பலா பட்டறை: சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...

சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...


ஒட்டி உறவாடி 
உயிர் கவிதை எழுதிய
காலமெல்லாம் போய்

ஒன்றுமில்லை இன்று ..

தனியாளாய்

சில காதல் கடிதங்களும்
காய்ந்த மல்லிகைகளும்
கைகளிளுள்ளது ..

காற்றடித்தால்
அவையும்
பறந்து போகும்..

மனதினில்
நினைவுகள் மட்டும்
அட்டைபோல்

என்
சந்தோஷங்களை உறிந்துகொண்டிருக்கிறது 
தினம் தினமும்....

5 comments: