பலா பட்டறை: என் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு??

என் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு??


மனசுப்பூ


நினைவினில் 
நீ
இங்கு 
நின்று நடந்து
பேசி  திரிந்ததெல்லாம்
நினைத்திட
நினைத்திட 
மனசுப்பூ வாடும் 
காம்பொடிந்து தரையில் விழும் 
உதிர்ந்து தூளாகி 
உடம்பெல்லாம் ஒட்டி நிற்கும்...  

எங்கேயடி உனை காணோம்.??.

கடலைப் பார்த்து பார்த்து 
கழுத்தும் வலித்தது
உன்னை தேடி தேடி
உள்ளமும் சோர்ந்தது 
காத்துச் சலித்தது 
என் கண்ணும் 

எங்கேயடி உனை காணோம்..
 
எண்ணித்தவித்தது 
என் மனது 

உண்டியில் தட்டிப்பொருக்கிய 
சில்லறையோடு 
கனத்தது 
என் சட்டைப்பை..!! 

**********************

வானமடி    அடி 
வானமடி    உன் 
மடிவான    மடி
வேகமடி     உன் 
இமைவேக மடி 
வெகுமடி     என் 
மனம்வேகு மடி 

*************************
மறக்காதவன்.

வெளியில் வேஷமிட்டுக்கொண்டது முகம் 
ஒன்றுமே நடக்காததாய்
உள்ளே... 
மழைநீர் படும் மண் சுவர்
போலிருப்பினும் 
விட்டுச்சென்ற 
எல்லாமே 
ஏக்கம் தந்தது... 

பட்டுச்சென்றுவிட்டதை 
மனம் தொட்டுப்பார்த்துக்கொண்டது 
ஆயினும்
எங்கெங்கு முட்கள் 
என் கண்களில் குத்த ..

விளம்பரங்களில் 
தெரிந்தவர் பெயர்களில்
பத்திரிக்கைகளில் 

மேலும், மேலும் 
உன் பெயர் வரக்கண்டு 

எங்கெங்கு 
முட்கள் என் கண்களில்
ஊசியாய்... 

ஒழுங்காய் உடை உடுத்தி 
பலவாய் நகைச்சுவை பேசி 
சிரிமுகமாய் 
சிநேகங்கள் பரிமாறி
யாரேனும் சாவார்களோ 
என்போல்...??

கடல் நீரோன்ரும் 
வற்றிவிடப்போவதில்லை 
காயும் வெண்ணிலவும் 
பொட்டிவிடப்போவதில்லை

மெதுவாய் குத்தி தினமும்
குருதி வழியும் 
என் மனமும் 
மாறி விடப்போவதில்லை
உன்னை 
மறந்து விடப்போவதில்லை...!!

                     - மறக்காதவன்.  
  

2 comments: