பலா பட்டறை: மெரினா..

மெரினா..





எத்தனையோ முறை மெரினா கடற்கரைக்கு போயிருக்கிறேன்.

அப்போதெல்லாம் பாரதிதாசன் சிலைக்கு பின்னால் சிறிய மரமும், தரையில் உட்கார வசதியாய் புற்களும், அருகில் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களும், ஒரு பெரிய கிணறும் இருக்கும். தூரத்தில் வரிசையாய் துறைமுகத்திற்கு செல்ல நங்கூரமிட்டிருக்கும்  கப்பல்களும், பரவலாய் மணலில் ஒட்டிக்கொன்டு ஜோடியாய் காதலர்களும் என‌ கலவையான ஒரு சூழலில் ராஜ புகை விட்டுக்கொண்டு நன்பர்களுடன் கூடிப்பேசிய கதைகளும் சென்ற சனிக்கிழமை என் தம்பியுடன் சென்றபோது மீண்டும் நினைவில் வந்தது.

அந்த இடம் முன்பு போல இப்போது இல்லை. எல்லாமும் மாறிவிட்டிருந்தது. நல்ல கூட்டம் வழக்கம் போல, 5 ஆண்டுகளுக்கு முன் சுனாமி வந்த அதே நாளில் மகிழ்ச்சியுடன் பெரும்பாலான மக்கள் ஆனால் சொந்தங்களை தொலைத்த எத்தனை பேர் அதில் இருந்தார்கள் தெரியவில்லை.

சுனாமி வந்த பிறகு மெரினாவை நான் வெறுக்கத்தொடங்கி இருந்தேன். சுனாமி வந்த மறுநாள் லைட் ஹவுஸ் பின் புறமிருந்த மீனவ இளைஞர்களுடன் எனக்கு பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. மெரினா மொத்தமும் காவல் காக்கப்பட்டு வெறும் காக்கைகள் எதையோ கொத்தி தின்று கொன்டிருந்தன வண்டியில் மெதுவாய் அந்த ஆளற‌வமற்ற கரையை பார்த்துகொண்டே வந்த போது லைட் ஹவுஸ் அருகில்தான் கடலை சற்று அருகில் காண முடிந்தது.

 கட்டுமரங்க‌ளில் வெறித்து உட்கார்ந்திருந்த அவர்களிடம் மெதுவாய் என்ன ஆச்சு? என்ற போது சுனாமி வந்தபோது அவர்கள் கடலில் இருந்ததாகவும் கடல் நீர் நிறம் மாறியதாகவும் கூட்டமாய் வரும் சில மீன் வகைகள் அப்படி இருக்கும் என்பதால் அவர்களுக்கு அது வித்தியாசமாய் தெரியவில்லை என்றும் கரையில் கண்ட காட்சிகளே கலவரப்படுத்தியதாகவும் விள‌க்கினார்கள்.

அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் வரை வந்த பேறலை நிறைய உயிர்களை பலி வாங்கியதை சொல்லக்கேட்டதும் இன்னும் கடற்கரையின் மீது ஏனோ வெறுப்பு கூடியது.

எவ்வளவு ஆசையாய் எத்துனை முறை உன்னைக்காண வந்திருக்கிறேன், இப்படியா வஞ்சிப்பாய்... இப்போது சாதுவாய் இருந்தாலும் உன் மீதான என் காதல் முறிந்து விட்டது. சீ போ என்று வந்தவந்தான். அதன் பிறகு பல முறை அந்த பக்கம் போய் இருந்தாலும் மண்லில் கால் வைத்ததில்லை. கடற்கரை சாலையின் அருகில் வண்டியில் அமர்ந்த படியே சிறிது நேரம் வெறித்து விட்டு கிளம்பி விடுவேன். எத்துனையோ முறை என் குழந்தைகள் 'பீச்சுக்கு போலாம்ப்பா' என்று கேட்ட போதும் ஏதேதோ சாக்கு சொல்லி தவிர்த்தே வந்திருக்கிறேன் இன்று வரை.


புதிதாய் கல்யாணம் முடிந்து வந்த தம்பியின் விருப்பத்திற்காய் சனிக்கிழமை சென்ற போது அலையில் கால் நனைக்கும் படி ஆகிவிட்டது. அன்றும் அலைகள் மிகவும் மூர்க்கமாய்த்தான் இருந்தது. ஒதுங்கியே இருந்தாலும் என் உடல் முழுவதும் நனைத்துச்சென்றது அலைகள்.

பசியா அல்லது ஊடலா தெரியாமல் ..மீண்டும் ஆர்பரித்து நீ வந்தால் நிராயுதபாணியாய் நான் எப்போதும் போல உன் முன்பு நிற்கிறேன் என்று மனதில் எண்ணியபடியே திரும்பி பார்த்த போது மக்களும், கடலுக்கான காதலும் அப்படியே இருப்பதை உணர்ந்தேன். துருப்பிடித்த ஒரு எச்சரிக்கை பலகை சில வருடங்களுக்கு முன்பு அலையில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை வகை படுத்தி எச்சரித்துக்கொண்டிருந்தது. திசைகாட்டி என்ற நண்பரின்  வலைப்பக்கம் படித்தபோது இதை எழுத தோன்றியது. அன்று நான் எடுத்த சில படங்கள்.










காதலை சொன்ன எனக்கு கடலும் கரையும் இப்போதும் சுடுகாடாய்தான் தெரிகிறது.  



19 comments:

PPattian said...

எத்தனை துன்பங்கள் தந்தாலும் இயற்கையை வெறுக்க முடியுமா நண்பரே!!

ஜெட்லி... said...

//பசியா அல்லது ஊடலா தெரியாமல் //

வித்தியாசமான பார்வை அண்ணே...

ப்ரியமுடன் வசந்த் said...

நிறைவான பகிர்வு...

படங்கள் பளிச்சுன்னு எடுத்துருக்கீங்க...!

சீமான்கனி said...

நல்ல பகிர்வு நண்பரே...எனக்கும் அந்த நாள் நியாபகம் வந்து நெஞ்சில் நிற்கிறது...அலையின் ஆட்டம் முடிந்தது முதல், நான் நாள் முழுதும் அங்குதான் இருந்தேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல பதிவு நண்பரே.

thiyaa said...

அருமையான,வித்தியாசமான பகிர்வு

S.A. நவாஸுதீன் said...

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் இனியும் வராதிருக்கனும்.

நல்ல இடுகை பலா பட்டறை

Thenammai Lakshmanan said...

//பசியா அல்லது ஊடலா தெரியாமல் //

அருமை பலா பட்டறை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Paleo God said...

PPattian : புபட்டியன் said...
எத்தனை துன்பங்கள் தந்தாலும் இயற்கையை வெறுக்க முடியுமா நண்பரே!//

வாங்க புபட்டியன் :)

உண்மைதான் நண்பரே.. இருப்பினும் முன்பிருந்த கடல் காதல் இப்போது இல்லை :((

Paleo God said...

ஜெட்லி said...
//பசியா அல்லது ஊடலா தெரியாமல் //

வித்தியாசமான பார்வை அண்ணே..//

வாங்க ஜெட்லி. நன்றி..::)) கலக்கறீங்க உங்க பக்கத்துல...வாழ்த்துக்கள்..:))

Paleo God said...

பிரியமுடன்...வசந்த் said...
நிறைவான பகிர்வு...

படங்கள் பளிச்சுன்னு எடுத்துருக்கீங்க...!//

நன்றி வசந்த்:)) இன்னும் பல படங்களை பதிவில் வைக்க ஆசை ..பார்க்கலாம்.::))

Paleo God said...

seemangani said...
நல்ல பகிர்வு நண்பரே...எனக்கும் அந்த நாள் நியாபகம் வந்து நெஞ்சில் நிற்கிறது...அலையின் ஆட்டம் முடிந்தது முதல், நான் நாள் முழுதும் அங்குதான் இருந்தேன்..//

வாங்க கனி... எல்லோருக்கும் துயரம் குடுத்த நாள் அது..:((

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
நல்ல பதிவு நண்பரே.//

நன்றி நண்பரே ..:

Paleo God said...

தியாவின் பேனா said...
அருமையான,வித்தியாசமான பகிர்வு//

மிக்க நன்றி தியாவின் பேனா...

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் இனியும் வராதிருக்கனும்.

நல்ல இடுகை பலா பட்டறை//

நன்றி நவாஸ்... அதேதான் என் பிரார்த்தனையும்...

Paleo God said...

thenammailakshmanan said...
//பசியா அல்லது ஊடலா தெரியாமல் //

அருமை பலா பட்டறை//

நன்றி சகோதரி .

உங்களுக்கும், எல்லோருக்கும் ..

புத்தாண்டு வாழ்த்துக்கள் ::))

பனித்துளி சங்கர் said...

(((((((((((( அந்த இடம் முன்பு போல இப்போது இல்லை. எல்லாமும் மாறிவிட்டிருந்தது. நல்ல கூட்டம் வழக்கம் போல, 5 ஆண்டுகளுக்கு முன் சுனாமி வந்த அதே நாளில் மகிழ்ச்சியுடன் பெரும்பாலான மக்கள் ஆனால் சொந்தங்களை தொலைத்த எத்தனை பேர் அதில் இருந்தார்கள் தெரியவில்லை. )))))))))))))))

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான வார்ப்பு வாழ்த்துகள் நண்பரே !!!

Unknown said...

அன்பு நண்பனே மெரீன கடற்க்கரையை சுனாமி தாக்கிய போது ரொம்பம் வருத்தப்பெட்டேன். இப்போது மீண்டும் கடந்த ஏப்ரில் மாதம் மெரீனாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தேன். அப்போது என்னுடை கைப்பேசியில் எடுத்த வீடியோ எனது ப்ளோகில் போட்டு இருந்தேன். மலையாளம் தெரியவில்லை என்றாலும் அந்த வீடியோ பார்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://kpsukumaran.blogspot.com/2010/04/blog-post_08.html

Unknown said...

With Regards,
K.P.Sukumaran,
Malayalam Blogger.