பலா பட்டறை: கிளிக்கு பிறந்த நாள்

கிளிக்கு பிறந்த நாள்
இப்போதெல்லாம் வெய்யிலோ, மழையோ குளிர்பானங்களை வாங்கி குடிப்பது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. கிளிக்கு பிறந்த நாள் கொண்டாட கூட குளிர்பானம் குடும்பத்தோடு குடிக்கச்சொல்லி தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு!!. அனால் வெறும் இந்த ரசாயன சர்க்கரை தண்ணி நம் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு சொல்லி மாளாது.. இருப்பினும் ஒரு அந்தஸ்து வேண்டியோ அல்லது ஸ்டைல் காட்டவோ இதனை குடித்து உடலை கெடுத்து கொள்கிறோம். (நன்றாய் படித்த அறிவாளிகள் (பெரும்பாலும்) முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்று நிரூபிப்பவர்களில் குளிர்பான நிறுவனங்களும் சேர்த்தி. ஒரு ரூபாய்க்கும் குறைவான அந்த கலர் தண்ணியை பத்து ரூபாய்க்கும் மேல் வாங்கி குடிப்பது, புகைப்பது உடலுக்கு கெடுதி என்று எழுதியும் படம் போட்டும் - பாக்கெட் பாக்கெட்டாக ஊதி தள்ளுவது, குடி குடியை கெடுக்கும் என்ற வாசகத்துடன் மதுக்கடைகள் போல) சரி அதன் உபயோகங்களில் ஒன்றை இந்த வீடியோவில் காணவும்.அனால் இளநீரின் மகத்துவம் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை, இயற்கையின் மிக அற்புதமான கொடைகளில் இளநீரும் ஒன்று. மிகவும் பரிசுத்தமான அந்த பானத்தை நாம் தவிர்த்து விளம்பரங்களில் மயங்கி எதை குடிக்கிறோம் என்று இந்த வீடியோ விளக்கி இருக்கும். எந்த குளிர்பானமோ அல்லது sports ட்ரிங்க்ஸ்-சோ தரமுடியாத ஒரு அற்புத சக்தியை இளநீர் நமக்கு தருகிறது. எந்த கலப்படமுமில்லாத, நிலத்தடி நீரை மாசு பண்ணாத, உடலுக்கு தீங்கில்லாத இளநீரை பருகி நல் உடல் வளம் பெறுவோம்.

1 comments: