பலா பட்டறை: சேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்டு...

சேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்டு...

சென்ற சனிக்கிழமையன்று எனது சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் 
என்ற கவிதையை பதிவிட்டிருந்தேன்.. வழக்கமாய் எனது கவிதையை ரசித்து பின்னூட்டமிடும் நண்பர்கள் கமலேஷ், ரிஷபன் மற்றும் கல்யாணி சுரேஷ் , சே. குமார் போன்றவர்களுடன் ஒரு மலையாள நண்பரின் பின்னூட்டமும் வந்திருந்தது KPS என்பவர் என்னுடைய கவிதையை பற்றி அவரது வலை பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும்.. அதை கண்டு என் வலைப்பக்கம் வந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.. அவரிடம் திரு.KPS  அவர்களின் வலைப்பக்க விபரம் சேகரித்து என்னை பற்றி குறிப்பிட்டிருந்த அந்த பதிவை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது...திரு.KPS தமிழ் கவிதைகளின் ரசிகர் என்பது புரிந்தது.

 மேலும் எனது கவிதையை அவரது குரலிலேயே பதிவு செய்து அவரது வாசகர்களுக்கு கேட்கும்படி செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. போன மாதம் தான் நான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்.. பல நண்பர்கள் எனது பதிவையும், கவிதைகளையும் ரசித்து பின்னூட்டமிடும்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும். எனது மனதில் தீரா ஆசையாய் இருக்கும் எழுத்து மற்றும் கவிதை தாகத்துக்கு வலைத்தளம் ஒரு களமாய் அமைந்தது.. முகம் தெரியா நண்பர்கள் வெளிப்படுத்தும் அன்பு மேலும் என்னை எழுத தூண்டும்... திரு.KPS போன்றவர்கள் வேற்று மொழியிலிருந்தாலும் தனக்கு பிடித்த பதிவை அவரது வலை பக்கத்தில் பதிந்ததோடு தன் குரலில் அதனை சக பதிவர்களுக்கு கொண்டு செல்லவும் முயன்றிருக்கிறார்.. ஒரு நண்பரின் பின்நூட்டத்திர்க்காக என் கவிதையை அப்படியே மலையாளத்தில் எழுதியும் காட்டியிருப்பது கவிதை மேலுள்ள அவரின் தீராத மோகத்தை வெளிப்படுத்துகிறது... என்னின் விட சிறப்பான நல்ல கவிதைகள் வலை பூவில் உண்டு அவைகளும் அவரால் மலையாள வலை உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் கவிதை வீச்சு பரவ வேண்டும் என்பதே என் ஆசை.

திரு KPS மற்றும் எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.         1 comments: