பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்

சின்ன சின்ன கவிதைகள்


வாழ்க்கை
இடதும், வலதுமாகவே
இருக்கிறது 
வாழ்க்கை .

நன்றாய்
திரும்பி நின்று 
வலதை இடமாகவும்.. 
இடதை வலமாகவும்..

மாற்றிவிட
முனைந்த  போதும் 

இடதும் வலதுமாகவே
இருக்கிறது 
வாழ்க்கை. 


மழை

என்னதான் 
முகம் சுளித்து ..

சலித்த வார்த்தைகள் 
உதித்தபோதும் 

என் தாகத்திற்கான
தண்ணீரை 

பூமியில் எங்கோ 
எனக்கென 

எப்போதும் சேமித்து 
வைத்தே போகிறது.. 

மழை...  

9 comments: