பலா பட்டறை: மைக்கல் ஜாக்சனும்-ஞானும்

மைக்கல் ஜாக்சனும்-ஞானும்







வித்யா அவர்களின் பக்கத்தில் ஒரு ஆங்கில பதிவுக்கு பின்னூட்டமிடும்போது நண்பர் அ.மு.செய்யது மைகேல் ஜாக்சனை (என்னை மாதிரியே) உன்னிப்பாய் கவனித்து black or white பாடலை திரும்ப பார்க்க வைத்து விட்டார்..:)) வித்யா அவர்களுக்கும் பிடித்த பாடல் என்பது எனக்கொன்றும் ஆச்சரியமளிக்கவில்லை. 1990 களில் மைகேல் ஜாக்சன் பாடல்கள் எனக்கு அறிமுகமான சமயம் (நானெல்லாம் பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலுங்கோ-தானா பாட்டு கேட்டு பிடிச்சது) மும்பையில் அவரின் கச்சேரி (??) பார்க்க போன பாக்கியம் பெற்றேன்.

அந்தேரி பக்கம் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்..1500 ருபாய் டிக்கெட் (இருக்கறதிலேயே கம்மி இதுதானுங்கோ ) ஏகப்பட்ட கெடுபிடி மைதானத்தை சுற்றிலும். மொத்த மும்பையின் ஜொலி ஜொலிப்பையும் ஒரு சேர கண்ட நாள் அது. மேடைக்கும் நாங்கள் இருந்ததுக்கும் நல்ல தூரம் இருந்தது. கருப்பு நிறத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு ஹிந்தி நடிகை அப்போதைய ஹிட் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். சவுண்ட் சிஸ்டம் படு கேவலம்...

அவ்வளவுதானா 1500 அம்பேல்தான் போல என்று நினைத்தபோது ஹிந்தி பாடல் நிறைவு பெற்றது.. மெதுவாய் மேடையை பார்த்துக்கொண்டிருந்தோம்.

டொம்... எங்காவது சப்த்தம் நேராய் நெஞ்சில் அறைந்து உணர்ந்திருக்கிறீர்களா ?? அன்று உணர்ந்தேன்... டொம்..நடு நெஞ்சில் அறைந்த சப்த்தம். அப்போது தான் தெரிந்தது இனிமேதான் கச்சேரி என்று. ஆளுயர திரைகள் வெளிச்சத்தில் தங்க உடையில் புகைகளுக்கு நடுவே ..MJ...ஆடிய அதிரடியில் சுமார் 45 நிமிடங்கள் அங்கே என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது.... வேகமென்றால் ஒரு வேகம்.

 அப்படி ஒரு LIVE   நிகழ்ச்சி பிசிறில்லாமல் மேடையில் நடத்த யாராலும் முடியாது.


10 comments:

சிவாஜி சங்கர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.. :)

sathishsangkavi.blogspot.com said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

S.A. நவாஸுதீன் said...

///அப்படி ஒரு LIVE நிகழ்ச்சி பிசிறில்லாமல் மேடையில் நடத்த யாராலும் முடியாது.///

உங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோசமே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

அது சரி. "அவர்கள்" என்று அலாதியாய் குறிப்பிட்டு சொன்னதுக்கு :)) ரொம்ப வயசாயிட்ட மாதிரியே தலை சுத்துதுங்க.

இப்போத்தான் என் கணவர் அலறலாய் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த MJ-வை tom & jerry-ல ஜெர்ரி ஆடுமே அதே மாதிரி ஆடிக்கொண்டே போயி, "டார்லிங்... சித்த கம்மி பண்ணிக்கக் கூடாதா"ன்னு திட்டிட்டு பதிவு படிக்க வந்தேன். அட, மெல்லிசா வச்சுக் கேளுங்கப்பா.. :))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

நல்ல பகிர்வு நண்பரே...பாக்கியம் தான்,...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலா

Paleo God said...

Sivaji Sankar said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.. :)//

நன்றி நண்பரே :)) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Paleo God said...

Sangkavi said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

நன்றி நண்பரே :)) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
///அப்படி ஒரு LIVE நிகழ்ச்சி பிசிறில்லாமல் மேடையில் நடத்த யாராலும் முடியாது.///

உங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோசமே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே :)) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Paleo God said...

Vidhoosh said...
அது சரி. "அவர்கள்" என்று அலாதியாய் குறிப்பிட்டு சொன்னதுக்கு :)) ரொம்ப வயசாயிட்ட மாதிரியே தலை சுத்துதுங்க.//

அச்சச்சோ... எல்லோருக்கும் என்ற தொனியில் சொல்லவந்தது அது ::)) உங்களுக்கு பிடிக்காமல் இருக்குமா மேடம்..??!!



இப்போத்தான் என் கணவர் அலறலாய் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த MJ-வை tom & jerry-ல ஜெர்ரி ஆடுமே அதே மாதிரி ஆடிக்கொண்டே போயி, "டார்லிங்... சித்த கம்மி பண்ணிக்கக் கூடாதா"ன்னு திட்டிட்டு பதிவு படிக்க வந்தேன். அட, மெல்லிசா வச்சுக் கேளுங்கப்பா.. :))

அவருமா ??? ... tom&jerry நினைச்சு பார்த்தேன் சிரிப்பு ... முடியல ::))
மெலிசா வெச்சு கேட்க சுசிலாம்மா பாட்டா அது (except Liberian Girl)..::)


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

thank you so much and wish you and your family a very Happy New year.:)

Paleo God said...

seemangani said...
நல்ல பகிர்வு நண்பரே...பாக்கியம் தான்,...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலா.//

Thank you so much gani.
happy new year to you too..::)