பலா பட்டறை: கூச்சல்களுக்கிடையே...

கூச்சல்களுக்கிடையே...





ஆயிரம்கோடி விவாதங்கள்
புத்தகங்கள்
கருத்துகள்
இன்னும் எதையோ தேடி
எதையோ கற்றுக்கொண்டு
எதையோ கண்டுபிடித்து
கூவி கூவி மார்தட்டி

எந்த மொழி சிறப்பு?
என்னுடையதா?
உன்னுடையதா?
என்ற கூச்சல்களில்
எனெக்கென்னமோ
'ம்மே'
என்ற ஒரே சப்தத்தில்
எல்லாவற்றையும் அடக்கிவிட்ட
ஆடும் குட்டியும்
அதிசயமாய்தான் தெரிகிறது


யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த எனது கவிதை..




எனது நீதி கிடைக்குமா என்ற இடுகையை தொடர்ந்து தமிழ் உதயம் பதிவரும் அவருக்கான அனுபவத்தை எழுதி உள்ளார். எல்லோரும் பகிர்ந்தால் சர்வ சாதரணமாய் அராஜகம் செய்ய பயப்படுவார்கள் என்பது என் கருத்து.  தமிழ் உதயம் நண்பருக்கு என் நன்றி.

42 comments:

Paleo God said...

சென்ற பதிவிலேயே பாராட்டி தகவல் தந்த, வானம்பாடிகள் ஐயாவிற்கு நன்றி..:))

Anonymous said...

அருமையான கவிதை

நட்புடன் ஜமால் said...

ம்மே - அழகு.

Vidhoosh said...

நல்ல கவிதை. யூத்புல் விகடனில் வந்ததற்கு பாராட்டுக்கள். :)
வித்யா

பாலா said...

ம்மே....!!!!

பிரபாகர் said...

சுருங்க
சிறப்பாய்
சுருதி சுத்தமாய்
சிலிர்ப்பாய்
சூப்பராய்...

பிரபாகர்.

Chitra said...

அருமையான படம் - அருமையான கருத்து. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

மீன்துள்ளியான் said...

பலா கவிதை சூப்பர் . ம்மே ம்மே ம்மே ம்மே ம்மே

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகு ....உங்களின் கவிதை யுத் புல் விகடனில் பிரசுரமானதிர்க்கு வாழ்த்துக்கள் தோழரே...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்மே...சிந்தனை நல்லாயிருக்கு ஷங்கர்

யூத்ஃபுல்விகடனில் வந்தமைக்கு பாராட்டுக்கள்...!

Cable சங்கர் said...

:))

Unknown said...

கவிதை நல்லா இருக்கு..நமக்கெல்லாம் எழுத வராதுன்னாலும் பாராட்டிருவோமுல்ல..

Ashok D said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் ஷங்கர்.

ஆதி மனிதன் said...

அருமையான கவிதை. அர்த்தமுள்ள கவிதை.

vasu balaji said...

அதனால என்ன இங்கையும் பாராட்டுவோம்ல:))

கார்க்கிபவா said...

எனக்கு ஒரு டவுட்டு.. இறைச்சு சாப்பிற என்னை நாந்வெஜ்னு சொன்னா,இலை தழை மட்டுமே சாப்பிடற ஆடு வெஜ்தானே? அப்புரம் ஏன் அதை சைவ சாப்பாடு சாப்பிடறவ்ங்க சாப்பிட மாட்றாங்க?

செ.சரவணக்குமார் said...

மிகப் பிடித்திருக்கிறது சங்கர்.

விஜய் said...

இந்த மாதிரி எல்லாம் நமக்கு வரமாட்டேங்குதே

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

ராமலக்ஷ்மி said...

நீங்கள் என் பதிவில் சொன்னதுமே விகடனில் பார்த்தேன்.

ம்மே

நல்லா இருக்கு. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு:)!

வாழ்த்துக்கள்!

நாடோடி said...

ஆழ்ந்த கருத்துக்கள்..நண்பரே..

சீமான்கனி said...

ம்மே..கசாப்பு கடைக்கு போகும் வரை....நல்ல இருக்கு...நண்பரே...
வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். நல்லா இருக்கு சங்கர். யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது சந்தோசமான செய்தி. தொடரட்டும் இது இனியும்.

ஸ்ரீராம். said...

பாராட்டுக்கள்.
கவிதைக்கும்..
அது யூத்ஃபுல் விகடனில் வெளிவந்ததற்கும்..

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

எறும்பு said...

வாழ்த்துக்கள்....

writer shankar..

rowdy aayaacha...

:)

திவ்யாஹரி said...

கவிதை நல்லா இருக்கு.. யூத்ஃபுல் விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்..

Jerry Eshananda said...

கூச்சல் களுக்கு இடையே மௌனம் [ம்மே] அதிசயம் தான்,ரசித்தேன்

Paleo God said...

@சின்ன அம்மிணி
வாங்க..நல்வரவு..மிக்க நன்றி..:))

@ஜமால்.. நன்றி..:))
@வித்யாஜி.. நன்றி..::))
@ஹாலி.. நன்றி தல.::))
@பிரபாகர்.: மிக்க நன்றி
நண்பரே..:))
@சித்ராஜி..: மிக்க நன்றி.:))
@மீன்ஸ் :: நன்றி:))
@கமலேஷ்:: நன்றி தோழரே..:))
@வசந்த் :: நன்றி..:))

Paleo God said...

@கேபிள்ஜி :; நன்றி தல..:))
@முகிலன் :: மிக்க நன்றி..:))
@அஷோக் :: நன்றி..:))
@சை.கொ.ப : நன்றி நண்பரே..:))
@ஆதி மனிதன்: நன்றிங்க..:))
@வானம்பாடிகள்: நன்றி ஐயா..:))

Paleo God said...

@கார்க்கி..
ஏன்னா நாங்க வேட்டைகாரங்க கிடையாது மாப்ள..:))
@சரவணக்குமார்.. மிக்க நன்றி நண்பா.:)
@விஜய்..சும்மா..:) நன்றி..:))
@ராமலக்‌ஷ்மி.: ஆமாம் மேடம் நன்றி.:)
@நாடோடி.. மிக்க நன்றி நண்பரே.:))
@கனி:அது சரி..:) நன்றி கனி..:))
@நவாஸ்..: மிக்க நன்றி நவாஸ்.:))
@ஸ்ரீராம்,,: வாங்க..மிக்க நன்றி..:))
@அண்ணா:: மிக்க நன்றி..மல.:))
@எறும்பு:: நன்றி.. ya ya..me 2.:))
@திவ்யா:: நன்றிம்மா..:))
@ஜெரி:; மிக்க நன்றி நண்பரே..:))

Paleo God said...

வெளியிட்ட விகடனுக்கும் மிக்க நன்றி.:)

Ramesh said...

அங்க இல்ல... ஆகவே
இங்க
ம்மெ..
ம்மெ...

எல்லாவற்றையும் நானும் இடிக்கிட்டன் ஹிஹிஹி....
ம்மெ..

ரோஸ்விக் said...

பலா கவிதை பலே பலே...:-))) ரொம்ப அருமை அண்ணே.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

யூத்ஃபுல் விகடன்ல பாத்துட்டு உங்க பக்கத்துல enter.ஆனாலும் விகடன்ல படிக்கும் போது கவித இன்னும் அழகு.

தமிழ் உதயம் said...

ஆட்டுக்குட்டியிடம் பாடம் கற்றுக் கொள்வோம்மா. நன்றி பலாபட்டறை. எனது வலைப்பூவுக்கு லிங்க் கொடுத்ததற்கு.

நேசமித்ரன் said...

கவிதை அழகு

வாழ்த்துக்கள்

Paleo God said...

@ரோஸ்விக்
மிக்க நன்றி ரோஸ்விக்..:)

@க.நா.சாந்தி லெட்சுமணன்
மிக்க நன்றி சகோதரி..:))

@தமிழ் உதயம்..
மிக்க நன்றி..:))

Paleo God said...

@நேசமித்ரன்..

வாங்க நேசமித்ரன்..மிக்க நன்றி. வருகைக்கும் வாழ்த்துக்கும்..:))

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் தல...கவிதை அருமையா இருக்கு

Radhakrishnan said...

அழகிய கவிதைக்கும், யூத்புல் விகடனின் அங்கீகாரத்திற்கும் வாழ்த்துகள்.

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........