பலா பட்டறை: நிகழ்வுகளின் அன்னியம்...

நிகழ்வுகளின் அன்னியம்...

பின்கழுத்தின் வெம்மையினில்

எண்ணிரெண்டு த்வாரங்களின்

வெப்பக்காற்றுபொறித்து சிவந்திருந்த

முக்கோண தின்பண்டம்மூக்கொழுகி வளையத்தில்

உடல் நுழைக்கும்

சாகச யாசக சிறுமிதொடர் வண்டிப்பயணத்தில்

எட்டுத்திக்கும் ஏதேதோ

சப்தங்கள்என இவை

எதுவும் அந்நியமாய்

உணரும் எனக்குஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..

- பலா பட்டறைகீற்று வில் வெளிவந்த எனது கவிதை. 
.

22 comments:

சி. கருணாகரசு said...

கவிதை மிக அருமைங்க.

seemangani said...

நினைவுகள் அருமை...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Sangkavi said...

கவிதை நச்சுன்னு இருக்கு.....

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

ரமேஷ் said...

மிக அருமை

அன்புடன் மலிக்கா said...

/எண்ணிரெண்டு த்வாரங்களின்/

எண்ணிரெண்டு தவாரங்களின்
என்று வரனுமென்று நினைக்கிறேன்

/ரொம்ப இடைவெளி விடாமல் நான்கு வரிகளென்றால் அதற்கு தகுந்தார்போல் இடைவெளியிட்டால்
இன்னும் சிறப்பாகத்தெரியும்/

தவறாகசொல்லியிருந்தால் பொருந்திக்கொள்ளவும்..

கவிதை மிகவும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்..இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

S.A. நவாஸுதீன் said...

///ஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..///

அருமை அருமை பலா பட்டறை.

கீற்றில் பிரசுரமானதற்கும் பாராட்டுக்கள்

velkannan said...

கவிதை மிக அருமைங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

kamalesh said...

அட்டகாசம் நண்பா
வாழ்த்துக்கள்...மற்றும் கிற்றுவில் வந்ததற்கு
பாராடுக்கள்...

ருத்ர வீணை said...

கவிதை மிக அருமை..

D.R.Ashok said...

//பொறித்து சிவந்திருந்த
முக்கோண தின்பண்டம்// :)

Excellent கவிதை keep it up.

சின்னதா சொல்லி அதுற வெச்சிட்டீங்க.

பலா பட்டறை said...

சி. கருணாகரசு said...
கவிதை மிக அருமைங்க//

நன்றி கருணா சார்.. ::))

பலா பட்டறை said...

seemangani said...
நினைவுகள் அருமை...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..//

வாங்க கனி பலூன வெச்சு ஒரு கவிதா பின்னி பெடலெடுத்துட்டீங்க ...:)) நன்றி.

பலா பட்டறை said...

Sangkavi said...
கவிதை நச்சுன்னு இருக்கு.....

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........//

வாங்க சங்கவி ... நன்றி.

HAPPY NEW YEAR TO YOU TOO..:)

பலா பட்டறை said...

ரமேஷ் said...
மிக அருமை//

வாங்க ரமேஷ் நன்றி ..::))

பலா பட்டறை said...

அன்புடன் மலிக்கா said...
/எண்ணிரெண்டு த்வாரங்களின்/

எண்ணிரெண்டு தவாரங்களின்
என்று வரனுமென்று நினைக்கிறேன்//

த்வாரம் = நாசி துவாரம் அப்படித்தான் பொருள் கொள்ளுமென போட்டிருக்கிறேன் சகோதரி./ரொம்ப இடைவெளி விடாமல் நான்கு வரிகளென்றால் அதற்கு தகுந்தார்போல் இடைவெளியிட்டால்
இன்னும் சிறப்பாகத்தெரியும்/

கீற்று தளத்திலிருந்தே COPY PASTE செய்ததால் இடைவெளி அதிகமாயிருக்கலாம்.. சுட்டி காட்டியதற்கு நன்றி.::))

தவறாகசொல்லியிருந்தால் பொருந்திக்கொள்ளவும்..//


எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தவறெனில் சுட்டிக்காட்டலாம்.... தவறே இல்லை ::))

கவிதை மிகவும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்..இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)) நன்றி.

பலா பட்டறை said...

S.A. நவாஸுதீன் said...
///ஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..///

அருமை அருமை பலா பட்டறை.

கீற்றில் பிரசுரமானதற்கும் பாராட்டுக்கள்//

மிக்க நன்றி நவாஸ் .. என்னமோ உங்கள் கைகள் சேர்ந்த அந்த படம் எல்லாம் சரி ஆயிடும்க ஏன் கவலை படறீங்க என்று எப்போதும் யாருக்கோ சொல்வது போலவே எனக்குத் தோன்றுகிறது. நன்றி.:)

பலா பட்டறை said...

velkannan said...
கவிதை மிக அருமைங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி வேல்கண்ணன்... உங்கள் கவிதையும் படமும் நல்லா இருக்குங்க.. ::))
புத்தாண்டு வாழ்த்துக்கள்..::))

பலா பட்டறை said...

kamalesh said...
அட்டகாசம் நண்பா
வாழ்த்துக்கள்...மற்றும் கிற்றுவில் வந்ததற்கு
பாராடுக்கள்.//

நன்றி கமலேஷ்... :))

பலா பட்டறை said...

ருத்ர வீணை said...
கவிதை மிக அருமை.///

நன்றி உங்க கவிதைய விடவா ...அசத்தறீங்க..:))

பலா பட்டறை said...

D.R.Ashok said...
//பொறித்து சிவந்திருந்த
முக்கோண தின்பண்டம்// :)

Excellent கவிதை keep it up.

சின்னதா சொல்லி அதுற வெச்சிட்டீங்க.//

மிக்க நன்றி அஷோக் ... :))

றமேஸ்-Ramesh said...

//ஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..//

பிடிச்சிருக்கு நண்பா..

தூர நீ போனாலும்
தொலைந்துபோவதில்லை
நினைவுகளில்
தொடர்ந்திருக்கிறாய்

பலா பட்டறை said...

றமேஸ்-Ramesh said...
//ஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..//

பிடிச்சிருக்கு நண்பா..

தூர நீ போனாலும்
தொலைந்துபோவதில்லை
நினைவுகளில்
தொடர்ந்திருக்கிறாய்//

thanks றமேஸ்..::))