பலா பட்டறை: தற்குறிகளுக்கான உலகத்தில்

தற்குறிகளுக்கான உலகத்தில்
மனிதனாய் இருப்போம்..
என்றாய்..

மற்ற உயிர்களின் துச்சம் 
உன் கண்களில் தெரிந்தது..

நாத்திகம் தான் சரி
என்றாய் 

கைகளில் 

மனிதர்கள் சிலைகளுக்கு 
மாலைகள் தெரிந்தது..

என்ன நான் சொல்வது 
சரிதானே என்றாய்... 

நிலவில் தண்ணீர் இருப்பதும்.. 
ஒவ்வொன்றிலும் இறைவன் இருப்பதும்.. 
கடவுளல்ல கல் என்பதும்.. 

யாரோ சொல்லித்தான் 
எனக்கும் தெரியும்..

நீ சொன்னதை நீ சொல்லியதாகவே 
சொல்லிவிடுகிறேன்...

தற்குறிகளுக்கான உலகத்தில் 
தினக்கடமை நிறைய உண்டு 

உண்டு, உறங்கி, எழுந்து,
எல்லாவற்றையும் காதில் கேட்டு 
பதிலேதும் சொல்லாமல்... 

அப்படியே யாரேனும் கேட்டால்     

நீ சொன்னதை நீ சொல்லியதாகவே 
சொல்லிவிடுகிறேன்...
  
தனக்கென்ற கருத்தை 
வேறதுவும் சொல்லாதபோது..
எனது கருத்தென்று 
சொல்வதற்கு 
ஆறறிவு தடுக்கிறது... 

14 comments: