பலா பட்டறை: முறிந்த காதல் - ஒன்று..

முறிந்த காதல் - ஒன்று..
அரங்கேற்றம் படம் நீயும் நானும்
அருகருகில் அமர்ந்து பார்த்த அரங்கு
விரல் கூட தீண்டாத நம் காதலுக்கு 
இன்னும் மௌன சாட்சியாய்
நம்மை தெரிந்த மரங்கள்

விரும்பி பிரிந்த புல்லா அவென்யுவில்

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதாய்
ஒவ்வொருமுறை சுற்றும்போதும்
என் உலகம் திரும்பி சுற்றும்
நீயும் நானும் சேர்ந்த பின் பிரிந்து
நடந்த நீண்ட நடைகள் ஏனோ
எனக்கு நினைவில் வரும்..
கூடவே எப்போதும் நானுன்முன்
காணமாட்டேன் என்ற என் சத்தியமும்..
இருந்தாலும்
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.

25 comments: