பலா பட்டறை: காம வயிற்றின் உணவுகள்..

காம வயிற்றின் உணவுகள்..

அடுத்த ஜென்மம் 
பெண்ணாய் பிறந்து 
அந்த வலி உணரக் கடவு 

என்ற ஒரு அசரீரி 
கேட்க்கும்வரை 

முதல் காற்று 
உள் வாங்கி.. 

முதலுணவு 
முலைப்பாலானபோதும்.. 

தனங்களிலேயே
தங்கிவிடுகிறது மனதும்
பார்வையும்..   

வயிறு நிரம்ப 
வயிறு நிரம்பா 

குழந்தையுடன் 
கைநீட்டி வந்தவளின் 
ஒருபக்க திறந்த 
மார்பு 
மூன்று சேதி சொல்லியது 

வயிறு நிரம்பிய என் 
காமப்பசி 

வயிறு நிரம்பாத 
குழந்தை பசி

வற்றிப்போனவளின்
தாய் பசி
12 comments: