பலா பட்டறை: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

கமல் வாழும் நாஸ்ற்றோடாமஸ்???சிவப்பு ரோஜாக்கள் 1978 - இல் வெளிவந்தது. ஒரு சைக்கோ கொலையாளியாக கமல் அதில் நடித்திருப்பார். அப்படம் வெளிவந்த சில வருடங்களுக்கு பிறகு சைக்கோ ராமன் என்ற பெண்களை கொள்ளும் கொடுர சைக்கோ கொலையாளி போலீசிடம் பிடிபட்டான்.
சத்யா 1988 வேலை இல்லாத இளைஞனாக கமல் நடித்திருப்பார்..1989 - 90 களில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக நம் நாடு பெரும் பிரச்சனைகளை சந்தித்தது.
தேவர் மகன் 1992 இல் வெளிவந்து சக்கை போடு போட்டது, கிராம சப்ஜெக்ட் -சில ஜாதி சண்டை காட்சிகள் இடம் பெற்ற படம் ஒரு வருடம் கழித்து 1993 களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜாதி சண்டைகள் நடைபெற்றன.
1996 தமிழகத்தின் பெரும்பாலான பைனான்ஸ் நிறுவனங்கள் மக்கள் தலையில் துண்டை போட்டு ஓடிப்போயின... அண்ணன் உலக நாயகன் 1994 லிலேயே மகாநதி என்ற படத்தின் மூலம் நமக்கு கோடி காட்டி இருக்கிறார் (சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே)


வருடம் 2000 ஹே ராம் படத்தில் ஹிந்து முஸ்லிம் வன்முறை கட்சிகள் இடம் பெற்ற படம்...2002 இல் குஜராத் கலவரம்.
.

2003 அன்பே சிவம் அதில் சுனாமி என்ற வார்த்தை கமல் உபயோகப்படுத்தி இருப்பார் நிறைய பேருக்கு அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது (சன் டிவி கடல் நீர் உள்ளே புகுந்ததுன்னுதான் சிவப்பு நிறத்தில் பிளாஷ் நியூஸ் போட்டது) . சரியாக 2004 லில் சுனாமி நம்மை தாக்கி கடலோரங்களை காலி பண்ணியது பல உயிர்களை பலி வாங்கியது.6 comments: