பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்..

சின்ன சின்ன கவிதைகள்..
ஒவ்வொரு காலடி ஓசைக்கும் 
கதவு திறந்து,,
ஊருக்கு போன அப்பா..
-------------------------------------------

வியர்வை வாசனை
விற்கக் கூட்டம்..
கடற்கரை..

-------------------------------------------

எட்டடி யானை
சுருட்டிய துதிக்கை 
எதிரே பிச்சைக்காரி..

------------------------------------------

நீ கொடுத்துச்
சென்ற   
வளையலை போலவே 
விட்டுச்சென்ற 
ரோஜாவை போலவே 
என்னையும் 
விட்டுச்சென்றாய் 
உன் நினைவுகளுக்கு 
மத்தியில் 

தனியாய்.....  
--------------------------------------------

5 comments: