பலா பட்டறை: தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம்

சாலை மேல்  
பள்ளங்களற்று
சரி சமமாய் 
இருந்தாலும்..

தேங்கி நிற்கும்  
தண்ணீரில் வண்டி ஓட்ட
பயமாகத்தான் இருக்கிறது..

இதுவரை நான் 
விழுங்கிய
தண்ணீர் 

தனக்கடியில் 
பதுக்கிவைத்த 
பள்ளங்களில்
 
எனை விழுங்குமோ
என்ற பயத்தில்...   

8 comments: