பலா பட்டறை: மனிதனும் தெய்வமும்

மனிதனும் தெய்வமும்

ஒரு குழந்தை தேவனான
மகிமை கண்டு பொறுக்காத

மனித கூட்டம்
தேவனாய் பிறக்கும்
குழந்தையெல்லாம்
மனிதனாக மாற்றுவீரென
அவரிடமே
மண்டியிட்டது
மனிதம் காக்க..ஆணிகள் அடித்து
முள்மகுடம்
வைத்து முடிந்தது
கதை என்று தொங்கிய
தலைகண்டு..

கொக்கரித்த குழு முதல்
உயிர் பொறித்து
புசித்தவன் வரை
யாருக்கும் கேட்கவில்லை

ஏதும் உணராது
இவர் செய்யும்
பாவங்கள் ஒன்றும்
செய்யாதிருக்க..
பிதாவே இவர்களை மன்னியும்
என்று தலை
தாழ்த்தி உயிர்
தந்த சக்திக்கு
அவரிட்ட விண்ணப்பம்..

17 comments: