பலா பட்டறை: சிவ பிரசாதம்

சிவ பிரசாதம்






பாங்கு..காசு போடுறமே அந்த பேங்க் இல்லீங்க. இது 'சிவ பிரசாதம்' அப்படித்தான் இளங்கோ சொன்னான். கமர்கட்டு உருண்டை போல பச்சை சேர்ந்த நிறத்தில் சின்ன பிளாஸ்டிக் கவரில் சாதுவாய் இருந்தது.

"எந்த கோவில்டா" என்று கேட்ட என்னை நமுட்டு சிரிப்போடு பாபு அண்ணன் பெயிண்ட் கடைக்கு பக்கத்திலிருக்கிற பீடா நபரை காட்டினான். புரிந்து விட்டது இது ஏதோ விவகாரமான தமாஷ் மிட்டாய்.

நான் சிரித்து இளங்கோவை பார்த்ததும் "மச்சான் அப்படியே சாப்பிடாத 50 கிராம் பால்கோவா வாங்கி உள்ள வச்சி சாப்ட்டுடு" இது வேலைக்காவாது என்று புரிந்தது எனக்கு..

"சரிடா நாளைக்கு கிரௌன்ட்ல பார்க்கலாம்" சொல்லிட்டு பஸ் பிடிக்க கோட்டைக்கு வந்தபோது வெஸ்பா ல ஸ்ரீராம் வந்தான்
"இன்னா ஒய் இங்க நிக்கற?? டாவடிக்க வந்தியா? இப்பதான் ரவியும் இளங்கோவும் எதிர பார்த்தேன்".

அப்பதான் பார்த்தேன் ஸ்ரீராம் பின்னாடி யாரோ ஒருத்தன் அகஸ்மாத்தா ஒக்காந்திருந்தான் "பிரென்டுடா" .. ம்ம்ம் சரக்கடிக்கிற என்று நானே மனசுக்குள் சேர்த்து புரிந்துகொண்டேன்.

"இல்லடா மார்க்கெட்டுக்கு வந்தேன் இளங்கோவ பாத்தேன் தோ பஸ் பிடிச்சி வீட்டுக்கு போகலாம்னா நீ வந்துட்ட".

"சரிடா ஏதாவது காசு வச்சிருக்கியா? பிரென்டு சூரியகுளம் போனம்னான்" (அடப்பாவி இதுவேறயா?? ) அதுக்கு மட்டும்தான் காசு இருக்கு சரக்குக்கு இல்ல".

" இல்லடா இருந்த காசுல கிரீட்டிங் கார்டும், CD யும் வாங்கிட்டேன்". நம்பாமல் பாக்கெட்டில் கை விட்டான்
"இன்னாடா இது? "
"இது ..சிவ பிரசாதம் இளங்கோ குடுத்தான்".
" சிவ பிரசாதமா??"
 ஒருமாதிரி பார்த்த பார்வையில் "நீ வேணா சாப்டு பார் அப்படியே சாப்டகூடாது பால்கோவால வெச்சி.."
"ஏன் அப்படியே சாப்ட்டா??"
"இல்லடா இளங்கோதான் சொன்னான்.."
"சரி சரி நான் எடுத்துக்கிறன் துட்டு கூட இல்லாம என்னத்துக்கு வெளில வர?" நான் சிரித்துக்கொண்டே ஓடிப்போய் பஸ் ஏறி விட்டேன்.

மூணு  நாள் கழிச்சு சாயங்கால நேரம் சுகு கடைக்கு வந்தேன்..சினிமா பாட்டு காசெட்ல பதிஞ்சு குடுக்கிற கடை அது. பக்கத்துல சகலையோட (அப்படித்தான் எல்லாரும் கூப்டுவோம்) பிரிண்டிங் கடை, நடுவுல டின்க்கர் கடை
"வா மச்சி கொஞ்ச நேரம் கடையில ஒக்காரு வீடு வரைக்கும் போய் வந்துடறேன்"
" டேய் நீ பாட்டுக்கு ரெகார்ட் போட்டுட்டு போய்ட்ட அடுத்த பாட்டு??"
" கவலை படாத மச்சி கஸ்டமருக்கு தர வேண்டிய காசட்டுதான் கரெக்டா இருக்கான்னு பாக்க போட்டிருக்கேன் எதுனா பிரச்சனைனா நோட் பண்ணிக்க.".

'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' புது பாட்டு ஓடிக்கொண்டிருந்தது..

உமா அண்ணன் ஜீப்ல வந்தார் "என்னா பார்ட்டி சுகு எங்க?"
"வீட்டுக்கு போயிருக்கான் பார்டி.."
"இன்னா ஒரே பளபளப்பா இருக்க பக்கத்து ஊட்டு ஆண்டி கரெக்ட் பன்ட்டியா.."
".அய்யய்யோ என்னா பார்ட்டி இது வெவஸ்தையே கிடையாது உங்களுக்கு இனிமே தலைக்கு என்னையே வைக்க மாட்டேன் போதுமா??"
" சரி சரி கொச்சுக்காத காலேஜிக்கு போய் வண்டிய விட்டிட்டு வந்துடறேன் சுகு வந்தா சொல்லு.."
" பார்ட்டி கிரௌன்ட்ல ஜீப் கத்து தரேன்னு சொன்னிங்க"..
"மொதல்ல ஆண்ண்டிய" ..
".அய்யோ நீ போ ..."
 சிரித்துக்கொண்டே புகை கக்கி ஜீப்பில் பறந்த உமா அண்ணனை பார்த்துக்கொண்டே இருக்கும்போதுதான் திடீர்னு கவனித்தேன் 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' இன்னும் அதே பாட்டு... அடடா மச்சான் ஒரே பாட்ட தொடர்ந்து ரெகார்ட் பண்ணிட்டானே..

"சார் கடைய்ல யாரும் இல்லையா??"

" சொல்லுங்க சார், வெளில போயிருக்காரு என்ன வேணும் ரெகார்ட் பண்ணனுமா லிஸ்ட் பாத்து செலக்ட் பண்ணுங்க. இப்ப வர நேரம்தான்.."

"இல்ல காலைல ரெக்கார்டிங் பண்ண ."..     சுகு வந்துட்டான் ..
"சார் ஒரு நிமிஷம் அவரே வந்துட்டாரு"
" ஒக்காருங்க சார் உங்களோடதுதான் ஓடிட்டு இருக்கு.." சுகு உள்ளே போய் பாட்டை நிறுத்தி கேசட்டை மூடி காசு வாங்கி கவெர்ல போட்டு அவர அனுப்பிட்டான்.

"மச்சி அந்த காசட்ல ஒரே பாட்டு திரும்ப திரும்ப ஓடிக்கிட்டே இருக்குடா நீ அப்படியே குடுத்துட்ட.'

" கல்யாண மாலைதானே' அந்த பாட்ட மட்டும் திரும்ப திரும்ப போட்டு குடுங்கன்னு சொன்னதே அவர்தாண்டா" .. விநோதமாய் நான் பார்க்க ..

"என்ன பண்றது மச்சி சில லூசுங்க அப்படித்தான்.."

ஏதோ புரிந்தது போல இருந்தது யாருக்கோ மனதை மயக்கும் ஒரு பாடல் திரும்ப திரும்ப போதை தருகிறது.. எத்தனை முறை கேட்டாலும் சுகு கடையில் அது சலிப்பையே தருகிறது. புது பாடல்கள் வரும்போது இதை எத்தனை பேர் ரெகார்ட் செய்ய விரும்புவார்கள் என்றுதான் சுகு யோசித்து பார்த்திருக்கிறேன், சிறிது நாட்களில் அங்கு பாடும் பாடல்களும் சகலை கடையில் ஓடும் பிரிண்டிங் மிஷின் சப்த்தமும் ஒன்றாய் போனது. "

மச்சி ஸ்ரீராம் வரான்..."

மூணு நாளுக்கு முன்னாடி பார்த்தா மாதிரியே இல்லயே எதனா விவகாரமா?? யோசித்துக்கொண்டிருக்கும்போதே கால்ல விழுந்து..

"மச்சி நான் திருந்திட்டேண்டா இனிமே குடிக்கவே மாட்டேன் சாமி என் கண்ண திறந்துட்டாரு."

ஒன்றும் புரியாமல் முழித்த என்னிடம் "சிவ பிரசாதம் சாப்டு சூரிய குளம் போயிருக்க கூடாதுடா.. குடிச்சாலே கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.. ஒரு புல் பாட்டலே அடிச்சிட்டு கூட ஸ்டெடியா இர்ந்த என்ன தம்மாத்தூண்டு உருண்ட மூணு நாள் சாவடிச்சிடிசிடா..என் கை காலெல்லாம் பூதம் மாதிரி தெரியிது.. சிரிச்சிகினே இருந்திருக்கேன்..  சத்தியமா செத்துட்டு மேல்லோகம் போய்ட்டேன்னே நினைச்சேன்.. சோறு தண்ணி இல்லாம கிடந்தப்போ விறகு கடைக்கார் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தாரு. இனிமே அந்தமாதிரி சாமி சமாச்சாரமெல்லாம் உன்ன மாதிரி நல்ல பசங்களுக்கு குடு.. சரி நான் வரேன்"
ஸ்ரீராம் நடையே ஒரு மாதிரி இருந்தது.

 சுகு ஒன்னும் புரியாம "இன்னடா ஆச்சு இன்னா பிரசாதம்?"
" ஒண்ணுமில்ல மச்சி அது சிவ பிரசாதம்"
" அப்படினா ??"
"... அதாவது மதி கெட்டான் சோலைன்னு ஒரு காடு இருக்கு தெரியுமா.."

" டேய் அடங்குடா ஒடனே ஆரம்பிச்சிடுவியே.. டைம் ஆயிடிச்சி கடைய மூடிட்டு போலாம் வா .. சரக்கடிக்க காசு ஏதாவது வெச்சிருக்கியா...??"

"ஏண்டா டெய்லி குடிக்கிற..உடம்பு என்னத்துக்கு ஆவும்??"

" மிக்சிங் தெரியாம எங்கியோ வாந்தி எடுத்துட்டு உளறிட்டு போனானே ஸ்ரீராம் அவனமாதிரி நினச்சிட்டயா வைரம் பாஞ்ச கட்டடா இது ரெண்டு புல்லு தாங்கும் தெரியுமா?? "  

பாக்கெட்டில் கை விட்ட சுகுவை பார்த்தேன்... உனக்கும் சிவபிரசாதம் குடுத்துட வேண்டியதுதான்..உள்ளுக்குள் நான் சிரித்ததை அவன் பார்க்கவில்லை.          


                      
      

      

                  


    

15 comments:

எறும்பு said...

அருமை..

எனக்கும் சிவ பிரசாதம் கிடைக்குமா??
;))

எறும்பு said...

இல்ல எங்க அண்ணன் தண்டோராவுக்கு குடுக்கணும்..அதான்...

ஆதி மனிதன் said...

"மதி கெட்டான் சோலை" கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த "சிவ பிரசாதம்" நான் கேள்விப்பட்டதே இல்லை. உண்மையாலுமே அப்படி ஒண்ணு இருக்கா? எங்க கிடைக்கும்?

Ashok D said...

//எங்க அண்ணன் தண்டோராவுக்கு குடுக்கணும்..அதான்...//
:)))))

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. கார்த்தாலேயே இந்த கதையைப் படிச்சேன்..

தம்பி எம் மேலே என்னா கோபம்... இத எனக்கு பார்சல் அனுப்பறேன் அப்படின்னு சொல்றீங்க..

ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்.

சீமான்கனி said...

வாழ்த்துகள்...படிக்கும் பொது நானும் அந்த உரையாடல்ல இருந்த அனுபவம்...
அருமை நண்பரே...ஆமாம் இதுல என் சிவனை இழுத்து விட்டு இருக்கீங்க....!!!! :))

hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

Paleo God said...

நன்றி ராஜகோபால்... இது என்னோட முதல் முயற்சி.. (பாக்கலாம் ::)) )

எனக்கும் சிவ பிரசாதம் கிடைக்குமா??
;))
இல்ல எங்க அண்ணன் தண்டோராவுக்கு குடுக்கணும்..அதான்...//

no comments ::))

Paleo God said...

ஆதி மனிதன் said...
"மதி கெட்டான் சோலை" கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த "சிவ பிரசாதம்" நான் கேள்விப்பட்டதே இல்லை. உண்மையாலுமே அப்படி ஒண்ணு இருக்கா? எங்க கிடைக்கும்?//

நீங்க ரொம்ப நல்லவருங்க ! ::))

Paleo God said...

D.R.Ashok said...
//எங்க அண்ணன் தண்டோராவுக்கு குடுக்கணும்..அதான்...//
:)))))

////

me too ::))

Paleo God said...

இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. கார்த்தாலேயே இந்த கதையைப் படிச்சேன்..

தம்பி எம் மேலே என்னா கோபம்... இத எனக்கு பார்சல் அனுப்பறேன் அப்படின்னு சொல்றீங்க..

ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்.//

அண்ணே.. ஒடம்பு சரி இல்லையே ... சர்வ ரோக நிவாரணின்னுதான்... அதாவது அவ்வை குடுத்தாங்களே நெல்லிக்கனி அந்த மாதிரி (சரி உடுங்கன்னே இப்போ வலி பரவா இல்லையா ) ::))

Paleo God said...

seemangani said...
வாழ்த்துகள்...படிக்கும் பொது நானும் அந்த உரையாடல்ல இருந்த அனுபவம்...
அருமை நண்பரே...ஆமாம் இதுல என் சிவனை இழுத்து விட்டு இருக்கீங்க....!!!! :))//

அட அப்படித்தான் அறிமுகமாச்சுங்க... ::))

Paleo God said...

hayyram said...
gud

regards,
ram

www.hayyram.blogspot.com//

Thank you
உங்களுக்கும் அது தெரியும் போல... உங்க பதிவ நல்லா படிச்சிட்டு சொல்றேன்.. நன்றி.

ஷங்கி said...

நல்லாருக்கு!
”ஏல மச்சி மச்சி” பாட்டு ஞாபகம் வந்தது.

Paleo God said...

ஷங்கி said...
நல்லாருக்கு!
”ஏல மச்சி மச்சி” பாட்டு ஞாபகம் வந்தது//

இது அதுக்கெல்லாம் முன்னாடி நடந்தது நண்பரே..:))