somebodies heart"
என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/
நன்றி நவாஸ்.. உங்க கவிதைல அந்த படம் பார்த்ததும் இது எழுதினேன்..:))
நன்றி..கனி..:))
மிக்க நன்றி காயத்ரி..:)
உங்கள் கவிதை நான் ஏற்கனவே வாசித்து பின்னூட்டமும் இட்டுள்ளேன்..:)
//வாங்க தல...
வடயோட வரவும்..:))
//
உங்களுக்கு என்ன
வடை புடிக்கும் பாஸ்.....??
ஜெட்லி said...
//வாங்க தல...
வடயோட வரவும்..:))
//
உங்களுக்கு என்ன
வடை புடிக்கும் பாஸ்.....??//
வா நண்பா..இந்த பம்மல் கே சம்பந்தத்துல, கமல் யாரையோ பாத்து பேச சொல்ல அதையும் டைப் அடிக்குமே ஒரு பார்ட்டி நீ தானா அது..:))
மிகவும் எதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும் அழகிய கவிதைகள். படங்களும் கொள்ளை அழகு.
மூன்றுமே பிடிச்சிருக்கு சங்கர்.
//பசியும்பிணியும் தேடாமலேயேகிடைக்கிறது //
உண்மை ஷங்கர்
மூன்றும் அருமை.
உங்கள் கவிதைகள் அற்புதமாய் உள்ளது.. அது சரி ஏன் பலா பட்டறை ன்னு பேர் வச்சீக... முடியுமானால் சொல்லுங்க
புறாவை மீண்டும் ரசிக்கிறேன்
selvi
சுகமான கனவுகள்...
அழகான கவிதைகள்...
வாழ்த்துக்கள்!
மூன்றாவது கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு ஷங்கர்...! பாராட்டுகள் மேலும் சிறப்பான கவிதைகள் படைக்க...!
ம்ம்ம்...கலகுறீங்க நண்பா...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
Post a Comment