பலா பட்டறை: எனக்கான மரணம் உணரும் வரை

எனக்கான மரணம் உணரும் வரை
என் பொருட்டு
ஏதேனும்
உதித்துக்கொன்டுதான்
இருக்கிறது

தினம் தினம்

எனக்கான மூச்சுக்காற்று
எனக்கான உணவு
எனக்கான நேரம்
எனக்கான மகிழ்ச்சிகள்
எனக்கான சோகங்கள்
எனக்கான பிரச்சனைகள்
எனக்கான வெளிச்சம்
எனக்கான சொந்தங்கள்
எனக்கான எண்ணங்கள்
எனக்கான கவிதைகள்
எனக்கான அறிவுரைகள்
எனக்கான நட்புகள்

என
பிறந்ததிலிருந்து
நான் என்ற அகந்தையின்
மரணம் உணரும் வரை

என் பொருட்டு
ஏதேனும்
உதித்துக்கொன்டுதான்
இருக்கிறது

தினம் தினமும்..

11 comments: