பலா பட்டறை: வலையில் கிடைத்த சீனத்து தேவதை

வலையில் கிடைத்த சீனத்து தேவதை

வலையில் கிடைத்த சீனத்து தேவதை

முழிப்பு முதல்
தூக்கம் வரை
எல்லாம் பகிர்ந்தோம்

வார்த்தைகள் போலவே
உன் குரலும் இனிமையா
என்றேன்..

அழைத்து பார்த்து
நீயே சொல் என்றாள்

ஹலோ சொல்ல
செல்லில் அழைத்தேன்
எடுத்தவுடனே
அவள் குரல்தான்

தேன்போல குரலில்

'வை'

என்றாள்..
வைத்து விட்டேன்..

வாயில் வரும்
ஓசைகள் மொழி
என்று ஆனபிறகு

மனனம் செய்து
மரத்துப்போன மூளை
மெதுவாய் தான்
தெரிந்துகொண்டது
'வை' என்பது
அவங்க ஊர்
ஹலோ வாம்

தாய் மொழிகளால்
தொலைத்த காதலை
பொது மொழியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

12 comments: