பலா பட்டறை: மனமென்னும் வெள்ளித்திரை

மனமென்னும் வெள்ளித்திரை
மன வெள்ளித்திரையில்
இறந்தகால வாழ்க்கை
படம்
அனுதினமும் பிறந்து
அழகழகாய் நகரும்..

திரைக்கதையோ,
காட்சிகளோ, வசனமோ
நடிப்புகளோ,  
எப்போதும் அது
மாறியதில்லை..

சோகமோ, மகிழ்ச்சியோ..
சலிப்பினை தருவதில்லை

பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
படமது
ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது...

துயரங்களை இன்பமாக்கி
பிரிவுகளை காதலாக்கி
துரோகங்களை நட்பாக்கி
ஏழ்மையை செல்வமாக்கி
இழப்புகளை மீட்கலாம்
என்றாலும்...

காட்சிகள் மாற்றி அமைக்க
யாருக்கும் விருப்பமில்லை

உயிர்ப்போடு நிகழ்காலம்
வித விதமாய்
வாழ்க்கை படம்
வண்ணத்தில்
காட்டியபோதும்
  
இறந்தகால
படமது
ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது...

பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்

எப்போதும் மனதுக்குள்
நன்றி. கவிதைக்கான கரு தந்த அழகு நண்பன் பூங்குன்றன்.

10 comments: