பலா பட்டறை: பெட்டியில் பயணம்..

பெட்டியில் பயணம்..

தொடர்ந்து பல மணி நேர பிரயாணங்கள் செய்யும்போது நிச்சயமாய் புத்தகங்கள் என் கையிலிருக்கும். கண்களில் சுமை கூடும்போது வேகமாய் எதிர் திசையில் நகரும் வெளிப்புற‌ங்கள் மற்றும் அருகில் அமர்ந்து இருக்கும் மனிதர்களை அவர்களறியாது கவனித்துக்கொண்டிருப்பேன்.

அதிகமான உணர்ச்சிகள் வெளிக்காட்டும் நபர்கள் எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு, அமைதியாய் இருப்பவர்கள் தான் என் குறி. எப்படியாவது ஓரிருவர் என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

தனியான என் ப்ரயாணங்களில் நான் முதலில் Reservation Chart ல் பார்ப்பது என் அருகில் இருக்கும் நபர்களின் பெயர்கள் மற்றும் வயது. அபூர்வமாய் அருகில் உட்க்காரும் பெண்கள் என்னைப்பார்த்து சிரிப்பது என்னமோ அவர்கள் இறங்கும் ஸ்டேஷனில் 'கொஞ்ஜ‌ம் அந்த பெட்டிய எடுத்து தறீங்களா' என்று கேட்க்கும்போது மட்டும்தான்.

ஆனால் எப்போதும் என்னருகில் உட்க்காரும் பெண்களை அவர்களறியாது பார்ப்பேன் (தவறான கண்ணோட்டத்தில் அல்ல) எப்போதும் என்னை கவர்வது பாதங்க‌ளும் அதன் தூய்மையும். நேர்த்தியாய் வெட்டப்பட்ட நகங்கள், அழுக்கில்லாது, வெடிப்புகளற்ற பாதங்கள் கொண்ட பெண்கள் எனக்கு கற்றுத்தந்தது சுத்தமான பாதங்கள் முகத்தை காட்டிலும் அழகு என்பதை.

எத்தனை கிரீம்கள் தடவினாலும் அரை மணி நேரத்தில் அலங்கோலமாகும் எனக்கு பளிங்கு போல எப்போதும் இருக்கும் அவர்களின் நளினம் விளங்காத ஒரு ஆச்சரியம். என்னுடைய இருப்பு எப்பொதெல்லாம் அவர்களுக்கு சங்கடம் தருகிறதோ அப்போதெல்லாம் மெதுவாய் நகர்ந்து கதவருகில் நின்றுவிடுவேன்.

முக்கியமாய் இரவு பயணங்களில் தனியாய் வரும் பெண்கள் கீழ் பர்த்தில் படுக்கும்போது, தயவு செய்து ஜன்னல் கதவை நன்றாய் தாளிட்டுக்கொள்ளுங்கள் அம்மணி என்று சொல்வது என் வழக்கம். To make them comfortable என்பது போல‌ எப்போதும் என் இருப்புகளால் தொந்தரவுகள் தந்ததில்லை, சுலபமாய் கேலி பேசும் நண்பர்கள் கூட வந்தாலும் அவர்களையும் இந்த விதியை கடைபிடிக்கச்சொல்வது என் பழக்கம். மேலே கூறியதெல்லாம் நான் ரொம்ப நல்லவன் என்று சொல்லிக்கொள்ள அல்ல (ஆங் ...அப்ப்புறம்..) அண்ணனோ, தம்பியோ, தந்தையோ அவர்களை ஏற்றி விட வரும்போது அவர்கள் முகத்தில் தெரியும் ஒரு கவலை எங்கேயும் எப்போதும் ஒரே மாதிரியான பய ரேகைகள். இத்தன ஆம்பளைங்க இருக்காங்களே எம் பொண்ணு எப்படி தனியா ராத்திரி போகுமோ என்பது போல..உடனே அந்த கவலை எனக்கு தொற்றிக்கொண்டு விடும்... என்னமோ தெரியவில்லை முகங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த அவஸ்த்தைதான்.

சென்னையின் புற நகர் மின் ரயில்களில் பயணிப்பது மற்றொரு சுகானுபவம். 'அம்மம்மா ..தம்பி உன்னை நம்ம்பி...' என்று வித விதமான வாத்தியங்களுடன் பாடிக்கொண்டு எங்கேயும் இடிக்காமல் செல்லும் பார்வை இல்லாத மனிதர்கள். "இது சிறப்பான துளசி தைலம் சார்..பல் வலினா பல்ல வைங்க, கை வலின்னா கைல தடவுங்க, ஒத்தை தலைவலிக்கு இதுதான் ஒலகத்துலையே சிறப்பான மருந்து, கம்பனி??! விளம்பரத்துக்காக இன்று மட்டும் சிறப்பு விலை" என்று ஒரு மாதிரி கரகரத்த குரலில் சொல்லும் தைலம் விற்கும் பார்ட்டி, 20 வகை ஊசிகளை 2 ரூபாய்க்கு விற்கும் நரி குறவர்கள் (!!??) நாம் அன்றாடம் உபயோகிக்கும் எல்லா அட்டைகளுக்கும் கவர் விற்பவர், பட்டர் பிஸ்கேயட், சீசனுக்கு ஏற்ப பழம் விற்பவர்கள், சூடா சமோசா போக அன்றைய சூடான செய்திகளை அலசும் சக பயணிகள்... தினமும் ஏதாவதொரு தகராறு, ஏதாவதொரு பெட்டியில் பாட்டு களை கட்டும்,என ரகளையான பயணம் அது...

ஏங்க இது சென்ட்ரலா? பீச்சா?

ஆவடியிலிருந்து, வியாசர்பாடி இறங்கும் நான் அதை கவனிப்பதே இல்லை (வண்டி வந்துதா ஏறு )..எனவே எனக்கு எப்படி தெரியும்?? தெரியலைங்க என்று சொல்லும் முன்பு எப்போதும் பக்கத்தில் இருக்கும் நபர் அவருக்கான சரியான பதில் கூறிவிடுவார்.

எச்சரிக்கை :: இந்த கொடுமை தொடரும் ...::))

.

15 comments:

Ramesh said...

////அண்ணனோ, தம்பியோ, தந்தையோ அவர்களை ஏற்றி விட வரும்போது அவர்கள் முகத்தில் தெரியும் ஒரு கவலை எங்கேயும் எப்போதும் ஒரே மாதிரியான பய ரேகைகள். இத்தன ஆம்பளைங்க இருக்காங்களே எம் பொண்ணு எப்படி தனியா ராத்திரி போகுமோ என்பது போல..உடனே அந்த கவலை எனக்கு தொற்றிக்கொண்டு விடும்... என்னமோ தெரியவில்லை முகங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த அவஸ்த்தைதான்.////

உங்களைப்படிச்சுட்டேன்.. நம்ம கட்சிதாங்க சங்கர் வாழ்த்துக்கள்
ரசித்தேன்

Ashok D said...

you started well... :)

சீமான்கனி said...

நானும் நிகழ்வுகளின் நாடகம் ரசிப்பவன்... அழகான தொரு பகிர்வு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... பாலா.

சைவகொத்துப்பரோட்டா said...

//எச்சரிக்கை :: இந்த கொடுமை தொடரும் ...::))//

தொடரட்டும், சுகமான கொடுமை இது.

என் நடை பாதையில்(ராம்) said...

ஆனால் எப்போதும் என்னருகில் உட்க்காரும் பெண்களை அவர்களறியாது பார்ப்பேன் (தவறான கண்ணோட்டத்தில் அல்ல) எப்போதும் என்னை கவர்வது பாதங்க‌ளும் அதன் தூய்மையும். நேர்த்தியாய் வெட்டப்பட்ட நகங்கள், அழுக்கில்லாது, வெடிப்புகளற்ற பாதங்கள் கொண்ட பெண்கள் எனக்கு கற்றுத்தந்தது சுத்தமான பாதங்கள் முகத்தை காட்டிலும் அழகு என்பதை.

நம் இருவருக்கும் ஒரே ரசனை....

sathishsangkavi.blogspot.com said...

//எச்சரிக்கை :: இந்த கொடுமை தொடரும் ...::))//

தொடரட்டும், தொடரட்டும் அழகான, ரசிக்கும் கொடுமைகளைப் பார்க்கத்தானே
நாங்க இருக்கிறோம்..........

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........

S.A. நவாஸுதீன் said...

///உடனே அந்த கவலை எனக்கு தொற்றிக்கொண்டு விடும்... என்னமோ தெரியவில்லை முகங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த அவஸ்த்தைதான்.///

ரொம்ப நல்ல விஷயம்தான். இதுதான் மற்றவருக்கு உதவும் தன்மையை இயல்பாகவே தோற்றுவிக்கும்.

தொடருங்க. படிக்க நாங்க இருக்கோம்.

Paleo God said...

றமேஸ்-Ramesh said...
////அண்ணனோ, தம்பியோ, தந்தையோ அவர்களை ஏற்றி விட வரும்போது அவர்கள் முகத்தில் தெரியும் ஒரு கவலை எங்கேயும் எப்போதும் ஒரே மாதிரியான பய ரேகைகள். இத்தன ஆம்பளைங்க இருக்காங்களே எம் பொண்ணு எப்படி தனியா ராத்திரி போகுமோ என்பது போல..உடனே அந்த கவலை எனக்கு தொற்றிக்கொண்டு விடும்... என்னமோ தெரியவில்லை முகங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த அவஸ்த்தைதான்.////

உங்களைப்படிச்சுட்டேன்.. நம்ம கட்சிதாங்க சங்கர் வாழ்த்துக்கள்
ரசித்தேன்//

வாங்க றமேஷ் .. நீங்களுமா ... !!?? நன்றி.

Paleo God said...

D.R.Ashok said...
you started well... :)//

எல்லாருக்கும் ஸ்டார்ட்டிங் TROUBLE எனக்கு.. FINISHING..:(( அதனாலதான் கொடும தொடரும் ....::))

Paleo God said...

seemangani said...
நானும் நிகழ்வுகளின் நாடகம் ரசிப்பவன்... அழகான தொரு பகிர்வு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... பாலா.//

நன்றி கனி என்னை ஷங்கர் என்றே கூப்பிடுங்கள்... (பாட்டம் ஆங்கிள் ல படம் எடுத்து கூலிங் க்லாசோட போஸ் குடுக்கறதுனால நான் சிவாஜி ரஜினி இல்ல .. ஆனா அந்த படம் எடுத்த டைரக்டர் பேர் என்னுது இல்லன்னு சொல்ல மாட்டேன்... கருத்து உபயம் திரு.அண்ணாமலையான்:)) )

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
//எச்சரிக்கை :: இந்த கொடுமை தொடரும் ...::))//

தொடரட்டும், சுகமான கொடுமை இது//

சிக்கிட்டீங்களே சார்..சிக்கிட்டீங்களே...:))

நன்றி நண்பரே... நான் வந்த பாதையில் சில ரசித்த எனை மாற்றிய சில நிகழ்வுகள் பதிய ஆசை.

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்) said...
ஆனால் எப்போதும் என்னருகில் உட்க்காரும் பெண்களை அவர்களறியாது பார்ப்பேன் (தவறான கண்ணோட்டத்தில் அல்ல) எப்போதும் என்னை கவர்வது பாதங்க‌ளும் அதன் தூய்மையும். நேர்த்தியாய் வெட்டப்பட்ட நகங்கள், அழுக்கில்லாது, வெடிப்புகளற்ற பாதங்கள் கொண்ட பெண்கள் எனக்கு கற்றுத்தந்தது சுத்தமான பாதங்கள் முகத்தை காட்டிலும் அழகு என்பதை.

நம் இருவருக்கும் ஒரே ரசனை....//

HEY RAAAAMMMMMMM::)))))))

Paleo God said...

Sangkavi said...
//எச்சரிக்கை :: இந்த கொடுமை தொடரும் ...::))//

தொடரட்டும், தொடரட்டும் அழகான, ரசிக்கும் கொடுமைகளைப் பார்க்கத்தானே
நாங்க இருக்கிறோம்..........

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..........///

நன்றி சங்கவி தொடர் வருகைக்கும் உற்சாகத்துக்கும்..::))

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
///உடனே அந்த கவலை எனக்கு தொற்றிக்கொண்டு விடும்... என்னமோ தெரியவில்லை முகங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த அவஸ்த்தைதான்.///

ரொம்ப நல்ல விஷயம்தான். இதுதான் மற்றவருக்கு உதவும் தன்மையை இயல்பாகவே தோற்றுவிக்கும்.

தொடருங்க. படிக்க நாங்க இருக்கோம்//

அப்ப முடிவே பண்ணிட்டீங்க... ::))

நன்றி நவாஸ் தொடர் வருகைக்கு .. வாழ்த்துக்கு.:)

CS. Mohan Kumar said...

அழகா எழுதிருக்கீங்க நண்பா எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்து படிச்சா மாதிரி இருந்தது பெண்கள் பற்றி எழுதிய போது (பாராட்டா தான் சொல்றேன்)