பலா பட்டறை: இரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....

இரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு கணினி பற்றிய இந்த வலைப்பக்கம் பார்க்கக் கிடைத்தது.. இலவசமாக அமெரிக்காவிற்கு கூகிள் வாய்ஸ் மூலமாக எப்படி பேசவேண்டும் அதற்க்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி இருந்தார். சரி என்று நானும் அவர் கூறிய படியே எல்லாவற்றையும் செய்து முடித்தேன்.. மேலும் அவரின் வேண்டுகோளின் படி மிகவும் பொறுமையாக ஒவ்வொரு அனுமதிக்கும் காத்திருந்து கடைசியாக மூன்று நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு பேசியும் முடித்தேன்.. மிகவும் பயனுள்ள இந்த வசதி நண்பரின் வழிகாட்டுதல் இல்லை என்றால் எனக்கு சாத்தியமாயிருக்கது.. மிகவும் தெளிவாக சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் விளக்கி இருந்ததோடு உடனே ஆகக்கூடிய காரியமில்லை ஆதலால் மிகவும் பொறுமை காக்கும்படியும் சொல்லி இருந்தார்.. அவரின் பல பதிவுகள் கணினி மென் பொருட்கள் பற்றி மிக சிறப்பாக இருக்கிறது.. நண்பருக்கு நன்றி.
அடுத்த நண்பரின் வலைப்பக்கம் இது இலவசமாய் கிடைக்கும் லினக்ஸ் மென் பொருட்கள் பற்றி எழுதி இருந்தார்.. நம் விவரங்களை பதிந்தால் இலவசமாய் வீடு தேடி வரும் என்று அவரின் பதிவுக்கேற்ப நானும் என் விவரங்களை சம்பந்தப்பட்ட வலை பக்கங்களுக்கு சென்று பதிந்ததில் உபுண்டு மென் பொருள் வீடு தேடி வந்தது கணினியில் பதிந்தும் விட்டேன். அந்த நண்பருக்கும் மிக்க நன்றி. தொடரட்டும் இது போன்ற அறிவிப்புகள்.

ஆங்கிலத்தில் சொல்வது போல 
KNOWLEDGE IS FOR SHARING..            


3 comments: