பலா பட்டறை: எதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி

எதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி

எதற்கோவென 

மனதெல்லாம் குத்திக்கிடக்குது 
அம்புகள் 

கொடுத்த வாக்குறுதிகள்.. 
வாழ்க்கையில் 
பெற்ற வாக்குறுதிகள்.. 

இழந்த காதல் 
மற்றும் 
எல்லாம்.. எல்லாம்..

வம்ச நிலை மாறி 
எண்ணும் எண்ணங்கள் மாறி 
உடல் மாறி,
உறுதியும் மாறி, 

இப்பொழுதெல்லாம் 
நடிக்க ஆரம்பித்துவிட்டன 
மனமும், உடலும்,
செய்கைகளாய்..

காதலோ, பந்தமோ 
இழந்ததோ, இழக்கப்போவதோ,

இப்படி ஏதாவதொரு 
படித்துறையில் 

ஏங்கி 
குமுறும்..

மௌனமாய் 
ஒப்பாரி வைக்கும் 

எதற்கோவென  
இன்னும் 
நான் வாழ........  

21 comments: