பலா பட்டறை: தலைகீழ் தவம்

தலைகீழ் தவம்











கிழக்கு தோன்றி மேற்கு
மறையும் ஆதவனென்ற
பொய்யுரைகளை பரப்பும்
உயிரிகள் வாழ் பூமியின்
சிக்கலான ஒவ்வொரு நாளின்
வெளிச்சங்கள்
இரைச்சலுடன் நிசப்த்தமாயும்
இரவுகள்
நிசப்தத்துடன் இரைச்சலாயும்
சுழன்று கொண்டே இருக்கிறது
ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி


19 comments:

சீமான்கனி said...

//ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி//

ரசித்த வரிகள்...அருமை கவிதை...வாழ்த்துகள் பாலா....

வேலன். said...

கவிதை அருமை நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

Paleo God said...

seemangani said...
//ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி//

ரசித்த வரிகள்...அருமை கவிதை...வாழ்த்துகள் பாலா...//

நன்றி சீமான் கனி.. நேற்றும், இன்றும் உங்கள் தளத்திற்கு வந்த போது ... 123 MUSIQ என்ற தளத்திலிருந்து வைரஸ் பரப்புவதாய் எச்சரிக்கை வந்து எதையுமே படிக்க முடியவில்லை... கல்யாணி சுரேஷ் வலைப்பக்கம் போனாலும் MALWARE என்று எச்சரிக்கை வருகிறது::(( தயவுசெய்து சரி செய்யவும்.). தேவையட்ற WIDGET களை நீக்கிவிடவும். மீண்டும் நன்றி.

சிவாஜி சங்கர் said...

ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி...

மனித சிந்தனை இல்லாதே சில விஷயங்கள் நிகழ்த்தப்படுகின்றன...
நல்ல புனைவு..வாழ்த்துகள் :))

Paleo God said...

நன்றி சிவாஜி சங்கர்...::))

நிசப்த்தமாய் அது இரை தேடுவது எப்போதும் ஒரு ஆச்சரியம்... பகல் எல்லாம் இரைச்சலில் தூங்கி.. இரவு நிசப்த்தத்தில் நமக்கு கேட்காத டெசிபல்களில் ஒலி மூலம் இரை பிடிப்பதும்.. விந்தை பிராணி அது..:))

Ashok D said...

:)

பூங்குன்றன்.வே said...

இயற்கை அதிசயங்களில் இந்த விந்தை பிராணியும் ஒன்று.அதை பற்றிய அழகான கவிதை என் நண்பனுடையது. ப்ளீஸ் ஹாவ் மை பொக்கே !!!

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

//வெளிச்சங்கள்
இரைச்சலுடன் நிசப்த்தமாயும்
இரவுகள்
நிசப்தத்துடன் இரைச்சலாயும்//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

Paleo God said...

நன்றி!!... D.R.Ashok:)).

Paleo God said...

// பூங்குன்றன்.வே said...
இயற்கை அதிசயங்களில் இந்த விந்தை பிராணியும் ஒன்று.அதை பற்றிய அழகான கவிதை என் நண்பனுடையது. ப்ளீஸ் ஹாவ் மை பொக்கே !!!//

Thanks a Lot::) Friend.

Paleo God said...

//கவிதை அருமை.

//வெளிச்சங்கள்
இரைச்சலுடன் நிசப்த்தமாயும்
இரவுகள்
நிசப்தத்துடன் இரைச்சலாயும்//

//அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி ராமலக்ஷ்மி.:))

தமிழ் said...

//ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி
//

அருமை

Paleo God said...

திகழ் said...
//ஆறறிவு செவிப்பறையில்
கேட்க்காமல் போனது
இரை காட்டும் ஒலிக்குறி
//

அருமை//

நன்றி திகழ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. வித்தியாசமாய் இருக்கிறது உங்கள் வலைப்பக்கம் ::))

ungalrasigan.blogspot.com said...

கவிதை அருமை! அதற்கான படம் அதைவிட அருமை! எங்கேர்ந்தய்யா புடிக்கிறீங்க?

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை

நிலாமதி said...

பொருத்தமான படம் அழகான் சிந்தனை......வாழ்த்துக்கள்.

Paleo God said...

ரவிபிரகாஷ் said...
கவிதை அருமை! அதற்கான படம் அதைவிட அருமை! எங்கேர்ந்தய்யா புடிக்கிறீங்க?//

நன்றி சார்... :)) கூகிள் தான் சார்... படத்த எப்படி பெரிசா காட்டணம் என்ற வித்தை தெரிஞ்சிது .. அவ்ளோவ்தான்.

Paleo God said...

சே.குமார் said...
கவிதை அருமை//

நன்றி குமார்... தொடர் வருகைக்கும் உற்சாகத்திற்கும்.:))

Paleo God said...

நிலாமதி said...
பொருத்தமான படம் அழகான் சிந்தனை......வாழ்த்துக்கள்.//

வாங்க நிலாமதி நன்றி...:))