பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்.

சின்ன சின்ன கவிதைகள்.
மறதியின் பிறப்பிலிருந்து 
ஆரம்பிக்கிறது 
துக்கத்தின் இறப்புகள்
உயிர்வாழ தின்ற 
பண்டம் 
மண்ணில் வந்ததோ 
தீயில் செய்ததோ 
இரண்டுமே காத்திருக்கிறது 
இறந்ததும் 
நம்மை தின்ன....  ஒருத்தருமில்லா 
தீவிற்கு 
ஓடிப்போகவேனும்  
நீயும் நானுமாய் 
தேடிச்சிலர் 
வந்திடினும் 
நாடகம் நடத்திடுவோம் 
நாமங்கு இல்லையென்று 
ஒரு நாளேனும் 
ஒருத்தருமில்லா 
தீவிற்கு 
ஓடிப்போகவேனும் 
நீயும் நானுமாய். 15 comments: